Thursday 12 December 2019

ராணி வேலு நாச்சியார் போல் மைசூர் ராணி அபாக்கா சவ்டா

16ஆம் நூற்றாண்டின் மத்தியில்  போர்ச்சுகிய காலனியாதிக்கம் உச்சத்திலிருந்த சமயம்,   1555 கேரள  ஜமோரின் வம்ச மன்னர்களை வென்று, பின்பு சென்னை மைலாப்பூரை கைப்பற்றி கபாலீஸ்வரர் கோவிலை தரைமட்டமாக்கினார்கள், வடக்கு நோக்கி நகரவர்கள் பீஜப்பூர் சுல்தானையும் தோற்கடித்து  பம்பாயை கைப்பற்றினார்கள், பின்பு கோவாவை தலைமையிடமாக மாற்றினார்கள்.

இப்பொழுது அவர்களின் குறி அதிக வருமான ஈட்டக்கூடிய  மங்களூர் துறைமுகம் அதை கைப்பற்ற வேண்டும் என்றால்  14 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ளாள் என்ற துளு நாட்டை  கைப்பற்றவேண்டும், அந்த நாட்டை ஆண்ட  அரசி ராணி அபாக்கா சவ்டாவை குறைத்து மதிப்பிட்டு ஒரு சிறிய படையை அனுப்பி அவரை  கைது செய்து கோவா வர ஆணையிட்டார்கள்  உள்ளாள்  ராஜ்யத்திற்கு சென்ற போர்ச்சுகீசிய படை  உயிருடன் திரும்பவே இல்லை. 

அதிர்ச்சியில் உறைந்த போர்ச்சுகீசிய ராணுவம் இம்முறை பெரும் கப்பற்படையை Admiral Dom Álvaro da Silveira  தலைமையில் அனுப்பிவைத்தது.. இம்முறையும் படுதோல்வி படையை தலைமைதாங்கிய அட்மிரல் உயிருக்கு போராடிய நிலையில் வெறும்கையுடன் திரும்பினார்.

இப்பொழுது போர்ச்சுகீசிய ராணுவம் தங்களது திட்டத்தை மாற்றியது முதலில் மங்களூர் துறைமுகத்தை கைப்பற்றிவிட்டு பின்பு உள்ளாள் ராஜ்யத்தை கைப்பற்றி அழிக்க முடிவு செய்தது.. அவர்களின் திட்டப்படி போர்ச்சுகீசிய மிவவும் அனுபவம் வாய்ந்த தளபதி João Peixoto  என்பவருடன் ஒரு பெரும் படை மங்களூர் துறைமுகத்தை முற்றுகையிட்டு துறைமுகத்தை தரைமட்டமாக்கினார்கள். பின்பு உள்ளாள் நோக்கி பெரும்படை நகர்ந்தது அவர்களது எண்ணம் ஒரு சிறிய நாட்டின் ராணி தங்களது பெரும்படை மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முன்னாள் ஒன்றுமேயில்லை என்ற அசால்ட்டாக நினைத்துவிட்டார்கள், பெரும்படை  உள்ளாலை நோக்கி சென்றது அனால் ஆச்சரியம் இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளாள் ராஜ்ஜியம் வீழ்ந்தது.  போர்ச்சுகீசியர்கள் கொண்டாட்டம் களைகட்டியது..  
உள்ளாள் ராஜ்யத்தை தரைமட்டமாகவேண்டும் என்று அதன் தளபதி உத்தரவிட்டான். அதன் ராணி அபாக்கா சவ்டாவை தேடினார்கள்.

ராணி அபாக்கா சவ்டா பதுங்கியது பாயத்தான் என்று தெரியாத போர்ச்சுகீசிய ராணுவம் கொண்டாடிக்கொண்டிருந்தது. தனது ராணுவத்தின் கைதேர்ந்த 200 வீரர்களை தேர்ந்தெடுத்த 30வயது  ராணி அபாக்கா சவ்டா அந்த படைக்கு தான் தலைமையேற்றார்  போர்ச்சுகீசிய பெரும்படையை சுற்றி வளைத்து தாக்கினார்.. போர்ச்சுகீசிய தளபதி கொல்லப்பட்டார். 70 போர்ச்சுகீசியர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போர்ச்சுகீசிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் துண்டை கானம் துணியை கணம் என்று ஓட்டம் பிடித்தார்கள்.  நாம் ராஜ்யத்தை கைப்பற்றிவிட்டோம் அது போதும் என்று ராணி அபாக்கா சவ்டா நினைத்து போரை நிறுத்தியிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள் அது தான் இல்லை.

அன்று இரவே தனது அணைத்து படைகளையும் ஒருங்கிணைத்து மங்களூர் துறைமுகத்தை தாக்கினார். தன பெரும்படைகளுடன் துறைமுகத்திற்கு சென்ற ராணி அபாக்கா சவ்டா அங்கிருந்த போர்ச்சுகீசிய தலைமை தளபதி Admiral Mascarenhas என்பவரை கொன்று தனது வெற்றிக்கொடியை அங்கே பறக்கவிட்டார். அதோடு விடவில்லை மங்களூர் துறைமுகத்திற்கு வடக்கே 100 மைல் தொலைவிலிருந்து போர்ச்சுகீசிய பெரும் ராணுவத்தலத்தை தாக்கி ஒரு வாரத்தில் தரைமட்டமாக்கினார்.

போர்ச்சுகீசிய ராணுவத்தை  எதிர்த்து  ஒருவருடம் இரண்டு வருடமல்ல நாற்பது வருடம் போரிட்டார். வீரத்தால்  ராணியை வெல்லமுடியாது என்று தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள் துரோகத்தால் வெல்ல நிணர்த்தார்கள். அந்த துரோகத்திற்கு மகாராணியின் கணவரே துணைபோய்விட்டார். ஆம் மகாராணியை கணவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்போது போர்ச்சுகீசிய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இருந்தும் அவரது படை சிறையை தாக்கி மஹாராணியை மீட்டனர். தப்பிச்செல்லும் வழியில் போர்ச்சுகீசிய பீரங்கி குண்டிற்கு இறையனார் இந்த வீர மங்கை.

இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலையும், இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரை சுட்டியது 

இன்று நம் நாட்டில்  இந்த வீர வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாமும் தெரிந்துகொள்வோம். 

வீரவரலாற்றை நாமும் படித்து நம்முடைய குழந்தைகளுக்கும் சொல்லித் தருவோம்.

ஜெய்ஹிந்த்

அகில இந்திய நாடார் பேரவை தலைவர் திரு.சின்னத்துரை அண்ணாச்சி அவர்களின் பதில் இருந்து சுட்டது.

No comments:

Post a Comment