Sunday 31 May 2015

ஸ்மார்ட் சிட்டி என்னும் தவறான திட்டம்

ஐயா, பிஜேபி அரசு இந்தியாவின் தொழில் வளத்தை பெருக்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி என்னும் ஒரு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்தி பெரிதாக விளம்பர படுத்தி வருகிறது. இது தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும். இது கருப்பு பணத்தை மீட்பதில் இருந்து செலுத்தப்படும் என வெற்று விளம்பரம் செய்தது போல் தான். 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. மூலப்பொருட்கள் கொண்டு வருவது, திறமை உள்ள வேலை ஆட்கள் கிடைப்பது, தடையற்ற மின்சாரம், தேவையான நீர், தேவையான அனுமதிகள் போன்ற ஏராளமான இனங்கள் இதில் அடங்கி உள்ளன. ஒரு நகரத்தை உருவாக்குவதால் தொழில் வளராது. துறைமுகத்தை ஒட்டி இருந்தால் ஏற்றுமதி தொழில் வளரும் அல்லது அதிக ஜனத்தொகை உள்ள பெரு நகரங்கள் மற்றும்; தேவையான அளவு மனித உழைப்பு கிடைக்கும் இடங்கள் போன்றவை தேவை. இவர்களது இந்த விளம்பரம் நாங்குனேரி பக்கத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் என முரசொலி மாறன் காலத்தில் ஒரு கனவு திட்டம் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டது. குடிநீர் இல்லை. மின்சாரம் இல்லை. கழிவு நீர் வசதி இல்லை. வேலையாட்கள் இல்லை. இதனை ஒட்டி துறைமுகம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது அந்த திட்டம் எவ்வாறு வெற்றி பெரும். இறுதியில் திட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. வெளியே அடுத்த ஆட்சி வந்ததால் திட்டம் தோல்வி என கூறினார்கள். உண்மை அது அல்ல. இங்கு உற்பத்தி செய்யும் பொருள் ஏற்றுமதிக்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டும். அதற்கே இரண்டரை மணி நேரம் ஆகும். அதே போல் இறக்குமதி செய்யப்படும் பொருள் இங்கு கொண்டு வரவும் இரண்டரை மணி நேரம் ஆகும். இதே நடைமுறை சிக்கல்கள் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் வரும்.

ஆனால் அதனை செயல்படுத்துவதாக கூறி முதலில் விளம்பரமும் பிறகு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பல்வேறு வகையான கமிஷன் என்று அரசியல் வாதிகள் சந்தோசமாக இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் இந்த திட்டம் படுதோல்வி அடையும். 

இதற்கு வழிவகுப்பதற்கு இவர்கள் ஆலோசனைக்கு வைத்த நபர்கள் அனுபவ அறிவு இல்லாதவர்கள் என்பதையே இது காட்டுகிறது. எனவே இது தோல்வி அடைய போகிற நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு திட்டம்.

No comments:

Post a Comment