Saturday 29 April 2017

விவி மினரல் நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் பின்னணி

தாது மணல் கொள்ளை என திட்டமிட்டு தமிழ்நாட்டை சேர்ந்த விவி மினரல் நிறுவனத்திற்கு எதிராக உயர்சாதியினர் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் கோரசாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சில அப்பாவி மக்கள் இது உண்மையாக இருக்குமோ என எண்ணும் அளவிற்கு கனகச்சிதமாக கதை புனைகிறார்கள். இந்த உயர் சாதியினர் இவ்வாறு எழுதுவதற்கு இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெரும் பணம் ஒரு காரணம் என்பது பாமர மக்களுக்கு தெரியாது. இதை கூறினாலும் வெளி நாட்டு நிறுவனங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்பார்கள். அதற்கான விடையை கீழே கொடுக்கிறேன்.

கார்னட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா 14-வது இடத்தில் இருந்தது. அப்போது தான் விவி மினரல் 1989-ல் ஆண்டுக்கு 5000 டன் உற்பத்தி செய்யும் திறனோடு உற்பத்தியை தொடங்கி ஏற்றுமதி செய்தது. நான்கு வருடங்களுக்குள் விவி மினரல் நிறுவனத்தின் தொடர்ந்த வளர்ச்சியால் இந்தியா உலக கார்னட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 14-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியது. 2000-த்தில் விவி மினரல் நிறுவனம் உலக உற்பத்தியாளர்கள் அளவில் 2-வது இடத்திற்கு வந்தது. உலக உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு வந்தது. 2010-ல் உலக உற்பத்தியாளர்கள் அளவில் இந்தியாவும் முதலிடம் பிடித்தது. விவி மினரல் நிறுவனமும் முதலிடம் பிடித்தது. 25 வருடங்களாக முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா நிறுவனமான GMA  என்ற நிறுவனம் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 


உலகம் முழுவதும் தொழில் போட்டியினால் கொலைகள் மற்றும் தனி நபர் தாக்குதல்கள் நடப்பதை பார்க்கிறோம். அறிவில் கூடிய வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா? இந்தியாவில் உள்ள அறிவில் சிறந்த ஒரு சாதியினருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தை கையில் எடுத்து அவர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் மற்றும் அவர்கள் நிர்வகிக்கும் ஊடகங்கள் மூலம் விவி மினரலுக்கு எதிராக காய் நகர்த்தினார்கள். அவர்களே அரசு மட்டத்திலும் உயர் பதவியில் இருந்ததாலும், முதல்வர் அலுவலகத்திலும் அவர்களே கோலோச்சியதாலும் அவர்களுக்கு இதனை செயல்படுத்துவதற்கு வெகு இலகுவாக ஆகி விட்டது. 

இவ்வாறு தான் விவி மினரலுக்கு எதிரான சதி திட்டம் நிறைவேறியது.

முதலில் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு செய்தி பரப்பி பிறகு அதையே முதல்வரிடம் காட்டி சம்மதிக்க வைத்து விவி மினரலை முடக்க திட்டமிட்டார்கள். நான் மேலே கூறியதற்கு என்ன ஆதாரம் என கேட்கலாம். இந்தியா 13-வது இடத்தில் இருந்தது, 5-வது இடத்திற்கு வந்தது, பிறகு 2-வது இடத்திற்கு வந்தது, பின் முதல் இடத்திற்கு வந்தது இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வெளியிடப்படும் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புத்தகத்தின் பெயரோடு கூடிய பக்கத்தை கீழே பதிவு செய்துள்ளேன்.

அரசு எப்படி இவ்வாறு செய்யும் என சிலர் கேட்கலாம். இவ்வாறு செய்வதற்கு எந்த அரசும் விதி விலக்கு அல்ல. இதற்கு முன்பு மதுரையில் செரீனா மீது கஞ்சா வழக்கு போட வில்லையா? நீதிபதியின் மருமகன் மீதே பிரவுன் சுகர் வைத்திருந்தார் என வழக்கு போடவில்லையா? 

எனவே இவ்வாறு தான் திட்டமிட்டு விவி மினரலுக்கு எதிராக பொய் செய்திகள் விதைக்கப் படுகின்றன. உருவாக்கப் படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக இந்தியாவில் உள்ள சில கைக்கூலிகளும் சேர்ந்து கொண்டு இந்த செயலை செய்கிறார்கள். இது பற்றி மேலதிக விபரம் வேண்டுவோர் vetri3337.blogspot.com-ல் விரிவாக குறிப்பிட்டுள்ளேன். அனைத்தையும் அறியலாம். யாருக்கும் கூடுதல் விபரம் வேண்டும் என்றாலோ அல்லது சந்தேகம் இருந்தால் நீங்கள் கமெண்டில் பதிவு செய்தால் நான் பதிலை உடனடியாக பதிவு செய்வேன். இந்த நிறுவனத்தில் நான் 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பதால் அனைத்து விபரங்களும் உண்மை நிலையும் எனக்கு தெரியும். 

விவி மினரல் நிறுவனம் செய்த ஒரே தவறு, இதர ஏற்றுமதி நிறுவனங்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் விவி  நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் மூவாயிரத்திற்;கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மூன்றே மூன்று பேர் தான் அந்த உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதுவும் அந்த சமுதாயத்தினருக்கு விவி நிறுவனத்தின் மீது கோபம் வருவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. 

இன்னொரு வெளிநாட்டு சதி மற்றும்  விவி நிறுவனத்தால் இந்தியா அடைந்த பெருமை பற்றியும் இன்னொரு பதிவிலும் வெளியிடுகிறேன்.