Tuesday 19 June 2018

பாவம் ஓரிடம், பழி ஓரிடமா, இது தான் கற்பூர புத்தியினரின் செயல்பாடு என்பதோ…

30 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் அமில தொட்டியில் தற்போது உற்பத்தியும் உபயோகமும் இல்லாமல் நிறுத்தி வைத்த உடன் அமிலம் கசிந்து குறைவதை கண்டு பிடித்து தற்போது அமில தொட்டியை காலி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனை ஸ்டெர்லைட் நிர்வாகமும் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளார்கள். 100 சதவீத அமிலம் கசிந்து நிலத்தடி நீர் முழுவதையும் அமில நீராக எத்தனை ஆண்டுகளாக மாற்றி இருக்கும்? இந்த அமில கசிவால் எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நீர் பாதிக்கப் பட்டு இருக்கும்? இதனை மறைத்து சில ஊடகங்களுக்கு பணத்தை கொடுத்து நான் ஸ்டெர்லைட்டை பார்த்தேன். அங்கு அதிக ஆபத்து இல்லை. பக்கத்தில் உள்ள நிறுவனங்களால் தான் அதிக ஆபத்து என்று ஒரு நபர் பேசினாரே..இது நியாயமா? இதோ அதிகாரிகள் அமில கசிவை உறுதி செய்து கொடுத்த பேட்டி..

"TUTICORIN: Efforts to clear a mammoth 1,000 tonnes of sulphuric acid from the sealed Sterlite copper plant here began on Monday, following confirmed reports that there was leak in a storage tank in which it was kept. District collector Sandeep Nanduri said that the process of safely removing it from the plant began in the afternoon and was likely to be completed by Wednesday".

For More : https://timesofindia.indiatimes.com/city/madurai/trucks-begin-to-shift-sulphuric-acid-from-sterlite/articleshow/64640452.cms


VV டைட்டானியம் கம்பெனியின் கழிவு நீர் என்று தூத்துக்குடியில் டைட்டானியம் கம்பெனியையே தெரியாத ஒரு திருநெல்வேலி நபர் பேட்டி கொடுத்து ஒரு வீடியோவை பரப்பினார்களே.. இது நியாயமா?

செய்த தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவதும், ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்கள் செய்வதும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அழகல்ல…

ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் அந்த ஓடை உள்ளது. அந்த ஓடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ;இருந்து கழிவு நீர் வந்து சேர பைப் உள்ளது. ஓடைக்கு அடுத்தாற்போல் பொது தார் சாலையும் அதன் பிறகு தான் விவி டைட்டானியம் நிறுவனமும் உள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவையும் அவர்களது ஆசிட் கசிவால் ஏற்பட்ட கழிவையும் VV டைட்டானியம் நிறுவனம் மீது திட்டமிட்டு பழி சுமத்தினார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் ஓடை உள்ளது என்பதற்கும் அந்த நிறுவனத்தில் இருந்து தான் ஓடைக்கு கழிவு நீர் வருவதற்கு பைப் உள்ளது என்பதையும் காட்டும் புகைப்படம் இதோ..




ஸ்டெர்லைட்டை நிறுத்தி மூன்று மாதத்திற்கு பின்பு கண்டுபிடிக்கப் பட்ட ஆசிட் கழிவு கடந்த பல வருடங்களாக கண்டுபிடிக்கப் படாமல் கசிந்து தூத்துக்குடி சுற்று வட்டாரம் முழுவதையுமே அமிலத்தன்மை உடைய நீராக மாற்றி இருக்குமே.. இதற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது? வழக்கம் போல் அருகில் உள்ள அப்பாவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட்டை காப்பதா?


பாவம் ஓரிடம், பழி ஓரிடமா, இது தான் கற்பூர புத்தியினரின் செயல்பாடு என்பதோ…