Sunday 31 May 2015

தொழிற்துறையிலும் முத்திரை பதித்த நாடார் சமுதாயம்

நாடார் சமுதாய வளர்ச்சி அரசியலில் மட்டும் அல்ல. மாறாக தொழிலுமே திட்டமிட்டு தடுக்கப் படுகிறது. ஒரு காலத்தில் நம் சமுதாயத்தினரிடம் இருந்த குளிர்பான தொழில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்கு வர அனுமதிக்கப் பட்டு அவர்கள் குள்ளநரி தந்திரமாக காலி பாட்டில்களை விலை கொடுத்து வாங்கி உடைத்து அதன் வளர்ச்சியை திட்டமிட்டு தடுத்தார்கள். தற்போது காளிமார்க் நிறுவனம் பிளாஸ்டிக் பாட்டிலுக்கும் டின்னுக்கும் மாறி பவண்டோவாக உள்ளது.

இதே நெருக்கடி தற்போது நம் சமுதாயத்தை சேர்ந்த வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்பப் படுகிறது. இதற்கென கற்பூர புத்தி உள்ள சில ஓய்வு பெற்ற அலுவலர்கள் பன்னாட்டு கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பொய் புகார், பொய் தகவல் பரப்புதல், மீடியாக்களை எதிராக்குதல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். இதனால் நீதிமன்றங்கள் கூட நியாயமான வழக்கை விசாரிக்கவே பயப்படும் நிலை உள்ளது. கடந்த 25 வருடங்களாக நம் சமுதாயத்தை சேர்ந்த வி.வி.மினரல் தங்களது அயராத உழைப்பால் உலகத்திலேயே கார்னட் உற்பத்தியில் நம்பர் ஒன் என்ற நிலையை பெற்றுள்ளார்கள். இவர்களின் போட்டியை சமாளிக்க முடியாத பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள சிலரையே கையில் எடுத்து நம் சமுதாய நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் வீரமும் நேர்மையும் நம் சமுதாயத்தின் உடன் பிறந்த குணம் என்பதால் எந்த நிலையிலும் சரண் அடையாமல் நியாயமாக எதிர்த்து போராடி வருகிறார்கள். பல்வேறு முறை மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வி.வி.மினரல் மீது எந்த தவறும் இல்லை என்பதை அறிக்கை செய்துள்ளார்கள். அவை http://www.beachminerals.org/447/இணையதளத்தில் உள்ளது. உள்ளது. இந்த கடலோர கனிமங்களை பொருத்த வரையில் அரசுக்கு அகில இந்திய அளவில் அதிகமான ராயல்டியும், அதிகமான ஏற்றுமதி வரியும் செலுத்தும் ஒரே நிறுவனம் நம் சமுதாய வி.வி.மினரல் நிறுவனம்.

இதனால் தான் இந்திய அரசு கடந்த 21 வருடங்களாக இந்தியாவிலேயே சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வி.வி.மினரல் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. நம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் அல்லாமல் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தொழில் நுட்ப கல்வி கற்றிருந்தால் எப்போது வேண்டுமானாலும் வேலையில் போய் சேர்ந்து கொள்ளலாம்.

இராதாபுரம் தாலுகா பெரும்பான்மை நாடார் சமுதாயம் நிறைந்த மழை மறைவு பிரதேசம். எனவே விவசாயம் கிடையாது. கூடன்குளம் அணுமின் நிலையமும், மகேந்திரகிரி ராக்கெட் ஆராய்ச்சி நிறுவனமும் இதர மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆயிரகணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரே நிறுவனம் நம் சமுதாயத்தை சேர்ந்த வி.வி.மினரல் நிறுவனம்.

சமுதாய பணியிலும் தொழிலாளர் நலனிலும் அக்கரையோடு இருப்பதால் இன்று வரை இங்கு எந்த தொழிற்சங்கமும் கிடையாது. அனைத்து தொழிலாளர்களும் சகோதர பாவத்தோடு பழகி வருகிறார்கள். இவர்களது சமூக தொண்டு பற்றி தொழிலாளர்களே www.southernmines என்ற இணைய தளத்தில் பாராட்டுகிறார்கள்.

ஒரு காலத்தில் ஓட்டல் தொழிலில் ரெட்டியார்களும் பிராமணர்களும் மட்டுமே கோலோய்ச்சி வந்தார்கள். அதனை முறியடித்து நம் சமுதாயத்தை சேர்ந்த சரவணபவன் திரு.இராஜகோபால் நாடார் அவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹோட்டல் திறந்து நம் சமுதாய பெருமையை நிலை நாட்டினார்கள்.

தொலைகாட்சி துறையில் ஒரு சமயத்தில் அரசியலில் உள்ளவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. முதன் முதலில் நம் சமுதாயத்தை சேர்ந்த திரு. கலைகோட்டு உதயம் தமிழன் தொலைக்காட்சியை தொடங்கினார். பிறகு நம் சமுதாயத்தை சேர்ந்த திரு.பாலசுப்பிரமணிய ஆதித்தனார் தந்தி தொலைகாட்சியையும், துபாயில் எப்.எம். ரேடியோவும் தொடங்கினார். அதே வரிசையில் நம் சமுதாயத்தை சேர்ந்த வி.வி.மினரல் திரு.வைகுண்டராஜன் நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

கம்யூட்டரில் திரு. சிவன் நாடார். கல்வி கண் திறந்ததில் திரு. வெள்ளசாமி நாடார், திரு.சி.பா.ஆதித்தனார் மற்றும் திரு. வன்னியபெருமாள் நாடார் போல் தொழிற்துறையில் நம் சமுதாயத்தை சேர்ந்த திரு.எஸ்.வைகுண்டராஜன் நாடார் அவர்களின் வி.வி.மினரல் நிறுவனம் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாகவும் தொடர்ந்து கடந்த 21 வருடங்களாக இந்திய அரசின் விருதையும் பெற்று வருவது கல்வி கண் திறந்த திரு.காமராஜர் அவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என பட்டிதொட்டி எங்கும் கல்வி சாலை அமைத்ததால் தானே !!!

Link : http://www.beachminerals.org/447/

No comments:

Post a Comment