Sunday 31 May 2015

பொது இன்சூரன்ஸ் சட்டத்தில் உள்ள ஒரு தவறு

அனைத்து மோட்டார் வாகனங்களும் காப்பீடு செய்திருக்க வேண்டும். காப்பீடு சான்று வைத்திருக்க வேண்டும். இது மோட்டார் வாகன சட்டப்படி கட்டாயமானது. காப்பீடு பாலிசி வழங்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லீகல் இன்சூரன்ஸ் கட்டணம் என ரூபாய் 80 வசூலிப்பார்கள். இதன் மூலம் நீதிமன்றத்தில் இருந்து மேற்கண்ட வாகனத்தில் சென்ற நபர் காயமடைந்தாலோ, மரணம் அடைந்தாலோ அவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் தொகையை அந்த காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும். ஓட்டுனருக்கும் கூட இது பொருந்தும். ஆனால் வாகன உரிமையாளருக்கு இது பொருந்தாது.

ஒரு தனியார் வாகன உரிமையாளர் அவரது வாகனத்தில் சென்று அதில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் அந்த ஓட்டுனருக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் கொடுக்க சொன்னால் இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும். ஆனால் உரிமையாளருக்கு மொத்த கிளைம் ஒரு லட்சம் மட்டுமே. எனவே சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். இது பற்றிய விபரங்கள் பொதுவாக உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை. 

ஒரு நல்ல அரசு மக்களை சார்ந்த அரசு செய்ய வேண்டியது உரிமையாளருக்கும் இது போல் ஒரு கட்டணத்தை பெற்றுக் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என சட்ட திருத்தம் செய்து அவ்வாறு பாலிசி வழங்க சொல்ல வேண்டும். மோடி அரசு இதில் கவனம் செலுத்துமா?

No comments:

Post a Comment