Monday 30 January 2017

பெய்டு நியூஸ் சந்தியாவின் 30.01.2017 தேதிய வஞ்ச புகழ்ச்சி பற்றி குறிப்பு

    வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மலத்தை அள்ளி வீசும் சந்தியா பற்றி நேற்று தமிழில் ஒரு பதிவிட்டு இருந்தேன். ஆங்கில பதிப்பு இன்று வரும் என கூறி இருந்தேன். இன்னும் ஆங்கில மொழியாக்கம் முடியாததால் அது நாளை பதியப்படும். இதற்கிடையில் நேற்று வஞ்சபுகழ்ச்சியாக சில பதிவுகள் செய்திருந்தார். அது பற்றிய பதிலை கீழே பார்க்கலாம்.

    விஷத்தை விஷம் என்று தெரியாமல் இருக்க இனிப்பு தடவி கொடுப்பது போல் முதலில் திரு.வைகுண்டராஜனின் குணநலன்களை கூறுகிறார். அப்புநடேசன் எம்.எல்.ஏ. மூலம் மத்திய அரசுக்கு எழுதி இந்த பாலிசி மாற்றியதை கூறுகிறார். அதில் என்ன தவறு. இந்தியாவின் கனிமம் வெளிநாட்டிற்கு வீணே போவதை தடுத்து இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவும் பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் மாற்றப்பட்டதில் தவறு என்ன? அன்னிய நிறுவனங்களிடமும் பணம் வாங்கி கொண்டு திரு. வைகுண்டராஜனை திட்டுவதற்கு என்றே உள்ள சந்தியாவிற்கு இது தவறாக தெரிந்தால் அது அவர் குற்றமே தவிர மற்றவர்கள் குற்றம் இல்லை.

    இந்தியாவில் ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்ய வேண்டும் என உள்ளதா? குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர்கள் இந்த தொழிலை செய்யக் கூடாதா? இதில் என்ன தவறு உண்டு? 200 குற்றவழக்குகள், 150 உரிமையியல் வழக்குகள் - உண்மை தான். சந்தியா போன்ற பலமான பின்புலம் உள்ள அடியாட்களை வைத்திருக்கும் ஒரு மத்திய அமைச்சரை எதிர்த்து தொழில் செய்தால் இம்மாதிரி குற்ற வழக்குகளை பார்க்க வேண்டியது ஏற்படும் தான். முன்பகைக்கும் பணத்திற்கும் புலனாய்வு என மலத்தை அள்ளி வீசும் சந்தியாவிற்கு ஆதரவாக பல்வேறு அடியாள் கூட்டங்கள் பதிவு செய்கின்றனவே, நேற்று நான் பதிந்தவற்றை பார்த்து அவர்கள் பதில் கொடுக்க வேண்டாமா?

    பத்திரிக்கையாளர் என்ற முறையில் சட்ட புறம்பாக செய்யும் செயல்களை இம்மாதிரி பதிவிட்டு பாதுகாப்பது எவ்வகையில் நியாயம். நேற்றைய பதிவு அவர் செய்தது அவர் வாங்கிய காசுக்கு அதற்கு இரண்டு தினங்களுக்கும் முன்னால் திரு.வைகுண்டராஜனுக்கு எதிராக பதிவுகளை அனைவரும் படிப்பதற்கு தானே!! இதற்கு பெயர் பத்திரிக்கை தர்மமா?

    2015 ஜனவரியில் திரு.வைகுண்டராஜனை சந்தித்தேன் என கூறுகிறாரே!! நேற்றைய என்னுடைய பதிவு http://vetri3337.blogspot.in/2017/01/2912017.html ல் உள்ளது. அது அவருக்கும் அவருக்கு ஆதாரவானவர்களுக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டவை பொய் என்று சந்தியா சத்தியம் செய்ய தயாரா? அவளுக்கு ஆதார அளிப்பவர்கள் முதலில் அதை கேட்டு உறுதி செய்யுங்கள். சரி என்றால் என்று எங்கு என உறுதி செய்யுங்கள். அங்கு வருகிறோம். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி உண்டு என்றால், சந்தியாவின் 3 நாள் பதிவிற்கும் நீங்கள் பாராட்டி போட்ட பதிவுகளை வாபஸ் வாங்குங்கள். இல்லை என்றால் அவளது கொள்ளைக்கும் நாங்கள் துணை தான் என நேரடியாக பதியுங்கள்.

    கேக் சாப்பிட்டது, மற்றவர்களை சந்தித்தது ஆகியவற்றையும் வியாபாரத்திற்காக திரு.வைகுண்டராஜன் படத்தோடு போடும் இவர் ஒரு பத்திரிக்கையாளரா? நவீன விபச்சாரியா? இதனை வெளியிடும் பத்திரிக்கைக்கும் ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

    சுண்ணாம்பு கல் இருப்பு இருக்கும் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்க முயற்சித்தேன் என கூறியதில் என்ன தவறு?  ஒரு சிலரை போல் ஏமாற்றவில்லை. மிரட்டவில்லை. வாங்கிய பணத்திற்கு ஒரு படி மேலே போய் தன்னை மிரட்டுவதாக மற்றவர்கள் மூலம் பதிவிட்டு அப்படியும் தான் நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என நினைக்கவில்லை.

    ஒருவேளை இவரது கணவர் நடத்தும் டெல்டாபோர் காஸ்ட் நிறுவனத்திடம் வைகுண்டராஜன் ஒப்பந்தம் போட்டு மாத மாமூல் கொடுத்திருந்தால் இவர் எழுதி இருக்க மாட்டாரோ!!. அந்த நிறுவனம் இவரது கணவருக்கு உண்டா? இல்லையா? அதன் மூலம் திரு.வைகுண்டராஜன் மகனை சந்தித்து பேரம் பேசினாரா இல்லையா? இது நவீன வழிப்பறி இல்லையா? சந்தியாவிற்காக கொடி பிடித்த சத்தியவான்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.

    60 சதவீதம் கொடுத்து நான் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கினேன் என வைகுண்டராஜன் கூறியதாக பதிவிட்டு உள்ளாரே? அவரது குழந்தை அல்லது தந்தை பெயரில் இது உண்மை என சத்தியம் அடிப்பாரா? உண்மையில் நடந்தது சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க 25 முதல் 30 லட்சம் கேட்டார்கள். எனக்கு ஏராளமான அறிக்கைகள் தயாரிக்க வேண்டியது இருந்ததால் நான் சுற்றுச்சூழலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நபரை நிரந்தரமாக பணி அமர்த்தி அதன் மூலம் தயாரித்தேன் என கூறினார். தயாதேவதாசின் வழக்கிற்கு பொய் சாட்சி தயாரிப்பதற்காக அதனை மாற்றிக் கூறும் சந்தியா சத்தியம் அடிப்பாரா? கொடி பிடிக்கும் சத்தியவான்களே இதை கேட்டு சொல்லுங்கள்.

    சுரங்க துறையில் 15 கோடி ரூபாய் கேட்டதற்கு அதை கொடுக்க மாட்டேன் என கூறி நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றதில் என்ன தவறு உண்டு. சந்தியா சட்டவிரோதமாக கவுரவ மிரட்டல் கொடுத்தற்கும் தான் திரு.வைகுண்டராஜன் பணியவில்லை.

    சந்தியாவின் நோக்கம் எந்த கனிமங்களும் வீணாகலாம். ஆனால் அரசுக்கு வருவாய் வரும் என்றாலும், திரு.வைகுண்டராஜன் வகையறாவிற்கு அது உபயோகப்படக் கூடாது. இந்த நோக்கம் ஒரு பொது நன்மை உள்ளது தானா? நேற்று ஒரு நண்பர் தமிழகம் முழுவதும் சட்ட விரோத சுரங்க பணி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என பெங்களுரில் இருந்து பதிவிட்டு இருந்தார். நிச்சயம் அவர் இந்த கொள்ளை கூட்டத்தை சேர்ந்த பெங்களுர் உறுப்பினராக தான் இருப்பார்.

    படிப்பரியா கீழ்தட்டு மக்கள் அருவா, கத்தி உபயோகித்து கொள்ளை அடிக்கும் போது, படிப்பறிவு உள்ள மேல்தட்டு சந்தியா மற்றும் அவரது கூட்டாளி போன்றவர்கள் பத்திரிக்கை செய்தி, புலன் விசாரணை என கவுரவ மிரட்டல் விடுத்து கொள்ளை அடிக்கிறார்கள். நண்பரே நான் ஆதாரங்களை தான் பதிய சொன்னேன். நீங்கள் பொங்க வேண்டாம். சந்தியாவிடம் சொல்லி ஆதாரங்களை பதிய சொல்லுங்கள். அல்லது எனது பதிவில் குறிப்பிட்டபடி அவர் எதையும் பார்க்கவில்லை என சத்தியம் அடிக்க சொல்லுங்கள்.

    திரு. தனுஷ்கோடி ஆதித்தனை பேட்டி கண்டதாக கூறி உள்ளீர்களே! வேலிக்கு சாட்சி சொல்ல வரும் ஓணான் பிரபீர் பானர்ஜி பற்றிய விபரங்களை ஏன் நீங்கள் வெளியிடவில்லை. நீங்கள் வெளியிடுங்கள். அவரும் உங்கள் கொள்ளை கூட்டத்தில் ஒரு உறுப்பினர் என்பதை ஆதார பூர்வமாக நிரூபிக்கிறோம்.

    உண்மை. 51 சதவீதம் நியாயம் இருந்தால் வாதாடுவது உண்மை தான். அதில் என்ன தவறு. விக்டர் ராஜமாணிக்கம் அவர் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்தார் என பதிவிட்டு உள்ளீர்களே! தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற அந்த ஆவணங்களை நீங்கள் பார்வையிடவில்லையா?? அவ்வாறு பார்வையிடவில்லை என நீங்கள் சத்தியம் அடிக்க தயாரா? உங்கள் கொள்ளை கூட்டத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் என்பதால் நீங்கள் நற்சான்று வழங்குகிறீர்களா?

    திரு.வைகுண்டராஜன் வழக்குகளால் தொந்தரவு பண்ணுவார் என கூறுகிறீர்களே!! அவரால் வழக்கு போடப் பட்ட நபர்களின் பட்டியலை கூறுங்கள் பார்ப்போம். உங்களை போன்ற படித்த கிரிமினல்களின் பின் புலத்தோடு திரு.வைகுண்டராஜன் மீது தான் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளனவே தவிர திரு.வைகுண்டராஜன் யார் மீதும் வழக்கு போடவில்லை. ஒரு பெருச்சாளியை அடித்தால் கூட போக்கிடம் இன்றி அடிக்கும் போது அடிப்பவர் மேலே பாயும். அப்படி இருக்கும் போது நியாயமாக தொழில் செய்யும் திரு.வைகுண்டராஜனை வாங்கிய பணத்திற்காக தொந்தரவு செய்தால் எதிர்ப்பதில் என்ன தவறு. ககன்தீப் சிங் பேடி பற்றி நேற்று பதிந்துள்ளேன். அத்தனை ஆவணங்களையும் ஜனவரி 2015-ல் நீங்களே பார்த்தீர்கள். இல்லை என நீங்கள் உங்கள் குழந்தை மீது சத்தியம் அடிப்பீர்களா?

    தயாதேவதாஸ் மட்டும் தொடர்கிறார் என கூறுகிறீர்கள். உண்மை தான். காரணம் உங்களை போன்ற படித்த கிரிமினல்கள் அவரோடு உடன் இருந்து திட்டமிட்டு கொடுப்பதும் திரு.வைகுண்டராஜன் நியாயவானாக இருப்பதும் தான் அதற்கு காரணம்.

    குடும்பத்தில் சகோதர்களுக்குள் தகராறு வராதா!! இது உங்களுக்கு ஒரு செய்தியா!!! நண்பருக்கு உதவி செய்வது ஒரு செய்தியா!!!!

    திரு.வைகுண்டராஜனின் ஆரம்ப கால வாழ்க்கையை கூறுகிறீர்களே!! உங்களது ஆரம்ப கால வாழ்க்கையை பதிவிடுங்களேன். ஒரு பெரிய அரசியல் தலைவர், அவரது மகன் இவ்வாறு உங்களது தொடர்பு நீண்டு கொண்டே போகும் என சொல்வார்களே!! அதனையும் தயவு செய்து பதிவிடுங்களேன்.

    உங்களையும் கூட யாருக்கும் பினாமி என்று குறிப்பிட்டு சொல்லி விடவும், பதிந்து விடவும் முடியும். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஒரு நிறுவனத்திலும் பங்கு இல்லையா? மறுத்து சொல்லுங்கள் பார்ப்போம். உங்களுக்கு கொடி பிடித்த அடிவருடிகளில் ஒருவருக்கும் பங்கு இல்லையா? நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வது ஒரு குற்றமா? தொழிலாளர்களிடம் பிரியமாக இருப்பது ஒரு குற்றமா?

    உங்களது பத்திரிக்கையை விளம்பர படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு நல்லவரை பல்வேறு போஸ்களில் படத்தையும் போட்டு வாங்கிய பணத்திற்கு வாயால் எடுத்து எழுதி உள்ளீர்களே, இதற்கு பதிலாக பத்திரிக்கையை நடத்துபவர், எழுதுபவர் குடும்பத்தில் உள்ள நபர்களின் படங்களை பல்வேறு போஸ்களில் பதிவீர்களா!!!

    இப்போதும் சொல்கிறேன். நான் நேற்று பதிந்தவற்றை உண்மை அல்ல என நீங்கள் உங்கள் குழந்தை மீது அல்லது உங்கள் தந்தை மீது உங்களுக்கு வக்காலத்து வாங்கிய நபர்கள் முன்னிலையில் ஒரு கோவிலில் வைத்து சத்தியம் அடியுங்கள். அந்த இடத்திலேயே நான் உங்களிடம் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்கிறேன். அதனை எழுத்து மூலம் உங்கள் பத்திரிக்கையில் வெளியிடவும் கடிதம் தருகிறேன். இல்லை என்றால் அதே நபர்கள் முன்னிலையில் அனைத்தும் உண்மை என்பதை உங்களிடம் அவற்றை காண்பித்த வெங்கடேஷ்சும், திரு.வைகுண்டராஜனும் ஒன்றாக வந்து சத்தியம் அடிப்பார்கள். சவாலுக்கு தயாரா???

    பதிலை பதியுங்கள். அனைவருக்குமே தெரியட்டும். உங்களுக்காக பொங்குபவர்களுக்கு உண்மை தெரியட்டும். இதன் ஆங்கில பதிப்பும் விரைவில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.   

1 comment:

  1. ஐயா உங்கள் மீது காவல்துறை சட்ட பிரிவு 379 கீழ் வழக்கு பதிவு செய்யவில்லையா?இந்த பிரிவு திருட்டு குற்றத்திற்காக பதியப்படும் பிரிவு .

    ReplyDelete