Tuesday 4 May 2021

தமிழகத்தின் நிதி நிலைமையும் புதிய முதல்வரின் கடமையும்

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் அறிக்கையின் படி தமிழகத்தின் வரி வருவாய் இருமடங்காக கூடி இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சத்து என்பத்து ஓராயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழக அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் மொத்த கடன் தொகை ஏழு லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் கோடி ரூபாய். இந்த கடனுக்கு ஆண்டுக்கு எண்பதாயிரம் கோடி ரூபாய் வட்டியாக சென்று விடுகிறது. எனவே மீதி தொகையில் தான் அரசை இயக்க வேண்டும் அல்லது அரசின் வருவாயை பெருக்க வேண்டும் அல்லது மேலும் கடன் வாங்க வேண்டும்.  அரசு ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம், பயணபடி, ஓய்வூதியம் என்ற வகையில் செல்லும் பணம் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து முப்பத்து ஆறாயிரம் கோடி ரூபாய். இதற்கு மத்திய அரசின் பங்காக கிடைக்கும் இருபத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயும் வட்டி செலுத்தியது போக மீதம் உள்ள ஒரு லட்சத்து ஓராயிரம் கோடியும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இருபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசிடம் உள்ளது. வருவாயை பெருக்க வேண்டும் என்றால் நடுநிலையான பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டியது புதிய முதல்வரின் தலையாய கடமையாக உள்ளது. ஆண்டுக்கு பலநூறு கோடி ரூபாய் வருவாய் வரும் பட்டாசு தொழில் மற்றும் ஏராளமான தொழில்கள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப் பட்டுள்ளன. இதன் பின்னால் இருப்பது கற்பூர புத்தியினர். முந்தைய அரசால் அவர்களை எதிர்த்து எதுவும் பேச முடியாது. ஆனால் தற்போது வந்துள்ள அரசு தைரியமாக சில நடவடிக்கைகளை எடுத்து தொழில் புரட்சியை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போதைய நிதி நிலையில் அதுவும் கொரோனா பாதித்து தொழில்கள் பாதித்து இதனால் அரசுக்கு வருவாயும் பாதித்து உள்ள நிலையில் கட்சி பேதம் இன்றி அனைத்து தொழிலையும் ஊக்குவிக்க வேண்டியது புதிய முதல்வரின் கடமை. அப்போது மட்டுமே அரசு நிலைத்து இருக்க முடியும். புதிய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.