Friday 6 July 2018

விவி டைட்டானியத்திற்கு எதிராக மீண்டும் ஒரு வீடியோ தயாரிக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஆபத்து இல்லை. விவி டைட்டானியம் நிறுவன கழிவால் தான் ஆபத்து. அவர்கள் ஓடையில் கழிவு விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் கெட்டு விட்டது என்று சம்பூர்ண யோக்கியன் LMES ஒரு வீடியோவை  வெளியிட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் இங்கிலாந்தில் இருந்து செலவு செய்த பணபலத்தால் அதனை வைரல் ஆக்கியது. ஆனால் உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவு தான் அங்கு வருகிறது. ஸ்டெர்லைட்டை ஒட்டி தான் ஓடை உள்ளது. விவி டைட்டானியம் நிறுவனத்தை ஒட்டி அல்ல என்பதை நான் முகநூலில் பதிந்தேன். புகைப்படமும் வெளியிட்டேன். மேலும் இந்த பகுதிகள் எல்லாம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் கெட்டுப் போனவை என்பதை 2011-லேயே NEERI அறிக்கை செய்துள்ளதை உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதையும் வெளியிட்டேன்.

இயற்கையும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சதி செய்து அவர்கள் பூமிக்கு அடியில் பதித்து வைத்திருந்த சல்பரிக் ஆசிட் டாங்கில் இருந்து ஆசிட் கசிவதை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து கண்டு பிடித்து அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. தற்போது டீசல் முதல் பாஸ்பிரிக் ஆசிட் வரை அனைத்தும் கசிவதை கண்டுபடித்து அவையும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி பாதி;க்கப்படுவதற்கு ஸ்டெர்லைட் நிறுவனமே காரணம் என்பதை ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் துறை அதிகாரி விளக்கி கூறினார்.

மேற்கூறிய காரணங்களால் ஸ்டெர்லைட் எதிர் பார்த்தது போல் பழியை விவி டைட்டானியம் மீது போட்டு தப்ப முடியவில்லை. பழியை வேறு நிறுவனத்தின் மீது சாட்ட வில்லை என்றால் ஸ்டெர்லைட்டிற்கு நீதிமன்றத்திலும் அனுமதி வாங்குவது கடினம் என ஸ்டெர்லைட் சட்ட வல்லுனர்கள் கைவிரித்து விட்டதால் எப்படியாவது அருகில் உள்ள டைட்டானியம் நிறுவனம் மீது இந்த பழியை சாட்ட வேண்டும். அதற்கு இன்னொரு வீடியோ வெளியிடுங்கள் என்று LMES -க்கே ஐந்து கோடி ரூபாய்க்கு மீண்டும் ஒரு பிராஜக்ட் கொடுத்துள்ளார்கள். அவர்கள் தற்போது வீடியோ எடுத்து பொய் ஆவணங்களையும் தயாரித்து வருகிறார்கள். மேலும் விவி டைட்டானியத்திற்கு எதிராக அதிகாரிகள் மட்டத்தில் வெறுப்பை உருவாக்க பத்திரிக்கை செய்தி, புகார் மனு கொடுப்பதற்கு என்று சென்னையில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு நாகரீக கொள்ளையர்களை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஸ்டெர்லைட் அமர்த்தி உள்ளது. இவர்கள் சென்னையில் இருந்து இரண்டு நபர்களை புகைப்படத்தோடு தூத்துக்குடிக்கு அனுப்பி அப்பகுதியில் இருந்து யாரையாவது புகார் கொடுக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு யாரும் ஒப்புக் கொள்ளாத நிலையில் புதுக்கோட்டையில் இருந்து அக்ரி பரமசிவன் என்ற ஒரு நபரை வைத்து கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

ஸ்டெர்லைட் திட்டப்படி விவி டைட்டானியம் மீது பழியை மாற்றி விட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகி விடும் என்று ஸ்டெர்லைட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பார்ப்போம்… தூத்துக்குடி மக்கள் ஜெயிக்கிறார்களா.. அல்லது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கற்பூர புத்தியினரின் திட்டம் ஜெயிக்கிறதா…