Sunday 31 May 2015

திருத்தப்பட வேண்டிய சட்டங்கள்

தற்போது படைக்கல சட்டப்படி அரசின் அனுமதி பெற்று துப்பாக்கி, ரிவால்வர், பிஸ்டல் முதலியவை வைத்துக் கொள்ளலாம். ஒரு அனுமதி பெறுவதற்கு முதலில் 100 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். (5 வருடங்களுக்கு முன்பு இது 10 ரூபாய் தான்).

விண்ணப்பம் சமர்பித்த உடன் மாவட்ட ஆட்சி தலைவர், காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் அறிக்கை கேட்பார். காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர், சார் ஆய்வாளர் ஆகியோரிடம் அறிக்கை கேட்பார். அவர்கள் அறிக்கை மற்றும் பரிந்துரை மற்றும் மாவட்ட வன அலுவலரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும். இதற்கு தபால் வகைக்கு மட்டும் அரசு 500 ரூபாய் செலவு செய்யும். ஆண்டுக்கு இரண்டு முறை ஆய்வு செய்ய படைக்கலத்தை கொண்டு வருவதற்கு அறிவிப்பு அனுப்பி குறிப்பிட்ட நாளில் வரவில்லை என்றால் மீண்டும் கடிதம் எழுதி இவ்வாறு ஆண்டுக்கு 300 ரூபாயும் மக்கள் நல திட்டங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் பணி சுமையும் இதனால் கூடும். 

இந்த படைக்கல சட்டம் மத்திய சட்டம். பெரும் முதலாளிகள், வசதி படைத்தவர்கள் மட்டுமே பிஸ்டல், ரிவால்வர் மற்றும் ரைபிள், துப்பாக்கி ஆகியவற்றை உரிமம் வாங்கி வைத்துள்ளார்கள். அதனை புதுப்பிப்பதற்கு பிஸ்டல், ரிவால்வருக்கு ஆண்டுக்கு ரூபாய் 50-ம், ரைபிளுக்கு ரூ. 30-ம், துப்பாக்கிக்கு ரூ.20-ம் கட்டணம்.

மோடி அரசு இந்த படைக்கல சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பிஸ்டல் ரிவால்வர், ரைபிளுக்கு உரிம கட்டணம் ஒரு தவணையாக ரூ.10000 என்றும், ஆண்டுக்கு புதுப்பிக்கும் கட்டணம் ரூ.5000 என்றும், துப்பாக்கிக்கு ஒரு தடவை கட்டணம் ரூ.8000, புதுப்பிக்கும் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4000 என்றும் சட்ட திருத்தம் செய்தால் மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தேவையற்ற நபர்கள் துப்பாக்கி, ரிவால்வர் லைசன்ஸ்களை சரண்டர் செய்து விடுவார்கள். எனவே அரசின் பணிசுமை குறையும். இதனை மத்திய அரசு பரிசீலிக்குமா?

3 comments:

  1. அப்படியே 100 வழக்கிற்கு மேல் உள்ளவர்கள்,திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் வைக்கவும் தடை என உத்தரவு பிறப்பிக்க சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. புத்தி சுவாதீனம் அற்றவர்கள் உரிமம் வைக்க கூடாது என்று சட்டம் இருந்தாலும் கூட சில நபர்களின் உரிமம் இன்று வரை புதுப்பிக்கப் படுகிறது. அதற்கும் ஒரு கண்காணிப்பு வேண்டும்.

    ReplyDelete
  3. எத்தனை வழக்கு இருந்தாலும் வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டம் தெளிவாக உள்ளது. வழக்கு இருந்தால் உரிமம் வைக்க கூடாது என்றால் சில சமூக ஆர்வலர்கள் உரிமமே வைக்க முடியாது.

    ReplyDelete