Thursday 12 December 2019

நாடார் சமுதாய தலைவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள்.

அகில இந்திய நாடார் பேரவை வாட்ஸ் அப் குழுவில் சகோதரர் பி.எம்.பி.துரை சில  அருமையான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அதில் இருந்து சுட்டு சில திருத்தங்கள் செய்து கீழே பதிந்துள்ளேன். இந்த கருத்துக்களின் அசல் உரிமையாளர் திரு.பி.எம்.பி.துரை தான். அவர் இந்த கருத்தை திருடியதற்கு வழக்கு தொடர மாட்டார் என நினைக்கிறேன். நல்ல கருத்துக்கள் என்பதால் அனைவருக்கும் தெரிய இதனை பதிவு செய்கிறேன். நாடார் சமுதாயத்தினர் இதனை தங்கள் குழுக்களில் பரப்பலாம். 

நாடார் சமுதாய அமைப்புகள் சார்பில் எடுக்கவேண்டிய முக்கிய விசயங்கள். 

1.கல்வி 
2.மருத்துவ உதவி
3.வேலைவாய்ப்பு
4.சொந்த தொழில்
5.அரசுதுறையில் பணிகள்


கல்வி

கல்வி உதவி தொகையானது ஏற்கனவே அகில இந்திய நாடார் பேரவை சார்பில் ஆரம்பித்து தொடங்கி விட்டார்கள். இதே போன்று தொடர்ந்து பேரவை சார்பில் கல்வியில் மேல்படிப்புக்காக துணை நிற்கவும் முடிவு செய்துள்ளார்கள். 

உதவியை நாடுபவர்களின் பொருளாதார பிண்ணனியை அறிந்து சரியான நபருக்கு மட்டுமே  பேரவை துணைநிற்கும் படி தொடர்ந்து திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். - இதே போல் மற்ற நாடார் சமுதாய அமைப்புகளும் செயல்படுத்தி நம் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் கல்வி மற்றும் மேற்படிப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

மருத்துவ உதவி

மருத்துவ உதவியும் ஏற்கனவே அவர்கள் செய்து வருகிறார்கள். இன்னும் தொடர்ந்து செய்வார்கள். மாற்றமில்லை. இதனையும் மற்ற சமுதாய அமைப்புகள் பின் பற்றலாம்.

அகில இந்திய நாடார் பேரவை தீவிரமாக கையில் எடுக்க உத்தேசித்துள்ள இதர அம்சங்கள். 


1.வேலை வாய்ப்பு

தனியார் நிறுவனங்கள் மற்றும் நமது சமுதாய பெரிய பெரிய கடைகள் என அனைவரையும் சந்தித்து பேசி ஒரு நிறுவனத்திற்கு 10 வேலையாட்கள் தேவைப்பட்டால் அதில் இரண்டு பேரை பேரவை சார்பாக தருகிறோம் என கோரிக்கை வைக்க வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்தையும் பேச வேண்டும்....பெரும்பாலான தொழிலதிபர்கள் சம்மதிக்க மாட்டார்கள்....சம்மதிக்கும் நல்லவர்களை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

நமது இணையதளத்தில் வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட இருக்கும் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் பட்டதாரிகளை பதிவு ஆர்டர் வரிசையில் வேலைக்கு அமர்த்தலாம்.

இந்த சேவைக்காக பெரும் முதலீடு தேவை இருக்காது...

நாம் ஒரு இணைப்பு பாலமாக மட்டும் செயல்பட வேண்டும் என்ற கருத்தை பொதுப்படையாக ஒத்துக் கொண்டாலும் நாம் வேலை வாய்ப்பிற்கு செய்ய வேண்டியது நிறைய உள்ளது. ஒரு நாள் விவி மினரல் நிறுவனத்தில் இன்டர்வியூவிற்கு வந்த ஒரு பணியாளர் தான் முதல் வகுப்பில் எம்.பி.எ பாஸ் செய்திருப்பதாகவும் தனது மதிப்பெண் 83 சதவீதம் என்றும் கூறினார். அதற்கு திரு. எஸ்.வைகுண்டராஜன் அண்ணாச்சி அவர்கள் உனது மதிப்பெண் சான்றிதழை நான் பார்க்க விரும்பவில்லை. நீ ஆங்கில மீடியத்தில் படித்தேன் என கூறுகிறாய். இந்து பத்திரிக்கையில் ஏதாவது ஒரு செய்தியில் ஒரு பாராவை தருவேன். அதனை பிழை இல்லாமல் நீ தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அதே போல் தினமணி பத்திரிக்கையில் ஏதாவது ஒரு பாரா தருவேன். ஆதனை பிழையில்லாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். முடியுமா என கேட்டார். வந்த பதில் முடியாது என்பது. எனவே வேலை வாய்ப்பிற்கு நாம் கூறும் நபர்களில் 85 சதவீதம் பேர் இதே நிலையில் உள்ளார்கள். முன்னேறிய சமூகத்தினர் 22 வயதிற்குள்ளாகவே ரகசியமாக கோவிலுக்கு செல்கிறேன் என கூறி சென்று தட்டச்சு, கம்ப்பூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஸ் என அனைத்தையும் படித்து விடுகிறார்கள். எனவே கேம்பஸ் இன்டர்வியூவிற்கு போகும் போது கூட மற்ற நபர்கள் ஒரு பக்கத்தை தட்டச்சு செய்து முடிப்பதற்கு முன் முன்னேறிய சமூகத்தினர் நான்கு பக்கத்தை முடித்து விடுகிறார்கள். இது தான் அவர்கள் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு காரணம். இன்று முதல் நம் சமுதாயத்திலும் என்ன படித்தாலும் கட்டாயமாக தட்டச்சு, கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஸ் படிக்க வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். பொதுவாக எல்லார் வீட்டிலும் தற்போது லேப்டாப் இருக்கும். எனவே 15 தினங்கள் மட்டும் தட்டச்சு சொல்லி கொடுக்கும் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து பிறகு டைப்பிங் டியூட்டரை இன்ஸ்டால் செய்து வீட்டிலேயே பழகி கொள்ளலாம். வேகம், பிழைகள் அனைத்தும் ஒவ்வொரு பக்கம் டைப் செய்த உடன் தெரியும். இவ்வாறு பயிற்சி எடுத்தால் பிள்ளைகள் கேம் விளையாடுவதற்கு பதில் முன்னேற்ற பாதையில் செல்லும் வாய்ப்பு வரும். இதற்கு நாம் சற்று மதிப்பு குறைவாக நினைக்காமல் இதன் அவசியத்தை பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். திரு.வைகுண்டராஜன் அவர்களின் வலியுறுத்தலால் தான் நாடார் சமுதாயத்தினர் அதிகம் நிறைந்த பகுதிகளில் திரு.பாபுஜீ நாடார் அவர்கள் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து ஒரு சேவையாக கிராம புற நாடார் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். கிராமபுறத்தில் கம்ப்யூட்டர் இயக்க தெரிந்தால் நகர்புற கடைகளில் கூட கிராம புற மக்கள் வேலை செய்ய முடியும். உதாரணத்திற்கு கேரளாவில் உள்ள சில நடுத்தர ஹோட்டல்களில் மேலாளரும், ஆபிஸ் பாயும் ஒரே நபர். மற்றும் ரூம் காலி செய்;யும் போது அருகில் உள்ள ஏர்போர்ட்டிற்கு ஹோட்டல் சார்பில் காரை ஓட்டி வந்து டிராப் செய்பவரும் அவரே. இவ்வாறு திறமையை வளர்க்க அனைவரையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு சமுதாயத்தினர் அனைவரும் செய்ய வேண்டியது ஒரு வேளை தவறுதலாக நம்மிடம் புகைபிடிக்கும் பழக்கம், மது பழக்கம் இருக்கலாம். இன்று முதல் அதனை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் தொடருங்கள். இது அடுத்த தலைமுறையினருக்கு உங்கள் மீது மரியாதையை கூட்டும். உங்கள் சொல்லை கேட்பார்கள். இவ்வாறு செயல்படுத்தினால் நமது சமுதாயத்தில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமே இல்லை. சிவகாசி விருதுநகர் பகுதி போல் 7 முதல் 10 வருடங்கள் பணியாளராக இருந்து பிறகு தனி தொழில் தொடங்கி முதலாளியாகி அவரும் வேலை வாய்ப்பு வழங்கும் நிலை வரும்.

2.சொந்த தொழில்

தொழில் கருத்தரங்கம் ஆயிரம் இல்லை இரண்டாயிரம் அரங்கம் போட்டாலும் முதலீடு இருந்தால் தான் ஒருவன் தொழில் தொடங்க முடியும்.
சரியான நபர்களுக்கு முதலீடு ஒரு பிரச்சனை என்றால் அதை நமது பேரவை சார்பில் செய்து கொடுக்கலாம்.

பெரிய தொகை இல்லை...சிறு தொழில்களுக்கு மட்டும் முன்னெடுக்கலாம்..
50ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுத்து அதை வட்டியில்லாமல் அல்லது அரை பைசா வட்டியோடு திருப்பி செலுத்தும் திட்டத்தை உருவாக்கலாம்.
இந்த திட்டம் பெரிய அளவில் சாத்தியமில்லை எனவும் தோன்றலாம்...ஏன்னா ஆளாளுக்கு வந்து உதவி கேட்கும் நிலை வரலாம்.

வங்கி போன்று கட்டுக்கோப்பாக நிறைய வரைமுறைகள், விதிமுறைகள் உருவாக்கி செயல்படுத்தினால் சரியான நபருக்கு மட்டுமே உதவி சென்றடையும் நிலையை உருவாக்கலாம்.

ஆலோசித்து முயற்சிக்கலாம். இதனையும் மற்ற சமுதாய சங்கங்களும் ஆலோசனை செய்யலாம். சமுதாய சங்கங்கள் பணம் பட்டுவாடா கொடுத்தால் இதனால் உடனடியாக மனமுறிவும், பகையும் வரும். ஏதாவது ஒரு கஷ்டத்தில் தொகையை செலுத்த முடியாத நிலை வரும். கண்டித்து கேட்கும் நபர்கள் மீது தாக்குதலும் வரும். இதற்கு பதிலாக சமுதாய பெரியவர்கள் சுமார் 10 முதல் 15 நபர்களை கொண்ட ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும். அவர்கள் தொழில் தொடங்க விருப்பமாக உள்ளவரை மட்டும் சந்திக்க கூடாது. அவர் செய்த மற்றும் செய்யும் தொழில், அவரது குடும்பத்தினர், குடும்ப பின்னணி போன்றவற்றையும் விசாரித்து இவரது மன உறுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் சமுதாய பெரியவர்கள் சுமார் 10, 15 நபர்களை கொண்ட ஒரு குழுவினர் சில வங்கிகளில் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிசீலனை குழு மன உறுதியை ஆய்வு செய்து தகுதி உள்ள நபர் என தெரியப்படுத்தினால் வங்கியோடு தொடர்புடைய குழு வங்கி மேலாளருக்கு பரிந்துரை செய்து தொகையை வங்கியில் இருந்து கடனாக கொடுக்க  செய்ய வேண்டும். மாதாமாதம் தவணை சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட நபரிடமும் வங்கியிடமும் உறுதி செய்யவும் வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் கடன் கொடுக்க வங்கி ஆவலாக இருக்கும். 

குறிப்பாக முதலீடு கேட்பவர்களின் குணநலன்  பேக்கிரவுண்ட் பற்றி விசாரிக்கும் நபர்கள் அடங்கிய குழு யார் என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஐந்து நபர்களை தவிர யாருக்கும் தெரிய கூடாது. அல்லது வீண் மன கஷ்டம் வரும். அதே போல் வங்கியில் தொடர்புள்ள குழு பற்றியும்  தெரியப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் தலைமை வங்கியில் முயற்சி செய்து பார்ப்போம் என்ற பதில் மட்டும் கூற வேண்டும். பொதுவாக எல்லா வங்கிகளிலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை மேலாளரே கடன் கொடுக்கலாம். எனவே வங்கியில் நல்ல தொடர்பில் இருப்பதும் முன்பு ஒரு பதிவில் திரு.பி.எம்.பி துரை பதிந்தது போல் வணிகம் சம்பந்தமான அனைத்து பதிவுகள், உரிமங்கள் மற்றும் வரி, ரிட்டர்ன்கள் சரியாக தாக்கல் செய்பவர்களுக்கு இலகுவாக இந்த உதவிகளை செய்ய முடியும். நமது சமுதாயத்திலேயே சமுதாய பற்று உள்ள சில ஆடிட்டர்கள், கன்செல்ட்டன்ட்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நமது சமுதாயத்தினருக்கு குறிப்பாக சிறு குறு வியாபாரிகளுக்கு ஒரு சேவையாக நினைத்து குறைந்த கட்டணத்தில் இந்த பணிகளை செய்து கொடுக்க நாம் வலியுறுத்தலாம். அதனை நாம் கிராஸ் செக்கும் செய்து கொள்ளலாம். அரசு திட்டங்களில் 10 சதவீதம் பலன் அடைந்தால் போதும் என திட்டமிடுவார்கள். ஆனால் மேற்சொன்னபடி நாம் செய்யும் போது நிச்சயம் 75 சதவீதம் பலன் கிடைக்கும். 


3.அரசு பணி

மாவட்டம் தோறும் இதற்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிப்பது தான் குழுவின் நோக்கம்.

அதற்கு முதற்படியாக ஏற்கனவே உள்ள பயிற்சி வகுப்புகளிடம் லிங்க் ஏற்படுத்தி கொண்டு குழு சார்பாகஇ உதவி கோறும் மாணவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மையங்களில் இணைத்துவிடலாம்.

நேரடியாக நாமே கட்டணத்தை பயிற்சி மையத்தில் செலுத்தி நல்ல தொடர்பை வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சுயுஊநு போன்ற பயிற்சி மையங்களில் படித்த குறிப்பிட்ட மாணவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுகிறார்கள்.

அதற்கான உட்கட்ட வேலையை அந்த மையம் செய்துவிடுகிறது......மையத்தின் பெருமைக்காக செய்வார்கள்.

இதே போன்று சிறந்த பயிற்சி மையங்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.

பின்னாட்களில் நாமே மாவட்டந்தோறும் பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்கவும் செய்யலாம். 

தொலைநோக்கு பார்வை கொண்ட மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாய நோக்கு கொண்ட தொழில் அதிபர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். 

தற்போதும் பொதுவாக நம் சமுதாய கல்லூரிகளில் இதற்கென திட்டங்கள் தீட்டி செயல்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் காந்தி ஹாஸ்டல் என்ற ஒரு ஹாஸ்டல் உண்டு. அங்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக நாடார் மாணவர்கள் தங்கி படிக்கலாம் என எனது நண்பர்கள் சிலர் கூறினார்கள்.

அரசு வேலை பயிற்சியை நாடார் மகாஜன சங்கம் முதன் முதலில் இதனை செயல்படுத்தியது. பிறகு தெட்ஷணமாற நாடார் சங்கம் செயல்படுத்தியது. ஆனால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இதனால் விவி கல்லூரியிலும், ஆதி பொறியியல் கல்லூரியிலும் ஐ.ஏ.எஸ் கோச்சிங் கொடுக்கிறார்கள். ஆதி பொறியியல் கல்லூரியில் மேற்கண்ட கோச்சிங்கிற்கு பணம் கிடையாது. நாம் அதனையே இன்னும் பெரிதாக டெவலப் செய்து சமுதாய சங்கங்களின் பரிந்துரையோடு நல்ல மதிப்பெண்ணோடு வரும் நம் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு கோரலாம்.

Annachi Mart 

இதை அடுத்து நமது பேரவையின் சார்பில் புதுமையான திட்டமாக 'அண்ணாச்சி மார்ட்' (Annachi Mart)  என்ற ஆன்லைன் சேவையை தொடங்குவது தான்.

கார்ப்பரேட் நிறுவனத்தால் நம் அண்ணாச்சி கடைகள் பாதிப்படையும் என்ற காரணத்திற்காக கார்ப்பரேட் லெவலுக்கு நாமும் இறங்கி செய்வோம் என்ற நோக்கத்தில் இத்திட்டம் நமது விவி அண்ணாச்சியின் ஆதரவோடு செயல்படுத்துவோம் என அகில இந்திய நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.
இதனை செயல்படுத்துவது அந்த கமிட்டியில் உள்ள நபர்களின் எண்ணத்தையும் திறமையையும் பொருத்து தான். திரு.பி.எம்.பி.துரையும் அந்த கமிட்டியில் முக்கியமான நபராக இருக்க வேண்டும். திரு.குணசேகரன் அதில் ஒரு நபராக இருக்க வேண்டும். மற்றும் வாணிபம் செய்யும் சமுதாய பற்று உள்ள நபர்கள் ஒவ்வொரு தொழிலில் இருந்தும் ஒருவர் அல்லது இருவர் கமிட்டியில் இருக்க வேண்டும். அப்போது தான் யதார்த்தமான நடைமுறை சிக்கல்கள்களை டிஸ்கஸ் செய்ய முடியும். இது பற்றி இளைஞர்கள் வணிகர்கள் கொண்ட சரியான குழு அமைத்தால் இதனை வெற்றி கண்டு வாணிபம் நாடார் சமுதாயத்தினரின் கையில் தான் இருக்கிறது என்ற நிலையை உருவாக்க முடியும். வருகின்ற சங்கமத்தில் அனேகமாக இதற்கு ஒரு தீர்வு எட்டப்படும் என நம்பலாம்.

இந்த பதிவின் மூலம் மற்றும பெருமை திரு.பி.எம்.பி. துரை அவர்களையே சாரும்.


No comments:

Post a Comment