Wednesday 11 April 2018

நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் சமூக பணி செய்ய வாய்ப்பு

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கிருஷணன் அர்ஜீனனுக்கு உபதேசித்ததாக வாசித்து இருப்போம்.  அதே போல் பலனை எதிர்பாராமல் கடமை செய்வது  நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி. 

உள்நோக்கத்தோடு இந்த தொலைக்காட்சி மீது ஏராளமான  விமர்சனங்களும் தாக்குதல்களும் பல்வேறு தரப்பில் இருந்தும் தொடுக்கப்படுகின்றன. ஆனால் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் கடந்த முறை தமிழகம் முழுவதும் கடுமையான வெள்ள பாதிப்பு வரும் போது முதன் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி கரம் நீட்டியது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி. இதில் பாராட்ட வேண்டிய அம்சம்  பொது மக்கள் நன்கொடையாக கொடுத்ததை அப்படியே சொல்லி தன்னார்வலர்கள் மூலம் வினியோகித்தார்கள். அந்த பெயரை தாங்கள் செய்தது போல் விளம்பர படுத்தவில்லை. அதே போல் எவரிடம் இருந்தும் பணமாக வசூலிக்கவில்லை. பொருளாக யார் என்ன கொடுத்தாலும் அதனை அப்படியே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து வினியோகித்தார்கள். 

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்து விருப்பு வெறுப்பு இன்றி இளைஞர்களின் மனக்குமுறலை அப்படியே படம் பிடித்து காட்டினார்கள். இதனால் அரசின் கோபம் வரும் என்றும் நினைக்கவில்லை. 

ஆனால் டெங்கு பாதிப்பு என மக்கள் பாதிக்கப்படும் போது அரசோடு கைகோர்த்து பல்வேறு மாவட்டங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் என தீவிரமாக பொது மக்கள் பாதிப்பை குறைப்பதற்கு துணை நின்றார்கள். 

தீர்வு பாலம் என்று ஒவ்வொரு வாரமும் அரசு துறைகளால் பொது மக்கள் எங்கெங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவற்றை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்த குறைகள் தீர்வதற்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்கள். இதனால் ஏராளமான ஊனமுற்றோர், நரிகுறவர் இனத்தினர் என பல்வேறு தரப்பினரும் பயன் அடைந்து உள்ளார்கள். 

அவர்களது இந்த மக்கள் சேவையை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்குவதற்கு நியூஸ் 7-ல் இருந்தே “அன்பு பாலம்” என்று ஒரு அமைப்பை உருவாக்கி சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்களும் , இளைஞிகளும் இதில் சேரலாம் என சேர்த்து வருகிறார்கள். நிபந்தனை இதற்கு கட்டணம் கிடையாது. அரசியல் கட்சி ஆதரவு என்று கிடையாது. ஆனால் எங்கேனும் பொது மக்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டால், இயற்கை பேரிடர், விபத்து போன்ற காலங்களில் இன, மத பாகுபாடு பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும். அந்த மனம் உள்ளவர்கள் இதில் சேரலாம்.

சில தினங்களுக்கு முன்பு குரங்கணி மலையேற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்கள் உடைகளை கொடுத்து மானம் காப்பாற்றியதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கீழே கொண்டு வருவதற்கும் உதவி செய்த ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உடைகள் , போர்வைகள் போன்றவற்றை வழங்கியதோடு உதவி செய்தவர்களுக்கும் உதவி கரம் நீட்டினார்கள். இதனை செய்ய வேண்டியது அரசு தானே.. நாம் ஏன் செய்ய வேண்டும் என இல்லாமல் பாராட்டியது ஒரு நல்ல முயற்சி.

தற்போதும் சேலத்தில் தண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதி இன்றி இரண்டு வருடமாக இருந்த ஒரு ஏழை சிறுவனுக்கு அன்பு பாலத்தின் மூலம் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். 

எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் லாபத்தில் ஒரு சதவீதத்தை சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என சட்டம் இருந்தாலும் யாரும் எதுவும் செய்வதில்லை. ஆனால் 

யாருமே சொல்லாமல் பாதிக்கப் பட்ட மக்களை தேடி பிடித்து உதவி செய்யும் நியூஸ் 7 அன்பு பாலம் செயல்பாடுகள் பாராட்ட பட வேண்டியதே!!!

நான் இதில் ஒரு தன்னார்வலராக பதிவு செய்ய உள்ளேன். உங்களுக்கும் தன்னார்வலராக பதிவு செய்ய விருப்பம் என்றால் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்யுங்களேன். 

மொபைல் எண் : 91 7708590477

மேலதிக விபரத்திற்கு https://www.facebook.com/dorai.raj.35380?lst=100006087135047%3A100024720380349%3A1523510339  என்ற முகநூலையும் பார்வையிடலாம். நண்பர்களாகவும் இணையலாம்.

ஓய்வு கிடைக்கும் போது நாமும் நம் சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குவோமே!!!!