Friday 12 October 2018

பொய் புகாரை பொய் என முடிக்க ஏழு வருட சட்ட போராட்டம்


2011-ல் சில சமூக விரோதிகள் தூண்டுதலால் பணம் பறிக்கும் நோக்கில் திரு.வைகுண்டராஜன் மீதும் விவி மினரல் நிறுவனத்தின் மீதும் நில அபகரிப்பு புகார் என சில கழிசடை ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பின. நேர்மையான தந்தி டிவியோ, தினத்தந்தியோ அல்லது நியூஸ் 7 ஊடகமோ இதனை வெளியிடவில்லை. மாறாக மிரட்டி பணம் பறிப்பவர்களுக்கு துணை போகும் ஊடகங்கள் மட்டுமே இதனை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியும் செய்தி வெளியிட்டும் திரு.வைகுண்டராஜன் ஏதோ ஒரு பெரிய ரவுடி ராஜ்யத்தை நடத்துவது போன்ற மாயையை மக்கள் மனதில் ஏற்படுத்தவும், அதிகாரியையும் நீதித்துறையையும் அச்சுறுத்தவும், இந்த செய்தியை உபயோகப்படுத்தினார்கள். அந்த புகார் கொடுத்தவர் தனக்கு 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசிய விபரங்களும் தனியாக உள்ளன. இதற்கிடையில் சத்திரிய குலத்தில் பிறந்த மிரட்டலுக்கு அஞ்சாத திரு.வைகுண்டராஜன் இதனை சட்டப்படியே சந்தித்தார். புகார் கொடுத்தவரின் புகார் மனு காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளராலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியாகி மாவட்ட நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி ஆனது. எனவே அவர் உயர்நீதிமன்றத்தில் 2012-லேயே மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிலுவையில் வைத்து அதன் மூலமும் பல்வேறு செய்திகளை அவ்வப்போது விபச்சார ஊடகங்களில் வெளிவரச் செய்து தங்களது அற்ப ஆசைகளை தீர்த்துக் கொண்டார்கள். இறுதியில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு அவரது புகாருக்கு முகாந்திரமே இல்லை என தனது தீர்ப்பில் சொல்லி உள்ளது. உள்நோக்கத்தோடு செயல்படும் விபச்சார ஊடகங்கள் இந்த தீர்ப்பை வேண்டும் என்றே மறைத்து விட்டார்கள். இருப்பினும் அனைவரும் தெரிவதற்காக மேற்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு கீழே பதியப்பட்டுள்ளது.