Sunday 15 December 2019

மக்கள் ஏன் அண்ணாச்சி கடைகளை (மளிகை கடைகளை) ஆதரிக்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்கள்


*ஏன் மளிகை பொருட்களை மட்டும் ஆன்லைனில் எதிர்க்கிறோம்.*

கடந்த பத்து வருடங்களாகவே எல்லாவிதமான பொருட்களும் ஆன்லைனில் கிடைக்கின்ற வேலையில் தற்போது மளிகையும் ஆன்லைனில் கிடைக்கும் என்ற செய்திக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியதை அறிவோம்.

மளிகை பொருள் சில்லரை வர்த்தகமானது எந்த சூழ்நிலையிலும் யாராலும் அழித்துவிட முடியாது என்பது நிதர்சனம்.

இருந்தபோதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை விரும்பும் போது சில்லரை வர்த்தகம் சிறதளவு பாதிக்கும்...இதனால் பல கடைகள் வியாபாரத்தை கைவிட வாய்ப்புகள் அதிகம்.

சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்னும் போது ஆன்லைன் நிறுவனங்களை எதிர்த்து போராடி எந்த பிரயோஜனமும் இல்லை...அந்நிறுவனமும் பல கோடி முதலீடு செய்து ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து தான் இதை நடத்த முடியும்.

அதனால் நிறுவனங்களை எதிர்ப்பது சரியான நிலைப்பாடாக நான் எப்போதும் கருதுவதில்லை.

எக்காரணத்தினால் மக்கள் ஆன்லைன் சேவையை விரும்புகிறார்களோ அதை கண்டறிந்து நாமும் அதே சேவையை மக்களுக்கு வழங்கும்பட்சத்தில் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தாலும் நம்மையும் நம் தொழிலையும் அசைக்க முடியாது.

இதற்காக தான் நமது வியாபாரிகளுக்கென ஒரு ஆப் தயார் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆப் மூலம் கிடைக்கும் ஆர்டர்களை நமது அண்ணாச்சிகளின் கடைகளுக்கு வரிசை பிரகாரம் பகிர்ந்தளிக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.


காலம் செல்லும் வேகத்தில் நாமும் நமது களப்பணிகளை மாற்றி அமைத்து செயல்படுவது தான் சிறந்த வியாபாரிக்கான குணாதிசயம்.

கூடுதலாக மக்கள் ஏன் நமது அண்ணாச்சி கடைகளை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை தெரிவிக்கவும் கடமைபட்டுள்ளேன்.

*1. சம்பளம் இல்லா பாதுகாவலன் வணிகர்*

ஒவ்வொரு சின்ன சின்ன தெருக்களிலும் இருக்கும் மளிகை கடை தான் அந்த பகுதியின் பாதுகாப்பு அரண்.

மளிகை கடை அருகே திருட்டோ அல்லது கொலை போன்ற தவறான சம்பவங்களோ நடைபெறாது....மேலும் கடைகள் திறந்திருக்கும் வரையில் அந்த வழியாக மக்கள் தைரியமாக நடமாடலாம்.

அந்த கார்னர்ல உள்ள அண்ணாச்சி கடை மூடுறதுக்குள்ள அந்த தெருவை கடந்திருவோம்னு இரவு நேரத்துல மக்கள் பேசிட்டு போறத நிறைய கேட்டிருப்போம்

அதாவது சம்பளம் வாங்காத *Patrol Police* தான் வணிகர்கள்.

ஆன்லைன் வர்த்தகத்தால் கடைகள் குறைய வாய்ப்பு அதிகம்...கடைகள் குறைந்தால் மக்களின் பாதுகாப்பு அநேக இடங்களிகளில் கேள்விகுறியாகும்.

*2 . 15% நடுத்தர மக்களின் மாதச்சுமையை தாங்கி நிற்பது மளிகை கடைகாரன்  தான்.*

வசதியானவர்கள் ஆன்லைனில் வாங்கினால் வணிகர்களின் வியாபாரம் குறைந்து கடையை கைவிடும் நிலை வந்தால் மளிகை கடை அக்கவுண்ட்டை நம்பி வாழும் 15% மக்களின் நிலை கஷ்டமாக மாறும்.

அந்த சமயங்களில் ஆன்லைன் வந்து யாருக்கும் கைகொடுக்காது என்பதை மக்கள் உணர வேண்டும்.

*3. மக்களோடு மக்களாக வாழ்பவர்கள் வணிகர்கள்.*

மக்களின் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உணர்வாகவும், உண்மையாகவும் பழகுபவர்கள் மளிகை கடை வியாபாரிகள்..அவசர உதவிக்கு உங்ளுக்கு உறுதுணையாக இருப்பது வணிகர்கள் தான்..அவர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிக்காதீர்கள்.

*4. பெரும் தியாகிகள் வணிகர்கள்*

பல தலைமுறையாக வணிகம் செய்பவர்கள் தீபாவளி பொங்கல் என பண்டிகை நாட்களை மக்களுக்காக தியாகம் செய்து வந்திருக்கிறார்கள்.

வருடம் முழுதும் சம்பாதிப்பவர்களுக்கு பண்டிகை நாட்களில் லீவு விடுவதினால் எந்த நஷ்டமும் வரப்போவதில்லை...ஆனாலும் லீவு விடாமல் பண்டிகையையும் கொண்டாடாமல் தியாகம் செய்கிறார்கள் மக்களின் சந்தோசத்திற்காக..

தற்போது காலமாற்றம் என கூறி உங்களுக்காக இத்தனை தலைமுறைகளாக தன் சந்தோசங்களை தியாகம் செய்த வணிகர்களை தயவுசெய்து வஞ்சித்துவிடாதீர்கள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களை உணர்ந்து தொடர்ந்து மக்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவை அளிக்கும்படி வேண்டுகோள் வைக்கிறோம்..

திரு. பி.எம்.பி துரை என்பவர் அகில இந்திய நாடார் பேரவை குரூப்பில் எழுதிய ஒரு அருமையான பதிவு

No comments:

Post a Comment