Sunday 31 May 2015

நிலநடுக்கமும் சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளும்

நிலநடுக்கமும் சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளும்

கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த நில நடுக்கம் 7000 உயிர்களுக்கு மேல் பலி வாங்கியது. பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் சுமார் 20000 நபர்களுக்கு மேல் மரணம் அடைந்தார்கள்.

பூகம்பம் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நடந்தால் அது சுனாமியாகி கடற்கரை அருகில் உள்ள மக்களையும் குடியிருப்புகளையும் பாதிக்கிறது. 2004-ம் வருடம் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்தியா, இலங்கை நாடுகளில் சுனாமி ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சராசரியாக ஆண்டுக்கு 5 இடங்களில் நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. 2004 சுனாமிக்கு பிறகு இந்தியாவிலும் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு (Disaster Management Committee) என ஒரு அமைப்பு இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாதிரி பேரிடர் மீட்பு குழு பல்வேறு நாடுகளில் அமைக்கப் பட்டுள்ளன. நேபாள நிலநடுக்கத்திற்கும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மீட்புகுழுவினர் சென்றனர். இது மனித நேய அடிப்படையில் அனைத்து நாடுகளாலும் மேற்கொள்ளப் படுகின்றன. நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியும் நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழக மக்களுக்கு அவ்வப் போது செய்திகளாக வெளியிட்டது.

நேபாள நிலநடுக்கம் நமக்கு படித்து தந்த பாடம் என்னவென்றால் எப்போது நில நடுக்கம் வரும் என்பது யாராலும் உறுதியாக கூற முடியாது. எனவே நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்பட்டால் நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை பாதுகாப்பு இனங்கள் அமெரிக்காவில் சர்வதேச பேரிடர் மேலாண்மை மீட்புகுழு தலைவர்  திரு. டக் கோப் என்பவரால் குறிப்பிடப் பட்டு உள்ளது. இது வரை அவர் 60 நாடுகளில் 875 நொறுங்கிய கட்டிடங்களில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களிலும் மற்றும் ஐநா சபையின் பேரிடர் நிவாரண குழு நிபுணராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றி 1985-ல் இருந்து இத்துறையில் பணியாற்றி வருகிறார். முதன் முதலில் மெக்சிகன் நகரில் நடந்த 1985-ல் நடந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்ட பள்ளியில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் அனைத்து மாணவர்களும் வகுப்பறையின் மேஜைக்கு கீழே பதுங்கி உள்ளார்கள். பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து மேஜையோடு சேர்த்து முழுவதும் நசுக்கப் பட்டு விட்டார்கள். அவர்கள் மேஜைக்கு வெளியே மேஜையை ஒட்டி பதுங்கி இருந்தால் மேற்கூரை மேஜையில் விழுந்து நசுக்கும் போது தரை மேற்கூரையின் திண்ணம் இரண்டும் இரண்டு கோணங்களாக இருந்து முக்கோண வடிவில் அந்த மாணவர்கள் பாதுகாக்கப் பட்டு இருப்பார்கள் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.


மேஜையின் மையப் பகுதி கான்கிரிட்டால் நசுக்கப்படுவதையும் ஆனால் மேஜையை ஒட்டி உள்ள பகுதியில்
ஒரு முக்கோண வடிவ அமைப்பு உருவாவதால் உயிர் சேதம் இல்லாமல் இருக்கும் என்பதையும் காண்பிக்கும் படம்

எனவே நில நடுக்கம் ஏற்பட்டால் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி விடுவது மிகுந்த பாதுகாப்பானது.

அதற்கு வாய்ப்பு இல்லா விட்டால் கட்டிடத்தின் உள்ளே உள்ள பொருட்களை ஒட்டி இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கினாலும் பாதுகாக்கப் படுவார்கள்.

அமெரிக்காவின் சர்வதேச பேரிடர் மேலாண்மை மீட்பு குழு தலைவர் நிலநடுக்க பாதுகாப்பிற்காக கூறும் சில வழிமுறைகள்

1)        கட்டிடத்தின் உள்ளே உள்ள பொருட்களுக்கு கீழே பதுங்க கூடாதுமேஜை மற்றும் கார்களுக்கு கீழே பதுங்குபவர்கள் இடிபாடுகளால் நசுக்கப் படுகிறார்கள்.


கார் நசுங்கி மரணம்

2)        பூனை நாய் முதலியவை ஏதாவது ஒரு பொருளை ஒட்டி படுத்திருப்பதால் அவை நசுக்கப் படுவதில்லை. நில அதிர்ச்சியில் சிறு குழந்தைகளும் இவ்வாறு உருட்டப்பட்டு ஒரு பெரிய பொருளை ஒட்டி தள்ளப்படுவதால் அவர்களும் நசுக்கப் படுவதில்லை. எனவே படுக்கையை ஒட்டி அல்லது சோபாவை ஒட்டி அல்லது ஏதாவது பெரிய பொருட்களை ஒட்டி இருந்தால் அந்த பொருட்கள் ஓரளவு நசுங்கும். ஆனால் ஒட்டி இருக்கும் நபர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப் படும்.

பொருட்களை ஒட்டி இருந்தால் முக்கோண வடிவம் ஏற்பட்டு பாதுகாக்கப் படும் என்பதற்கான அடையாளம்



பெரிய பொருளை ஒட்டி இருந்தால் பொருள் சேதமாகும்.                            மேஜை தடுப்பு இருந்ததால் அப்பகுதி இடைவெளியோடு

உயிர் ஆபத்து குறைவு என்பதை காட்டும் வரைபடம்                                                             பாதுகாக்கப்பட்டதையும்  இதர பகுதி நசுக்கப் பட்டதையும் காட்டும் இடிபாடு

3)        நிலநடுக்கத்திற்கு மரத்தால் ஆன கட்டிடமே பாதுகாப்பானது. மரம் அசையும் தன்மை உள்ளதால் நிலநடுக்கத்தின் போது அசைந்து கொடுத்து இடிந்து விழாமல் இருக்கும். கட்டிடம் நொறுங்கி விழுந்தாலும் பாதுகாப்பிற்கு ஏராளமான இடைவெளிகள் மரத்தால் இருக்கும். அவை நொறுங்கி விழும் போது செங்கள் ஓடு முதலியவை நொறுங்கி விழுந்து சில காயங்களை ஏற்படுத்தும். ஆனால் கான்கிரீட் சிலாப் போல் மரணத்தை ஏற்படுத்தாது.





            


4)        இரவில் படுக்கையில் தூங்கும் போது நிலநடுக்கம் ஏற்பட்டால் படுக்கையை ஒட்டி கீழே உருண்டு படுத்து விட வேண்டும். படுக்கையை சுற்றி நான்கு புறமும் நில நடுக்க இடிபாடுகளில் ஒரு பாதுகாப்பு முக்கோணம் உருவாகும். எனவே அது பாதுகாக்கும். (நட்சத்திர ஹோட்டல்களில் இவ்வாறு அறிகுறிகள் கதவின் பின்பக்கத்தில் எழுதப் பட்டு இருப்பதால் நிலநடுக்கத்தில் ஹோட்டல் தங்குபவர்களின் உயிர் சேதம் குறைவு.)


5)        நில நடுக்க நேரத்தில் கட்டிடத்தில் இருந்து கதவு அல்லது ஜன்னல் வழியாக உடனே வெளியேற முடியாவிட்டால் உருண்டு சோபா அல்லது பெரிய சேர் அல்லது கட்டில்  அல்லது மிகப் பெரிய பொருள் ஆகியவற்றை ஒட்டி சுருண்டு படுத்துக் கொள்வது அல்லது பாதுகாப்பான முறையில் அமர்வது உயிர் சேதத்தை தவிர்க்கும்.






6)        நில நடுக்க நேரத்தில் கதவின் நிலைப்படிக்கு கீழே நிற்பவர்கள் மேலே இருந்து வரும் இடிபாடுகளாலோ அல்லது நிலைபடி உடைந்து கதவு இரண்டாக பிளப்பதாலோ மரணம் அடையும் அபாயம் உள்ளது.

7)        நிலநடுக்கம் ஏற்படும் போது ஏணிபடிகளுக்கும் செல்லக் கூடாது. பொதுவாக அவை கட்டிடம் கட்டி முடித்த பிறகு கட்டப்படுவதால் தனியாக நொறுங்கி விழும் அல்லது கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு எடை தாங்காமல் நொறுங்கும்.

8)        வாய்ப்பு இருந்தால் கட்டிடத்தில் வெளிபக்க காம்பவுண்டு சுவரை ஒட்டியோ அல்லது அதற்கும் வெளியே சென்று விட வேண்டும்கட்டிடத்திற்கு வெளியே செல்லாமல் பிரதான கட்டிடத்தை ஒட்டி நிற்பது சில சமயங்களில் ஆபத்தாகவே முடியும்.



9)        நில நடுக்க காலத்தில் வாகனத்தின் உள்ளே இருக்கும் நபர்கள் வாகனத்தோடு சேர்த்து நசுக்கப் படுகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பூகம்பத்தில் காரின் உள்ளே இருந்த அனைவரும் மரணம் அடைந்தார்கள். அவர்கள் வாகனத்தை ஒட்டி வெளியே தரையில் அமர்ந்து இருந்தாலோ அல்லது படுத்திருந்தாலோ வாழ்க்கை முக்கோன முறையில் பாதுகாப்பு இடைவெளி ஏற்படுத்தப்ப பட்டு பாதுகாக்கப் பட்டு இருப்பார்கள்.

10)      நில நடுக்கத்தில் உள்ளே உள்ள பொருட்கள் சரிந்து விழும் இடத்தில் உள்ள நபர்களுக்கு உயிர் ஆபத்து குறைவு என்பதை ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட கட்டித்தில் மீட்பு பணி நடத்தும் போது இவர் தெரிந்துள்ளார்.



இந்த அடிப்படை விபரங்கள் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது தானே!!


No comments:

Post a Comment