Thursday 2 August 2018

தொழிலாளர்களிடையே தமிழக அரசு காட்டும் பாரபட்சம் நியாயமானதா?


ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு 10000 குடும்பங்கள் வேலை இழந்தார்கள். அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு தான் அந்த நிறுவனத்தால் என்னென்ன பாதிப்பு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது இயங்காமல் இருக்கும் போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பூமி மட்டத்திற்கு கீழே பதிக்கப்பட்டுள்ள ஆசிட் தொட்டியில் இருந்து ஆசிட் கசிந்து ஆசிட் மட்டம் குறைவதை கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க ஆசிட் மற்றும் இதர ரசாயனங்கள் கசிவதை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் அவற்றை வெளியே எடுக்க அனுமதி வழங்கினார்.



ஒரு மாதமாக இந்த பணி தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு சில ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

   








அரசு அவர்களது உத்தரவால் பாதிக்கப் பட்ட ஸ்டெர்லைட் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தனியாக ஒரு இணையதளத்தை தொடங்கி சுமார் 450 நபர்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார்கள்.





அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களாக அரசின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தாது மணல் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிற்கு அரசு தனி இணைய தளம் ஏற்படுத்தாதது ஏன்? ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமா? அரசின் இந்த பாரபட்சம் நியாயமானதா? அனைவரும் சிந்திப்பீர்..