Monday 30 September 2019

மத்திய அரசின் இந்தியன் ரேர் எர்த்; எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை. பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு உதவவில்லை. கருத்து கேட்பு கூட்டத்தில் பொது மக்கள் குமுறல்.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் ஒரிசாவில் மிகப் பெரிய அளவில் தாது மணல் தொழிலை செய்து வருகிறது. குறிப்பாக மோனசைட்டை பிரித்து எடுத்து அதில் இருந்து யுரேனியம் தோரியத்தை எடுப்பதால் கதிரியக்கத்தால் சுற்றுச்சூழல் முழுவதும் பாதிக்கப்படுவதாகவும் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கருத்து கேட்பு கூட்டத்தில் சாமானியன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை குமுறி உள்ளார்கள். அந்த கருத்து கேட்பு கூட்ட நடவடிக்கை மக்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.








Tuesday 17 September 2019

தமிழ்நாடு சிறு குறும் தொழில் நிறுவன உரிமையாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த பரிந்துரைகள்

தமிழ்நாடு சிறு குறும் தொழில் நிறுவன உரிமையாளர்களின் 2019-க்கான கலந்துரையாடல் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த ஆகஸ்டு 8-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு உகந்த அருமையான பரிந்துரைகளை மாநில அரசுக்கு சமர்பித்தார்கள். அவை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

*****************


அரசு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் உரிமம் புதப்பித்தல் ஆகியவை மின்னணு மூலமாக பதிவேற்றம் செய்யும் வசதி வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது புதுப்பித்தல்களுக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது உரிமம் அளிக்கப்பட்டதாக கருதப்படவேண்டும். தற்போது இது தெலுங்கானா மாநிலத்தில் அமலாகி உள்ளது.

தொழிற்சங்கங்களில் உறுப்பினராக சேருவது கட்டாயமாக்கப்பட வேண்டும். தற்போது தொழற்சங்கங்களின் செயல்பாட்டு முறைகள் தரமதிப்பீடு செய்யப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு தொழில்துறைக்கும் தரச்சான்று  பெற்ற ஒரு சங்கம் கட்டாயமாக்கப்பட்டு அத்துறையில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சங்கத்தில் கட்டாய உறுப்பினாராக வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறையானது பல்வேறு நாடுகளில் அமுலில் உள்ளது.

இன்றைக்கு அரசாங்கத்தின் பார்வை புதிய தொழில்முனைவோர்களுக்காகவும் புதுமை தொழில்களுக்காகவுமே உள்ளது. புதிதாக தொடங்குவோம். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் போன்ற திட்டங்கள் அனைத்தும் பாரம்பரிய தொழில்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. புதிய தலைமுறை தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் ஏற்கனவே இருந்துவரும் பாரம்பரிய தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே வட்டிமானியம், முதலீட்டு மானியம், மின்மானியம் அதிக வேலைவாய்ப்பிற்கான மானியம் ஆகியவை அனைத்தும் புதிய தொழில்களுக்கு வழங்கப்படுவது போலவே ஏற்கனவே இருந்து வரும் தொழில்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

சிறுதொழில் சான்றிதழ் முன்பு இரண்டு பகுதியாக வழங்கப்பட்டது. உத்தேச நிறுவனங்களுக்கு பகுதி ஒன்று என்றும் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு பகுதி-2 னன்றும் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வழங்கப்படும் udyog aadhar நடைமுறையில் தொடங்கப்பட இருக்கும் உத்தேச நிறுவனங்களுக்கு பதிவு செய்யும் வாய்ப்பு இல்லை. இதனால் புதிய நிறுவனங்கள் அரசின் சலுகைகளையோ இதர சேவைகளையோ பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.  னவே ஏற்கனவே இருந்ததுபோல் புதிதாக தொடங்க இருக்கும் நிறுவனங்களுக்கும் தற்காலிக பதிவு அவசியம் ஆகிறது. தற்கு ஆவன செய்ய வேண்டும் மனிதர்களின் பிறப்பு இறப்பு பதிவு செய்வதுபோல தொழிற்சாலைகளில் பிறப்பும் இறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். தொழில்களின் துவக்கத்தை பதிவு செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் அந்த தொழில்கள் மூடப்படும்போது அதுமுறையான வழியில் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் தொழில்கள் நலிவடைந்து அதற்கான காரணங்கள் என்ன, எதனால் மூடப்படுகிறது என்ற புள்ளிவிவரங்கள் அரசுக்கு கிடைக்காமல் போகிறது. குறிப்பாக அரசுக்கும் வங்கிகளுக்கும் தொழில்கள் மூடப்படுவதற்கான உண்மைக்காரணங்களை கண்டறிய முடியாமல் போகின்றது. இதற்காக மாவட்ட அளவில் ஒரு சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு அதில் இணை இயக்குனர் அந்தஸ்தில் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு அந்த குழுவின் மின்வாரியம் வங்கி வரித்துறை மற்றும் சிறுதொழிலட சங்கப்பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்றிருக்கவேண்டும். தொழில்கள் மூடப்படும்போது அதுமுறையாகப் பதிவு செய்யப்பட்டு இந்த குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.

ஓரு தொழில் தொடங்குவது சுலபம் அதை வெற்றிக்கரமாக நடத்துவது கடினம். அத்தொழிலை விட்டு வெளியேறுவது என்பது முடியாத காரியம் என்பது இன்றைக்கு நிதர்சனம். இதற்கு காரணம் துவக்கத்தை ஊக்குவிக்கும் அரசு நடைமுறைகள் அந்த தொழில் நலிவடைந்து மூடப்படும்போது அந்த தொழில்முனைவோர் கௌரவமான முறையில் வெளியேறுவதற்கு எந்த வழிவகையும் காணவில்லை. இதற்காக பல நிறுவனங்கள் குறிப்பாக டான்ஸ்டியா எஃப்.என்.எஃப் போன்ற நிறுவனங்கள் ~எக்ஸிட் பாலிசி~ என்ற ஆவணத்தை அரசிடம் சமர்ப்பித்து உள்ளது. இருப்பினும் இந்த ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர நடைமுறைக்கு வரவில்லை. னவே இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து ஒரு நிறுவனம் தொழிலைவிட்டு வெளியேற விரும்பினால் முறையான வழிகளில் அரசு சட்டதிட்டங்களை புர்த்தி செய்து 90 நாட்களுக்குள் வெளியேறுவதற்கு உரியமுறையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தில் இன்று ஏராளமான தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சில தொழில்கள் W.S. இண்டஸ்ட்ரீஸ் மெட்டல் பாக்ஸ் டன்லப் இந்தியா, சிவானந்தா ஸ்டீல், சதர்ன் ஸ்விட்ச் கியர்ச,; ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ், பிஆர்பி, விவிமினரல், ஸ்டெர்லைட் காப்பர் போன்ற நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மூடப்படுவதற்கு அல்லது முடக்கப்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்பதை ஆராய உயர்நிலைகுழு நியமிக்கப்பட வேண்டும். 

டான்ஸ்டியா, சிஐஐ, ஃபிக்கி போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் ஆலோசகர்கள் அடங்கிய குழு இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் தொழில்துறைக்கு ஒருவித பய உணர்ச்சியையும் அவநம்பிக்ககையையும் உருவாக்கியுள்ளது. அதனால் தொழில்துறையினர் பக்கத்து மாநிலங்களுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும். இவற்றை சரிசெய்து மீண்டும் தமிழகம் தொழில்துறையில் பீடுநடை போட தொழில்முனைவோர்களின் மத்தியில் நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துவது அரசின் தலையாய கடமையாகும்.

ஓரு தொழிலில் சில இடர்பாடுகள் ஏற்பட்டால் அதற்கு அடிப்படைக் காரணம் ஆராயப்பட வேண்டும். அந்த தொழில்முனைவோர் தவறு இழைத்திருந்தால் பொருளாதாரக் குற்றங்கள் புரிதல் இருந்தால் அதற்கான நடவடிக்கை அந்த தொழில்முனைவோர் மீதும் அதன் மேலாண்மைகுழு ஆகும் இருக்கவேண்டுமே தவிர அந்த தொழிலை முடக்குவதாக இருக்கக்கூடாது. ஓரு பல்கலைக்கழகம் திவாலாகும் நிலை வரும் பொழுது அரசு அதை எடுத்து நடத்துகிறது. ஆனால் 5000 நபர்கள் வேலை செய்யும் ஒரு தொழில்கூடம் அதேமாதிரியான ஒருநிலையை அடையும்பொழுது அரசு அதை மூடினால் தொழிலாளர்கள் வேலை இழப்பு பொருளாதார பின்னடைவு ஏற்படும். னவே தென்மாவட்டங்களில் இது போன்று மூடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு புத்துயிர் ஊட்ட வேண்டும்.

சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பொருள்கள் விற்பனை செய்யும்பொழுது விலைப்பட்டியல் ஒப்பீடு செய்யும்பொழுது 15 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும் இன்றைக்கு டர்ன் கீ புராஜக்ட்ஸ் என்ற அடிப்படையில் பல்வேறு பொருள் மற்றும் சேவைகளை ஒன்றாக இணைத்து கொள்முதல் செய்யும் நிலைஏற்பட்டுள்ளது. அதுபோன்ற கொள்முதல் ஒப்பந்தம் செய்யும்பொழுது அந்த ஒப்பந்ததாரர் அந்த கொள்முதல் மதிப்பீட்டில் குறைந்தப்பட்சம் 10 சதவீதம் வரை சிறுகுறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும் என்ற ஒரு கட்டளையும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

பெருநகரங்கள்தவிர பிற மாவட்டங்களுக்கு அருகே உள்ள தொழில்பேட்டைகளுக்கு பெரும்பாலும் விவசாய மின்மாற்றிகளிலிருந்தே மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் பல மணிநேரம் மின்வெட்டைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனை தவிர்ப்பதற்கு தொழிற்பேட்டைகளுக்கென்று பிரத்தியோக மின்மாற்றிகள் அமைக்கப்பட வேண்டும்.

மின்வாரியத்திடமிருந்து புதிய இணைப்புகளை பெறுவதற்கும் கூடுதல் மின்சாரம் பெறுவதற்கும் இடையுறுகள் நிறைய உள்ளது. இந்த காலதாமதத்திற்கு மின்வாரியத்தில் தேவையான உபகரணங்கள் இருப்பதில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இதைத் தவிர்க்க மின்வாரியம் தேவையான அனைத்து உபகரணங்களையும் அதிக அளவில் கொள்முதல் செய்து ஏழுநாட்களுக்குள் புதிய இணைப்பு வழங்குவதற்கு ஆவ செய்ய வேண்டும். மின்வாரியத்திற்கு விண்ணப்பங்கள் மின்னணு மூலமாக சமர்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.

டான்சி என்ற நிறுவனம் துவங்கப் பெற்ற போது  அதனுடைய நோக்கம் சிறு குறுந்தொழில்களுக்கான பொதுப் பயன்பாட்டு சேவைகளை (Comman Facility Centre)  அளிப்பது தான். காலப்போக்கில் அதற்கான தேவை குறைந்துவிட்ட காரணத்தால் அங்குள்ள தொழிலாளர்களுக்காக பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது. தற்போது தொழிலாளர்களும் இல்லாத நிலையில் உற்பத்திக்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்று பிற நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்டிங்க் கொடுத்து வருவது சிறு தொழில்களுக்கு போட்டியாக வருகின்றது. இதைத் தடுப்பதற்கு டான்சி நிறுவனம் வேறு ஆக்கப்புர்வமான பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் மிக அதிகம் இருப்பினும் இன்றைக்கு தமிழகத்தில் மதுப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழில் பேட்டைகளுக்கு அருகே மதுகடைகள் திறப்பதால் தொழிலாளர்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித்திறனும் குறைகின்றது. னவே தொழில்பேட்டைகளுக்கு அருகே இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்.

ற்றைச்சாளரமுறை: இந்த ஒற்றைச்சாளர முறை புதிய தொழில்களுக்கு மட்டும் என்றில்லாமல் அனைத்து தொழில்களும் பொதுவானது என்று பரவலாக்கப்பட வேண்டும்

மூடப்பட்டுள்ள தொழில்களை திறப்பதற்கான சிறப்புத் தீர்மானம்:

வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும்பங்களிப்பது தொழில்துறையே ஆகும். தொழில்துறை என்றாலே பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்பொழுது சில உபபொருட்களும் வருவது இயல்பானதுதான். இவ்வாறு வரும் உபபொருட்கள் அனைத்துமே கழிவுப்பொருட்கள் அல்ல. அவற்றிற்கு வேறு பயன்பாடுகள் பல உள்ளது. தாரணத்திற்கு நிலக்கரி சுரங்கத்தில் எடுக்கப்படும் களிமண், மின் உற்பத்தி கூடத்தில் உருவாகும் சாம்பல் போன்றவைகள் ஆகும். இன்றைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்வாறு உருவாகும் அனைத்து பொருட்களுக்கும் உபயோகமான பயன்பாடுகள் கண்டறியப்பட்டு  வருகிறது.  அதுமட்டுமல்லாமல் உற்பத்தி முறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள். அடிப்படையில் தேவையில்லாத உபபொருட்கள் கழிவுகள் மிகவும் குறைக்கப் பட்டுள்ளது. தாரணத்திற்கு ஜவுளி பதப்படுத்தும் ஒரு டன் ஜவுளிக்கு பல ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் செலவிடுவதில் இருந்து இன்றைக்கு மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.  

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசும் வேளாண்மையும் மட்டுமே தேவையான வேலைவாய்ப்பபை வழங்கிவிடமுடியாது. துமட்டுமல்லாமல் தொழில்துறை உற்பத்தி செய்தால்தான் மக்களுடைய அடிப்படை தேவையான உணவு உடை உறைவிடம் மற்றும் சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்.

அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வேண்டி இருக்கிறது. ஆனால் அதன்மூலம் உருவாகும் புகையும் சாம்பலும் வேண்டாம்.

அனைத்து மக்களுக்கும் வெள்ளை வேஷ்டி சட்டை வண்ண வண்ண ஆடைகள் தேவை இருக்கிறது. ஆனால் சாயம் காய்ச்சக்கூடாது. அனைத்து மக்களுக்கும் மின் உபகரணங்கள் குளிரூட்டிகள் கைப்பேசிகள் போன்ற அனைத்தும் வேண்டும். ஆனால் அவற்றின் தொழில்நுட்பத்திற்கு அத்தியாவசியமான தாமிர உற்பத்தி கூடாது.

இது எவ்வாறு சாத்தியமாகும் தொழில்துறை எந்த நேரத்திலும் சுற்றுச்சூழலை சீர்குலைக்க விரும்புவதில்லை. என்ன விலை கொடுத்தாவது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்குதான ஆர்வம் காட்டி வந்துள்ளது. இன்றைக்குள்ள புதிய தொழில்நுட்பத்தில் கழிவுகளே இல்லாமல் பல தொழில்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே மக்களிடையே நிலவும் தேவையற்ற அச்சத்தை போக்குதன் மூலமும் இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் இயங்கும் போலி அரசுசாரா நிறுவனங்களையும் போலி ஆர்லர்களையும் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். முறையான உரிமம் பெற்று அரசுக்கு வரி செலுத்திய பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலதிபர்களை இதுபோன்ற மக்கள் விரோத நிறுவனங்கள் மிரட்டுவதைத் தடுக்கவேண்டும். சமூகவிரோதிகள்  தொழிலதிபர்களை அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் அவர்களது உடமைக்கும் உயிருக்கும் ஊறுவிளைவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. சில ஆண்டுகுளுக்கு முன்பாக மானாமதுரை சிப்காட் வளாகத்தில் நடந்த சிமெண்ட் ஆலையின் அதிபர்கொலை செய்யப்பட்டது ஒரு உதாரணமாகும்.

ரு சினிமா தயாரிப்பாளர் அந்த சினிமாவை திரையிடுவதற்கு சமுதாயத்தில் எதிர்ப்பு ஏற்படும்போது அரசு மற்றும் நீதிமன்றம் வரிந்துகட்டிக்கொண்டு அவருக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. ந்த திரைப்படம் திரையிடப்படும் அனைத்து அரங்குகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் பல கோடிகளில் வரிக்கட்டி வேலைவாய்ப்பளித்து பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யும் தொழில்துறைக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்பது ஒருநகை முரண் ஆகும்.

சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் ஆகிய நாங்கள் பல பெரிய தொழில்நிறுவனங்களை அண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தேவையான பல்வேறு பொருள்களை  உற்பத்தி செய்துகொடுத்து அவர்களின் உற்பத்திப் பொருளை நாங்களும் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் தூத்துக்குடியில் வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அதிரடியாக மூடப்பட்டது. தென்மாவட்டங்களில் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைந்துள்ளது. ங்களது உறுப்பினர்கள் நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்தி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஸ்டெர்லைட் நிறுவனம் நமது நாட்டின் தாமிர தேவையில் மூன்றில்  ஒரு பங்கை அளித்து வந்தது 2026-க்குள் இந்தியா தாமிர வர்த்தகத்தில் நாலாவது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுரை ஜவுளி உற்பத்திக்கு ஒரு முக்கியமான இடமாகும். இங்கு இயங்கிவந்த பல்வேறு ஜவுளி தொழில்களும் இன்றைக்கு ஜவுளி பதப்படுத்துதல் செய்யமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இவற்றையெல்லாம் தவிர்க்க  ஜவுளி பதப்படுத்துதல் தொழில்பேட்டை உரிய தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. தற்கு மக்களிடையே எதிர்ப்பு இல்லாமல் அதை அமல்படுத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் கருங்கல்- கிரானைட் உற்பத்தியில் மதுரை மிக முக்கிய இடம் வகித்தது மதுரையில் இயங்கி வந்த பிஆர்பி நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டிவந்தது. அந்த நிறுவனத்தோடு இணைந்து நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்கள் மதுரை சிவகங்கை  சாலையில் இயங்கி வந்தன. இவை அனைத்தும் இன்றைக்கு மூடப்பட்டுள்ளது.

கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்திருந்தால் பொருளாதார குற்றங்களுக்கான நடவடிக்ககைகள் எடுப்பதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் 3000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு  அளித்து  வந்த ஒரு நிறுவனத்தை அந்நியச் செலாவணி ஈட்டுவதில் பல பரிசுகளை வென்ற ஒரு நிறுவனத்தை திடுதிப்பென மூடுவது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இதனால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் இன்றைக்கு வாழ்வாதாரம் தேடி மேற்கு மாவட்டங்களில் அவதிப்படுகின்றனர்.

இதையெல்லாம் மனதில் வைத்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அண்மைக்காலமாக தென்மாவட்டங்களில் மூடப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் திறப்பதற்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.