Monday 30 January 2017

பெய்டு நியூஸ் சந்தியா ரவிசங்கர் 29.1.2017 தேதிய செய்தி பொய் என்பதற்கான ஆதாரங்கள்

பெய்டு நியூஸ் சந்தியா ரவிசங்கர் 29.1.2017 அன்று மீண்டும் வைகுண்டராஜனுக்கு எதிராக எழுதினார். அவரது கணவருக்கு நியூஸ் 7 தொலைகாட்சியில் வேலை கேட்டு கொடுக்க வில்லை என்ற கோபம் மட்டும் அல்ல, திரு.ரவி சங்கர் அந்த தொலைகாட்சியை நானே உடன் இருந்து தொடங்கி தருகிறேன் என திரு. வைகுண்டராஜன் அவர்கள் மகன் சுப்பிரமணியனை 17.10.2013 அன்று நேரில் சந்தித்தும் மின் அஞ்சல் மூலமும் கேட்டு அதற்கு சம்மதிக்காத நிலையில் அந்த கோபத்தோடு மட்டும் இன்றி வைகுண்டராஜன் போட்டியாளர் தயாதேவதாசிடம் மாத சம்பளம் வாங்கி வரும் சந்தியா எழுதுவது அனைத்தும் பொய் என்பதை கீழே விவரித்து உள்ளேன். இதனை சந்தியா மறுப்பதாக இருந்தால் மறுத்து எழுதட்டும். அந்த கட்டுரையை பாராட்டிய நபர்கள் உண்மை தெரிவதற்காக தயவு செய்து இதனை வாசியுங்கள்.  இதன் ஆங்கில பதிப்பு நாளை பதிவு செய்யப் படும். 

28.01.2017 அன்று சந்தியா எழுதியதற்கு மறுப்பு ஏற்கனவே அனுப்பப் பட்டு பதிவிடப்பட்டது. அவருக்கும் டிவிட்டர் மூலம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

1)    அவை 39 லட்சம் இல்லீகல் மைனிங் தயாதேவதாஸ் பற்றி ஏன் எழுதவில்லை?
2)    அவருக்கும் சந்தியாவிற்கும் உள்ள உறவு பற்றி ஏன் எழுதவில்லை.?
3)    அந்த 39 லட்சத்தில் உள்ள யுரேனியமும் தோரியமும் எங்கே சென்றது என ஏன் எழுதவில்லை?
4)    சந்தியாவின் தோழி ராதிகாவின் தந்தை சுந்தரம் மற்றும் சுந்தரித்தின் நண்பர் கல்யாணராமன் பற்றியும் மற்றும் அலுவலக முத்திரை இன்றி கலெக்டர் ஆஷிஷ்குமாரின் கடிதம் சந்தியாவிற்கு கிடைத்தது எப்படி? அதை கொடுத்தது ஆஷிஷ்குமாரா அல்லது தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனா? என்பது பற்றி எந்த பதிலும் இல்லை.  இவற்றை பல்வேறு நபர்கள் கேட்டு இருப்பதை டிவிட்டரில் பார்க்கலாம்.

ஆனால் இந்த அடியாள் கூட்டத்தில் உள்ள, ஆர்எஸ்எஸ் தலைமையை விவி-க்கு எதிராக திருப்பும் பணியை மேற்கொண்டுள்ள கல்யாணராமன் பற்றியும், இவரது தொழில் பங்காளி ராதிகா பற்றியும் பேசாதீர்கள் என்று பொங்குகிறார். மற்றவற்றில் அமைதியாக இருக்கிறாரே ஏன்? அதற்கு விளக்கம் கொடுத்தால் என்ன?

வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இதை பாராட்டி வேறு பல நபர்கள். அனைவரும் ஒவ்வொரு வழியில் இந்;த அடியாள் கூட்டத்தோடு தொடர்பு உடையவர்களா என்ன என்பது தெரியாது. எனவே அனைவரும் பொதுவானவர்கள் என நினைத்து அனைவருக்கும் உண்மை தெரிய இந்த பதிவு செய்யப்படுகிறது.

சந்தியாவின் உள்நோக்கத்தை வெளி கொண்டு வர வேண்டும். எனவே இந்த 30 வருட சரித்திரத்தை இங்கு பதிவிட வேண்டியது அவசியம்.

திரு.வைகுண்டராஜன் எனக்கு நன்றாக தெரியும். அவரது குணநலன்களும் சந்தியா இன்றைய தேதியில் (30.01.2017) பதிவிட்டதை ஒத்து தான் இருக்கும். ஆனால் நிச்சயம் திரு.வைகுண்டராஜன் தவறு செய்ய மாட்டார். 51 சதவீதம் நியாயம் இல்லாமல் வாதிட மாட்டார். காசுக்கு கிரையம் போன சந்தியா பற்றியும் சரி மற்றவர்களை பற்றியும் சரி. இவர் ஒன்றும் கவலை படுவது கிடையாது. இதை கூறினால் தர்மனும் ராமனும் கூட வனவாசம் சென்றார்கள். இப்போது நமக்கு வனவாசகாலம் என நினைப்போம் என்று ஒரு வார்த்தை பதிலில் கூறி விடுவார். ஆனால் பணத்திற்காக ஒரு தொழில் போட்டியினருடன் சேர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிடும் இம்மாதிரி பத்திரிக்கைகள் மற்றும் திமிர் பிடித்த ரிப்போர்ட்டர்கள் ஆகியோர் இந்த சமுதாயத்தில் இருந்து ஒழிக்கப்பட்டால் தவிர இந்தியாவின் முன்னேற்றம் கேள்வி குறியே!!

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற இனத்திலும் ஒரே கல்லில் பல வருமானம் என்ற இனத்திலும் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த வேலையை செய்கிறார்கள். விவி நிறுவனத்தின் வளர்ச்சியால் தயாதேவதாஸ் மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒரு வெளிநாட்டு கம்பெனியும் பாதிக்கப்பட்டது. ஆதாரம் : goo.gl/0HDqjg. அவை சிங்கப்பூரில் சந்தியாவோடு பங்காக சேர்ந்து கம்பெனி வைத்துள்ள சுந்தரத்தின் மகள் ராதிகாவிடம் பணத்தை செட்டில் செய்தார்கள். இந்தியாவில் தயாதேவதாசும் அவர் பங்கிற்கு பணத்தை செட்டில் செய்தார். இந்த தொழிலில் ஏகபோகமாக வர வேண்டும் என நினைக்கும் குஜராத் அதானியும் இவ்வாறு செயல்படுத்துவதற்கு ஒரு தொகையை ஒதுக்கி செட்டில் செய்தார். வீணே தொழில் செய்பவரை ஏன் இடையூறு செய்கிறீர்கள் என்ற கேள்வி வரக் கூடாது அல்லவா?? எனவே அவரை இல்லீகல் மைனிங் என்ற முத்திரை குத்தினால் யாரும் துணைக்கு வர மாட்டார்கள் அல்லவா?

ஒரு நாயை வெறுமனே கல்லால் அடித்தால் வாயில்லா பிராணியை கல்லால் அடிக்கிறார்கள் பாவம் என கூறுவார்கள். அதையே வெறிநாய் என கூறி கல்லால் அடித்தார் மற்றவர்களும் சேர்ந்து கல்லால் அடிப்பார்கள். அதே தத்துவத்தை தான் சந்தியா அண்ட் கோ இதில் செயல்படுத்துகிறது.

    இதில் மிகப் பெரிய கேங்கே உள்ளது. ஓய்வு பெற்ற உயர் காவல் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், புவியியலாளர்கள் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் என ஒரு கேங்கே உண்டு. ஓய்வு பெற்ற உயர் காவல் அதிகாரி தினசரி மூன்று மணி நேரத்தை சந்தியாவோடு செலவிடுகிறார். அவரது அறிவுரை படி தான் செய்திகள் வெளி வருகின்றன. எவ்வப்போது செய்தி வெளியிட வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் இரண்டு ஓய்வு ஐஏஎஸ்-களும் தான்.

    பத்திரிக்கையில் வெளியிட்ட உடன் அதனை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் பொறுப்பை பதவி உயர்வுக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற ஒரு நீதிபதி ஏற்றுள்ளார். நேற்றைய (28.01.2017) பதிவிற்கு கேட்ட கேள்விகளுக்கு சந்தியா பதில் கூறவில்லை. ஏனென்றால் அவருக்கு கொடுக்கப் பட்ட பணம் கேள்விக்கு பதில் கொடுக்க அல்ல. மாறாக விவி-க்கு எதிராக மலத்தை அள்ளி வீச மட்டுமே.

சில அதிமேதாவிகள் வானாளாவ புகழ்ந்து இருந்தார்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி இல்லையா? இந்தியாவில் அரசு நடைபெறவில்லையா? இந்தியாவில் நீதித்துறை இல்லையா? 30 வருடங்களாக அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டார்கள். இப்போது விழித்தார்கள் என கூறுகிறோமே ஏன் அது இவ்வாறு இருக்காது? 30 வருடங்களாக அதிகாரிகளும் நீதிமன்றமும் நேர்மையாக செயல்பட்டன. ஆனால் தற்போது ஒரு வட நாட்டு கம்பெனிக்கு உதவுவதற்காக மத்திய அதிகாரிகள் எதிராகவும், அதே போல் சொல்ல முடியாத சில காரணங்களுக்காக மாநில அதிகாரிகள் எதிராகவும் செயல்பட்டு இருக்கலாம் அல்லவா? என யாரும் கேட்கவில்லை. பாபா ராம்தேவ் நூடுல்ஸ் வருவதற்கு முன்னோட்டமாக செய்யப்பட்டது இங்கு செயல்பட்ட இதர நூடுல்ஸ் கம்பெனிகளை அழித்தது தான். அதே திட்டம் இப்போது இந்த கூட்டத்தால் செயல்படுத்தப் படுகிறது.

    சந்தியா 28.01.2017-ல் வெளியிட்ட செய்தியில் உள்ள குற்றச்சாட்டுக்கு விவி தரப்பில் கொடுத்த விளக்கத்தை ஏன் போடவில்லை என எந்த அதிமேதாவியும் கேள்வி கேட்கவில்லை. இன்று சந்தியாவே வைகுண்டராஜனை பேட்டி கண்டதை பதிவு செய்துள்ளார். இனியாவது மேதாவிகள் இந்த கேள்வியை கேட்கிறார்களா பார்ப்போம். இந்த கேள்விகளை கேட்கவில்லை என்றால் இவர்கள் அனைவருமே இந்த கூட்டு சதியில் ஒவ்வொரு வகையில் பங்கு உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கும்.

வாந்தி எடுத்தது போல் சந்தியா பதிந்து இருந்தாரே இல்லீகல் மைனிங், 30 வருடமாக அதிகாரிகள் சதி செய்தார்கள் என்று. 1996-ல் விவி பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீனவர்களால் தாக்கப் பட்டு வைகுண்டராஜனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அந்த வஞ்சத்தை மனதில் வைத்திருக்கும் ஒரு நபர் வேறு எவ்வாறு மனு கொடுப்பார்? இதனை விடுத்து மாநில அரசு கணக்கு படி அவர் மொத்தம் இத்தனை டன் தான் குவாரி செய்வதற்கு பணம் கட்டினார். ஆனால் இத்தனை டன் ஏற்றுமதி செய்து விட்டார். இதோ ஆதாரம் என ஒரு ஆதாரத்தை கொடுத்தாரா?

    2013 முதல் 2016 வரை ரூபாய் 40000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறினாரே. ஆதாரம் கொடுத்தாரா!!! சில தொழிற்சாலைகளின் புகைப்படத்தை போட்டார். மணல் தொழிற்சாலையில் இவ்வாறு இல்லாமல் வேறு எவ்வாறு இருக்கும்? அதானி எடுக்க உள்ள இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் மணவாளக்குறிச்சியில் இயங்குகிறது. அந்த தொழிற்சாலையை அதானி எடுப்பதால் தான் அதன் அருகில் உள்ள இணையத்தில் துறைமுகத்தை அவர் அமைக்கிறார். அதற்கு அனைவரும் கொடி பிடிக்கிறார்கள். அந்த தொழிற்சாலையில் மணல் எவ்வாறு பிரிக்கப் படுகிறது? அது பற்றி சந்தியா வாய்  திறந்தாரா? அந்த தொழிற்சாலைக்கு கடலோர மேலாண்மை அனுமதி உள்ளதா? அந்த தொழிற்சாலை வள்ளியாற்றில் இருந்து எவ்வாறு தண்ணீரை எடுத்து மணலை பிரிக்கிறது? இது பற்றி வாய் திறந்தாரா??

    ஆதாரம் இருந்தால் அவர் காட்டினால் நானும் அவரை ஆதரிக்கிறேன். மாறாக வாங்கிய பணத்திற்கு மலத்தை அள்ளி வீசும் சந்தியாவின் வேலையை படித்தவர்கள் என கூறுபவர்கள் கண்டிக்க வேண்டும்.

இதர நிறுவனங்களை அவர் பேசவில்லை. ஏனென்றால் இவர்கள் எல்லாம் இவருக்கு ஒழுங்காக மாமூல் கொடுப்பவர்கள். அவர் மாமூல் கொடுக்காத வைகுண்டராஜனை மட்டுமே தாக்கி வருகிறார்.

சந்தியா 29.01.2017 அன்றும் இவ்வாறு உண்மைக்கு புறம்பான ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார். சட்டம் மிகவும் மோசமாக நிர்வகிக்கப் படுவதாகவும் எனவே சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி திரு. வைகுண்டராஜன் தவறு செய்கிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். எந்த சட்டத்தில் உள்ள எந்த ஓட்டை? ஓட்டை  இருந்தால் அதே ஓட்டையை மற்றவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை.? ஏராளமான உரிமங்கள் அவருக்கு உள்ள நிலையில் அவர் சட்டவிரோதமாக செயல்பட வேண்டிய தேவை என்ன? என்னென்ன சட்ட விரோதங்கள்.? பட்டியல் இடுங்கள்.

பொலிட்டிக்கல் டிவிஸ்ட் என்பதற்கு பதில்

1998-ல் திமுக அரசு ஒரு கமிட்டி அமைத்தது. அவர்கள் பெரிய அளவு தவறை கண்டுபிடித்தார்கள். ஆனால் நடவடிக்கை இல்லை என குறிப்பிடுகிறார். அவ்வாறு எந்த கமிட்டியும் அமைக்கப் படவில்லை. ஆய்வும் நடைபெறவில்லை. அமைத்திருந்தால் எங்கே அந்த அறிக்கை? அந்த அறிக்கை அவர் திருட்டுதனமாக பெற்று இருந்தால் அல்லது திருடி இருந்தால் அறிக்கையின் கோப்பு எண்ணை மட்டுமாவது கொடுங்கள் பார்ப்போம். உண்மையில் நடந்தது என்ன? 1998-ல் திரு.வைகுண்டராஜனின் போட்டி கம்பெனியான இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனியில் தயாதேவதாசோடு பங்குதாரராக உள்ள மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் திருச்செந்தூர் தொகுதியில் ராமராஜனால் தோற்கடிக்கப்பட்டார். அதில் திரு.வைகுண்டராஜன் எதிர்த்து வேலை செய்தது தான் தோல்விக்கு காரணம் என சில பத்திரிக்கைகளில் எழுத வைத்தார்கள். அதை வைத்துக் கொண்டு அப்போதைய மீன் வளத்துறை மந்திரி ஜெனிபர் சந்திரன் மற்றும் மூன்று மாவட்ட திமுக செயலாளர்கள் மற்றும் 20 எம்எல்ஏ-க்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று முதல்வர் கருணாநிதியிடம் ஒரு மனு கொடுத்தார்கள். வைகுண்டராஜன் இருந்தால் தென் மாவட்டங்களில் திமுக அடியோடு அழிந்து விடும் என்று. இது தான் மனுவே தவிர வேறு எந்த ஆய்வும் கிடையாது.

வருடத்திற்கு குறைந்தது நான்கு முறை திரு.தயாதேவதாஸ் பல்வேறு நபர்கள் பெயரில் புகார்கள் அனுப்புவார். அவ்வப்போது மத்திய மாநில அரசு அதிகாரிகள் தனியாகவும், கூட்டாகவும் ஸ்தல பார்வையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து புகார்களை உண்மையல்ல என்பதை அறிக்கை செய்வார்கள். இதற்கு அரசியல் பலம் தேவையில்லை. மாறன் சகோதரர்களை போல் முதல்வரின் பேரன் என்றோ, 3 ரூபாய் பத்திரிக்கை வாங்கினால் ரூபாய் 10 பொருள் இலவசம் என்று கொடுத்தோ, விவி நிறுவனம் அரசியல் பலத்தை பெறவில்லை. மாறாக இதர அனைத்து நிறுவனத்தினரும் அரசின் நிலத்திற்கும் தனியார் நிலத்தை கையகப்படுத்தி தரவும் போராடி வரும் போது விவி நிறுவனத்தினர் நிலங்களை அவர்கள் பெயருக்கு கிரையம் பெற்று உரிமம் வாங்கினார்கள். எனவே உரிமம் பெறுவது சுலபமாக இருந்தது. இது தான் உண்மையே தவிர சந்தியா குறிப்பிடுவது போல் அரசு எந்த நிலையிலும் விவி நிறுவனத்திற்கு சலுகை காட்ட வில்லை. குறிப்பிட்டு ஒரு இனத்தை கூறச் சொல்லுங்கள் பார்ப்போம். மாறாக விவி-க்கு எதிராக அரசு அதிகாரிகளை சந்தியா கொள்ளை கூட்டத்தின் தலைவர் தயாதேவதாஸ் எவ்வாறு எப்போது எல்லாம் உபயோகித்தார் என்பதை பின்னால் தேவைப்படும் இடங்களில் நான் விவரிக்கிறேன்.

பிரதமர் வரை செல்வாக்கு செலுத்தக் கூடியவர் தயாதேவதாஸ். எனவே மத்தியிலும் மாநிலத்திலும் அவர் நினைத்ததை செயல்படுத்தினார். ஆதாரம் : goo.gl/rRMRaQ


எனவே அரசின் பின்புலம் விவி-க்கு கிடையாது. மாறாக சந்தியா உறுப்பினராக உள்ள தயாதேவதாஸ் கூட்டத்திற்கு தான் உண்டு.

1998 வரை தனியார் பங்களிப்பு மிகவும் குறைவு. திரு.தயாதேவதாசை இந்த தொழிலில் உள்ளே கொண்டு வருவதற்காகவும் அரசிடம் இருந்து பெரும் தொகைகளை பெருவதற்காகவும் தயாதேவதாஸ் விக்டர் ராஜமாணிக்கம் இருவரும் சேர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒரு கான்பரன்ஸ் ஏற்பாடு செய்து தற்போது ஆண்டுக்கு வெறும் 40 கோடி ரூபாய்க்கு தான் இந்திய அரசு நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. விதிகளை தளர்த்தி தனியாரை அனுமதித்தால் ஏற்றுமதி ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் போகும் என விக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த மேடையில் திரு.தயாதேவதாசும் உண்டு.இந்த தீர்மான நகலை சந்தியா ஜனவரி 15-ல் படித்து பார்க்கவில்லையா? இதனை மறுக்க முடியுமா?

மேலும் விக்டர் ராஜமாணிக்கம் அவரது சகோரர் சமாதானம் மூலம் இக்கனிம இருப்புகளை ஆய்வு செய்ய என பல கோடி ரூபாயை பெற்று அவரது மாணவர்கள் மூலம் ஆய்வு பணியை முடித்து அதனை அரசுக்கு தெரிவிப்பதற்காக முன்பாக தயாதேவதாசுக்கு தெரியப்படுத்தி தயாதேவதாஸ் மூலம் 65 குத்தகை விண்ணப்பங்கள் சமர்பித்தார்கள். அத்தனையும் அரசு மற்றும் மூன்றாம் நபர்களின் நிலம். எனவே அவர்களால் சுலபமாக உரிமம் பெற முடியாத நிலை இருந்தது.

இந்த கனிமங்களின் ஆய்வு பணிக்கு உள்ள பணத்தை முழுவதையும் ஜெராக்ஸ் சார்ஜ் மற்றும் தொலைபேசி கட்டணம் என்ற வவுச்சரை வைத்து விக்டர் ராஜமாணிக்கம் கையாடல் செய்தார். மேற்கண்ட வவுச்சர்களின் புகைப்பட நகல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்டு சந்தியாவிடம் 2015 ஜனவரியில் திரு.வைகுண்டராஜனால் காட்டப்பட்டது. நேர்மையான சந்தியா இது பற்றி எந்த கட்டுரையாவது எழுதினாரா? அதே போல் விக்டர் ராஜமாணிக்கம் பல்கலைக்கழகத்தில் அனலைஸ் செய்தது போல் ஒரு பொய் ஆவணத்தை பல்கலைக்கழக லட்டர் தாளில் தயாரித்து தயாதேவதாஸ் மைனிங் பிளானில் இணைத்ததை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற பதிலையும் மைனிங் பிளானையும் ஒன்றாக வைத்து காண்பிக்கப்பட்டது. ஏன் எழுதவில்லை? எழுதாதற்கு காரணம் அந்த விக்டர் ராஜமாணிக்கமும் சந்தியாவின் கொள்ளை கூட்ட கேங்கில் ஒரு ஆள்.

1998-ல் திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருக்கும் போது இந்தியாவில் உலக கையிருப்பில் மூன்றில் ஒரு பகுதி கடலோர கனிமங்கள் உள்ளன. ஆனால் சுரங்க அளவு மிகவும் குறைவு.  கடலோர கனிமங்கள் வீணாகின்றன  என்பதை அறிந்து அரசு நிறுவனங்களால் அவற்றை குவாரி செய்ய முடியாது எனவே தனியாருக்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அறிவிக்கை செய்தார்கள். அதன் அடிப்படையில் தான் தனியார்கள் உள்ளே நுழைந்தது. திரு.வாஜ்பாயின் மேற்கண்ட முடிவால் தான்  ஆண்டுக்கு 35 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கனிமங்களின் ஏற்றுமதி தற்போது ரூபாய் 4500 கோடிக்கு வந்தது. இந்த தொழிலில் 700 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றது பல ஆயிரமாக பெருகியது. கல்யாண ராமனுக்கும் சந்தியாவிற்கும் சில குறிப்பிட்ட அசென்மெண்ட் கொடுக்கப் பட்டுள்ளதால் அவர்கள் வாஜ்பாயின் முடிவையும் கூட தவறு என்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஆம் ஆத்மி பார்ட்டியின் தலைவர் பேசினார் என ஒன்றை குறிப்பிட்டு உள்ளார். விவி நிறுவனத்திடம் மொத்த சுரங்க குத்தகை எண்ணிக்கை 50 என்றாலும் மொத்த விஸ்தீரனம் 1000 ஹெக்டேருக்கும் குறைவு. அதே நேரத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 5000 ஹெக்டேருக்கு மேல் சுரங்க குத்தகை உள்ளது. ஆனால் சந்தியாவிற்கு 5000-த்தை விட 1000 தான் மோனோபாலியாக தெரிகிறது. இது இன பாசமா? வேறு காரணமா? என்பதை வாசிப்பவர்களே முடிவு செய்யுங்கள். ஆம் ஆத்மி பார்ட்டி இணைப்பு என்று ஒன்றை குறிப்பிட்டார். அதில் மிடாஸ் நிறுவனத்தில் வைகுண்டராஜன் பங்கு வைத்திருந்தார் என்ற ஒரு மிகப் பெரிய உண்மையை கண்டுபிடித்தார். பொது நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வது மிகப் பெரிய ஊழல் என்பதை தற்போது சந்தியா தான் குறிப்பிட்டு உள்ளார்.  ஆனால் அவர் வெளியிடாமல் விட்டது கிங் பிஷ்சர் உள்ளிட்ட இதர நிறுவனங்களிலும்; சன்டிவி, ராஜ் டிவி, உள்ளிட்ட தொலைகாட்சி நிறுவனங்களிலும் கூட திரு.வைகுண்டராஜன் பங்கு வாங்கி வைத்துள்ளார் என்பதையும், மேற்கண்ட எந்த நிறுவனங்களின் நிர்வாகத்திலும், திரு.வைகுண்டராஜன் அல்லது அவரது சகோதரர் இயக்குனர்களாக அல்லது நிர்வாக இயக்குனர்களாக இல்லை என்பதையும் வேண்டும் என்றே மறைத்து விட்டார். நிச்சயமாக சந்தியாவிற்கு செலக்டிவ் அம்னீசியா இருக்காது. அப்படியானால் உள்நோக்கத்தோடு தானே அந்த நிறுவனங்கள் இவர்களால் நிர்வகிக்கப் படவில்லை என்பதையும் சாதாரண முதலீட்டார்கள் போலவே முதலீடு செய்யப்பட்டு பிறகு பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் திட்டமிட்டு மறைத்தார். இவர் எப்படி நியாயமான பத்திரிக்கையாளர் ஆவார்???

கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் ஜெயா டிவியின் இயக்குனராக திரு.வைகுண்டராஜன் இருந்தார் என்பதற்கான ஆதாரத்தை இவர் பதியட்டும். பதிந்தால் இவரது நேர்மை தன்மையை நாம் ஒப்புக் கொள்வோம். போட்டி நிறுவனத்திடம் வாங்கிய பணத்திற்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை இவ்வாறு கற்பனை நயத்தோடு எழுதுவதை கொள்ளை கூட்டத்தில் உள்ளவர்களை தவிர வேறு யார் பாராட்ட முடியும்? மேற்கண்ட பதிவுகள் தான் அரசு உடந்தையாக உள்ளது என்பதற்கு அவர் கொடுக்கும் ஆதாரம்.

எந்த இனத்தில் உடந்தையாக செயல்பட்டது? அதற்கு என்ன ஆதாரம் கொடுத்துள்ளார்.? இவர் கொள்ளை கூட்டத்தில் உள்ள ஒரு உறுப்பினரான ஆஷிஷ்குமார் எழுதிய கடிதத்தை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்து இவரிடம் கொடுத்ததை இவர் பதிந்தாரே அதே போல் ஆதாரம் பதிந்து இருக்க வேண்டாமா? இதற்கு பெயர் நேர்மையான பத்திரிக்கையாளரா?

ஜெயலலிதா ஆட்சி காலம் 2001 முதல் 2006  வரை

2002-ல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து கடலோர மேலாண்மை விதிகளை மீறி விவி மினரல் சுரங்க குத்தகை பெற்று சட்ட விரோதமாக சுரங்க பணி செய்கிறது அதனை நிறுத்த வேண்டும் என தமிழக கடலோர மேலாண்மை கமிட்டிக்கு உத்தரவு கொடுத்ததாகவும் இவை மாவட்ட கடலோர கமிட்டியின் அனுமதியின் பேரில் கொடுக்கப்பட்டவை. அது தவறு என குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்தாலும் கூட அதனை செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றார்கள் என ஒரு குறிப்பை குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்ளை கூட்டத்தின் திறமையே எப்படி ஒவ்வொரு இலாகாவிற்கும் ஒவ்வொரு ஆட்களை வைக்கிறார்களோ, எப்படி அதிகாரிகளை கைக்குள் வைத்து தேவைபடி  அறிக்கைகளை தயாரித்து வாங்குகிறார்களோ, அது போல் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகளையும் கைக்குள் வைத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான செய்தி கொண்ட அபிடவிட்டை இவர்களே தயாரித்து கொடுத்து தாக்கல் செய்ய வைத்தார்கள். இது தான் உண்மை.

உண்மையில் கடலோர மேலாண்மை விதிகளின் கீழ் கடலோர கனிமங்களுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சந்தியாவின் உரிமையாளரான தயாதேவதாசின் இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனிக்கு கடலோர மேலாண்மை விதிகளின் அனுமதியின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளது எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என பெரியதாழை கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உயர்நீதிமன்றமும் இதற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என ரிட் மனு எண் 11971 and 15451 of 1995  –ல்  உத்தரவிட்டது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் திரு.வைகுண்டராஜன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சந்தியாவை ஜனவரி 2015-ல் சந்திக்கும் போது அவரிடம் கொடுக்கப் பட்டது. ஆனால் இப்போது அதனை மறைத்து விட்டு வாங்கிய காசுக்கு மலத்தை அள்ளி வீசுவது சரியான பத்திரிக்கை தர்மமா?? உயர்நீதிமன்ற உத்தரவை தான் பார்க்கவில்லை. தன்னிடம் அந்த உத்தரவு நகல் தரப்படவில்லை என சந்தியா சத்தியம் செய்ய தயாரா?

வேலிக்கு ஓணான் சாட்சி போல், இவர் ஒரு சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு என்ற ஒரு நபர் பெயரை கூறுகிறார். அவர் பற்றிய முழு விபரத்தை வெளியிடுங்கள். அந்த அமைப்பின் இணையதளத்தை கொடுங்கள். அப்போது தான் இந்த கொள்ளை கூட்டத்தில் உள்ள ஒரு நபர் அவ்வாறு அமைப்பை வைத்து கொண்டு இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும். தைரியம் உண்டா சந்தியாவிற்கு.!!

சுற்றுச்சூழல் அமைச்சராக டி.ஆர்.பாலு இருக்கும் போது தனுஷ்கோடி ஆதித்தனும் தயாதேவதாசும் போய் டி.ஆர்.பாலுவிடம் வைகுண்டராஜனை முடக்கினால் தவிர தங்களால் தொழில் செய்ய முடியாது. அதற்கு உதவி செய்யுங்கள் என கேட்டார்கள். எனவே டி.ஆர்.பாலு அங்கிருந்து ஒரு பெண் அதிகாரியை போய் பார்த்து விட்டு தேவதாசுக்கு உதவி செய் என அனுப்பினார். அவ்வாறு அந்த பெண் அதிகாரி வந்து பார்த்து விட்டு சந்தியா மேலே குறிப்பிட்டது போல் உடனடியாக விவி மினரல் சுரங்க பணியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். ஏற்கனவே இதில் விதிவிலக்கு உள்ளது என்பது தயாதேவதாஸ் வழக்கிலேயே தீர்ப்பாகி உள்ளதால் உள்நோக்கத்தோடு விவி மினரலுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக தயாதேவதாஸ்க்கு உதவி செய்வதற்காக இந்த கடிதம் எழுதியதால் கோப்புகளை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுடியவில்லை. எனவே மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் அந்த கடிதம் ஒரு சதி என்பதை கூறாமல் அது துறைகளுக்கு இடையே உள்ள கடிதம். அது விவிக்கு எதிரான உத்தரவு அல்ல என குறிப்பிட்டார். இதனை பதிவு செய்து உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேற்கண்ட உத்தரவு நகல் சந்தியாவிடம் கொடுக்கப் பட்டது. அந்த ரிட் மனு எண் 25128 and 31688 of 2002 உத்தரவு நகலை தான் பார்க்கவில்லை, பெறவில்லை என சந்தியா மறுக்கமுடியுமா? சத்தியம் செய்ய தயாரா???. பணத்திற்காக இதனை மறைத்து எழுதுவதற்கு பெயர் பத்திரிக்கை தர்மமா? உயர்நீதிமன்ற உத்தரவு இவர் கண்ணுக்கு செசன்ஸ் நீதிமன்றமாக தெரிகிறதே!! கண்ணை பரிசோதிக்க வேண்டாமா??

மேற்கண்ட உத்தரவு நகல்களையும் குறிப்பிட்டு இவர் குறிப்பிடும் அடிவருடிகளிடம் இவர் கருத்து கேட்டு அந்த உயர்நீதிமன்ற உத்தரவையும் குறிப்பிட்ட எழுத்து பூர்வமான கருத்தையும் இவர் கட்டுரையோடு சேர்த்து இருந்தால் இவரை பாராட்டலாம். ஆனால் இவர் செய்வது என்ன? பிளாட்பாரத்தில் டெல்லி அல்வா, பாம்பே மஸ்கோத் என போர்டு வைத்து போலி வியாபாரம் செய்வது போல் பக்கத்திற்கு பக்கம் திரு.வைகுண்டராஜன் பல்வேறு போஸ்களில் உள்ள படத்தை காட்டி வியாபாரத்தை நடத்துகிறார். அப்படியானால் திரு.வைகுண்டராஜனுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் அல்லவா??

வேலிக்கு சாட்சி சொல்லும் ஓணான் ஆன அந்த லாபம் பார்க்காத பானர்ஜி, டேனியல் ஆகியோர் சேர்ந்த அமைப்பின் இணைய தள முகவரி, மின் அஞ்சல் முகவரி மற்றும் அவர்களது பெயர் விலாசம், கல்வி தகுதி ஆகியவற்றை கொடுத்தால் பிராடு என கூறும் அந்த பிராடும் இவரும் இந்த கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் “ஊமை விழிகள்” படத்தில் வரும் கிழவி போன்ற இன்பார்மர் தான் அவர் என்பதும் தெரிந்து விடும் என்பதால் அதனை தெரிவிக்கவில்லை சந்தியா. நியாயமான பத்திரிக்கையாளர் அந்த தகவலை கொடுக்க வேண்டாமா? இனி மேலாவது கொடுங்கள் பார்ப்போம்.
2001-ல் அணுசக்தி துறை உரிமம் வழங்கி விட்டு 2002-ல் அதில் சில பகுதிகளை ரத்து செய்ததாக குறிப்பிடுகிறார். உண்மை. அதில் என்ன சட்ட விதிமீறல் உள்ளது. அதை ஏன் இவர் குறிப்பிடவில்லை. வாங்கிய பணத்திற்கு வாந்தி எடுக்கிறார் என்பதை இது நிரூபிக்கவில்லையா? இதற்கும் ஜெயலலிதா ஆட்சிக்கும் என்ன தொடர்பு.?

உயர்நீதிமன்றத்தால் மத்திய அரசின் சட்டவிரோத உத்தரவு ரத்தானதற்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்திற்கும் என்ன தொடர்பு.? முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள். நீங்கள் உங்கள் செய்தியின் மேலேயே நான் வாங்கிய காசுக்கு வாந்தி எடுக்கிறேன். மன்னியுங்கள் என போட்டு விட்டு இந்த செய்தியை போட்டால் யாரும் உங்களை விமர்சிக்க மாட்டார்கள்.

2002-ல் ககன்தீப் சிங் பேடி கலெக்டர் உத்தரவு பற்றி குறிப்பிடுகிறார். அவர் சேரன்மகாதேவி சப்கலெக்டராக இருக்கும் போதே முன்விரோதமும் பகையும் வந்து குற்ற வழக்கும் மனித உரிமை ஆணையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டு பிறகு காவல் கண்காணிப்பாளர் தலையீட்டில் சமாதானமாக முடிந்தது. பிறகு கன்னியாகுமரி கலெக்டராக வந்த பிறகு முன்பகையை மனதில் வைத்து விவி நிறுவனத்தின் பட்டா நிலத்திற்கு உரிமம் பரிந்துரை செய்ய மறுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று வந்த பிறகு தள்ளுபடி செய்ய வேண்டும் என உள்நோக்கத்தோடு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை சட்டவிரோதமானது என்பதை ஆணையாளர் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி தமிழக அரசு மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி மத்திய அரசின் முன் ஒப்புதலோடு அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமம் வழங்கப் பட்டது. அத்தனை இனங்களையும் தாங்கள் ஜனவரி 2015-ல் பார்க்கவில்லை என சத்தியம் அடிக்க தயாரா?

இதில் சட்டவிரோதம் எங்கே உள்ளது? ஜெயலலிதா ஆட்சி எங்கே உள்ளது? மலம் அள்ளி வீசுவதற்கும் இந்த பதிவிற்கும் என்ன வித்தியாசம்? ஒரு பகுதி பட்டா நிலம் கடல் உள்ளே சென்ற பிறகு எப்படி கடற்கரை புறம்போக்கு இருக்கும்.? அப்படியானால் இவர் எவ்வாறு மக்களை முட்டாள் ஆக்குகிறார். கடற்கரையில் மணல் அள்ளுவதற்கும் மலையக பாதுகாப்பிற்கும் என்ன தொடர்பு? எந்த தொடர்பும் இல்லாமல் கடற்கரை பகுதிகளும், மலை பகுதியாக அறிக்கை செய்யப்பட்டவை. விவி மினரல் முன்மொழிவுகள் போவதற்கு முன்பாகவே மாறுதல் செய்ய பரிந்துரை செய்யப்பட்டதற்கும் விவி மினரலுக்கும் என்ன தொடர்பு? ஆனாலும் கூட விவி மினரல் மலையக பாதுகாப்பு கமிட்டியின் அனுமதியும் இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் பெற்று தான் உரிமம் பெற்றது. இதில் ஜெயலலிதா ஆட்சி என்பது எங்கே வந்தது?

மீண்டும் இவர் குறிப்பிடும் வேலிக்கு ஓணான் சுற்றுச்சூழல் ஆர்வலர் வருகிறார். முதலில் அவரை பற்றியும் அவர் அரசிடம் இருந்து பிராஜக்ட் என்ற பெயரில் எவ்வளவு பணம் பெற்றுள்ளார் என்ற விபரத்தையும், அவருடைய கல்வி தகுதி, இணையதள முகவரி முதலியவற்றையும் வெளியிடட்டும். அவ்வாறு வெளியிட்டாலே இவரும் இந்த கொள்ளை கூட்டத்தில் ஒரு அங்கம் என்பது தெரியும்.

சிறு வயதில் பள்ளிக்கு கள்ளத்தனம் செய்பவர்கள் பள்ளியில் காய்ச்சல் சொல்ல மாட்டார்கள். வயிற்று வலி அல்லது தலைவலி சொல்வார்கள். அதே நடைமுறையை பின்பற்றி கடற்கரை அழிவு என்கிறார். உண்மையில் கடல் அரிப்பும் கடற்கரை அழிவும் விவி நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்ட எந்த பகுதியிலும் இல்லை. ஏனென்றால் அவை முறையான கடலோர மேலாண்மை அனுமதி பெற்று நிபந்தனைகளை கடைபிடிக்கின்றன. மாறாக கடலோர மேலாண்மை விதி அனுமதி இல்லாமல் இயங்கும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் பகுதியில் தான் கடலரிப்பு உள்ளது. மேலும் கடலரிப்பு இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை. எண்ணூர் தாளங்குப்பம், பாண்டிச்சேரி, நாகப்பட்டிணம் என உலகம் முழுவதுமே கடலரிப்பு உள்ளது. வாங்கிய பணத்திற்கு விசத்தை கக்குவது போல் தொடர்பில்லாத ஒரு பிரச்சனையை நீதித்துறையை எதிர் ஆக்குவதற்காக எழுதுகிறார். காசுக்கு கொலை செய்யும் கூலிப்படைக்கும் காசுக்கு பொய் செய்தி எழுதும் சந்தியாவிற்கும் என்ன வித்தியாசம்?

சந்தியா கூறும் டேனியல் பற்றி விபரங்களை கேளுங்கள். விபரங்களை தெரிவித்தால் அவரும் இவரை போல இந்த கூலிப்படையின் ஒரு அங்கம் என்பது நிரூபணம் ஆகும். சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் என்பதில் பெரும்பான்மையினர் இவ்வாறு அறிக்கை விட்டு அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மாமூல் வாங்குவதை வழக்கமாக கொள்பவர்கள். நாங்கள் அறிந்த வரையில் இவ்வாறு ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு இல்லை. எனவே டேனியல் என்பவர் சுற்றுச்சூழல் தன்னார்வலரா என்பதை நிரூபிக்க அவர் பற்றிய விபரங்களை சந்தியா வெளியிட வேண்டாமா?

திரு.தனுஷ்கோடி ஆதித்தன் கம்பெனி தான் விவி கம்பெனிக்கு போட்டி என்பதால் அவர்கள் 20 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று விவி-க்கு எதிராக ஒரு மனுவை கொடுத்தார்கள். மேற்கண்ட மனுவில் தயாதேவதாஸ்க்கு உரிமை உள்ள ஒரு சுரங்க குத்தகையை விவி மினரல் சட்டவிரோதமாக கையகப்படுத்தி விட்டது என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு இருந்தார்கள். மனு மாநில அரசுக்கு விசாரணைக்கு வந்தது. தனுஷ்கோடி ஆதித்தன் கட்சி கூட்டணியாக உள்ள திமுக ஆட்சி காலத்தில் தான் அது நடந்தது. உயர்நீதிமன்றம் மேற்கண்ட குற்றச்சாட்டை பரிசீலித்து தள்ளுபடி செய்துள்ள நிலையில் மாநில அரசு இதில் தலையிட விரும்பவில்லை என்று மாநில அரசு பதில் கொடுத்தது. இது தான் உண்மையே தவிர மற்றவை அல்ல. மேற்கண்ட பதிலும் நகலும் ஜனவரி 2015-ல் சந்தியாவிடமே கொடுக்கப் பட்டது.

அதன்பிறகும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று புகார் கொடுத்தார்கள். மாநில அரசு 100 சதவீத ஆய்விற்கு வேறு மாவட்ட அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து புகார் உண்மையல்ல என்பதையும் தொழிற் போட்டியினால் தான் உண்மைக்கு மாறான இந்த புகார்கள் எழுதப்பட்டுள்ளன என்பதையும் மத்திய அரசுக்கு தெரியப் படுத்தினார்கள். இதனை மேல் ஆய்வு செய்ய தனுஷ்கோடி ஆதித்தன் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சொல்லி மத்திய அரசின் இரண்டு துறை அதிகாரிகளையும் மாநில அரசு அதிகாரிகளையும் சேர்த்து அனைத்து குத்தகை பகுதிகளையும் கூட்டாக ஸ்தல ஆய்வு செய்ய உத்தரவு பெற்று வந்தார். அவர்களும் ஆய்வு செய்தும் துறைமுக சபை, சுங்கத்துறை முதலியவற்றில் உள்ள ஆவணங்களை பெற்று பரிசீலித்தும் திரு.தயாதேவதாஸ் அனுப்பிய புகாரில் உண்மை எதுவும் இல்லை என்பதை சுரங்க துறை அமைச்சர் மூலம் பிரதமருக்கு அறிவித்தார்கள். மேற்கண்ட கோப்பு இன்னும் இந்திய அரசு சுரங்கத்துறையில் உள்ளது. இதில் எங்கே வந்தது ஜெயலலிதா ஆட்சி? மாறாக வாங்கிய காசுக்கு சந்தியா வாந்தி எடுக்கிறார்.  மேற்கண்ட அறிக்கை நகலையும் கோப்பு நகலையும் ஜனவரி 2015-ல் பார்க்கவில்லை என சத்தியம் அடிக்க சந்தியா தயாரா?

வேலிக்கு சாட்சி சொல்லும் ஓணான் பிரபீர் பாணர்ஜி-யை பற்றிய விபரங்களையும் அவரது தொடர்பு முகவரியையும்  அவரது கல்வி தகுதி இணைய தள முகவரிகளையும்; கொடுத்து விட்டு அவரது கருத்தை இவர் பதிய வேண்டும். 2004 தமிழக அரசு அறிக்கையை வேலிக்கு ஓணான் போன்ற பிரபீர் பாணர்ஜி வாசிக்கவில்லை. அதன் நகலை ஜனவரி 2015-ல் வைகுண்டராஜனிடம் நேரில் பெற்று கையில் வைத்திருக்கும் சந்தியா அதனை காட்டவும் இல்லை. அதுபற்றி வாய் திறக்கவும் இல்லை. இது கூட்டு சதி அல்லவா? இதனை திறமையான பத்திரிக்கையாளர் என பாராட்டுவது சரியா? சந்தியாவை சின்ன பூலான்தேவி என பாராட்டுவது மட்டும் தானே சரியாக இருக்கும்?  அந்த அறிக்கை இணைப்பு
http://www.beachminerals.org/wp-content/uploads/2016/06/23-Govt-Lr-Dated-24-11-2004-By-VVM.pdf -ல் உள்ளது. சந்தியாவை வானாளாவ புகழ்ந்த அனைவரும் ஒரு முறை அதனை வாசித்து விட்டு உங்கள் கருத்தை பதியுங்கள். இது அவரை போற்றி பதிந்த அவரது கொள்ளை கூட்ட உறுப்பினர்களுக்கு பொருந்தாது.

திமுக ஆட்சி காலம் 2006-2011

    திமுக காங்கிரஸ் கூட்டணி என்பதால் தயாதேவதாஸ் அவரது பார்ட்னரான தனுஷ்கோடி ஆதித்தன் மூலம் திமுக அரசில் வற்புறுத்தி விவி மினரலுக்கு எதிராக சில செயல்களை செய்தார்கள். அந்த பொறுப்பு தலைமை செயலாளர் திரிபாதியிடம் கொடுக்கப்பட்டது. அதற்கு வசதியாக விவி மினரலிடம் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தோற்று வந்த டாடா நிறுவனமும் விவி-க்கு எதிராக சேர்ந்து கொண்டது. புராணங்களில் திரிசங்கு மகாராஜாவிற்கு சொர்க்கத்தில் இடம் கொடுக்காததால் விஸ்வாமித்திர முனிவர் ஒரு சொர்க்கத்தை தனியே உருவாக்கியது கேள்வி பட்டு இருக்கிறோம். அதே போல் வைகுண்டராஜனை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்தோடு 12 சீனியர் மாவட்ட வருவாய் அலுவலர்களை பின்தள்ளி 13-வது இடத்தில் உள்ள ஜோதிநிர்மலாவிற்கு ஐஏஎஸ் வழங்கி அவரை கன்னியாகுமரியில் கலெக்டராக நியமித்து அங்கு சில குற்ற வழக்குகளும் பதிவு செய்து பிற இடங்களிலும் சில குற்ற வழக்குகள் பதிவு செய்து காவல் துறையிலும் விவி-யின் எதிரி யார் என கண்டறிந்து அவரை திருநெல்வேலி டிஐஜியாக நியமித்து தொந்தரவு கொடுத்தார்கள். அவ்வாறு ஐஏஎஸ்-சில் சீனியாரிட்டியை உதறி தள்ளிய 12 நபர்கள் மீதும் எந்த வித குற்றச்சாட்டுகளும் நிலுவையில் இல்லை என்பதை அரசு பொது (சிறப்பு-அ) துறை கடித எண் 1359/2008-1 dated 10.5.2008 கடிதத்தில் தெரியப்படுத்தி உள்ளார்கள். இவை அனைத்தையும் சந்தியா பார்க்கவில்லை என சத்தியம் அடிப்பாரா?

இது மட்டும் அல்ல. தங்களது சீனியாரிட்டியை பைபாஸ் செய்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாவட்ட வருவாய் அதிகாரி ஜவகர் சந்திரசேகர் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் கைது செய்யப் பட்டார். சொல்லுங்கள். சந்தியா அங்கமாக உள்ள கொள்ளை கூட்டத்திற்கு அரசு சாதகமாக இருந்ததா அல்லது வைகுண்டராஜனுக்கு சாதகமாக இருந்ததா? இவை அனைத்தும் சந்தியாவின் முதலாளி தயாதேவதாசின் பின் புலத்தில் நடந்தது.

அப்போது மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களை வைத்து அனைத்து குத்தகை பகுதிகளையும் தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை வாங்கினார்கள். ஆனால் அந்த ஆய்வு நடக்கும் போது விவி நிறுவனத்தில் இருந்து ஒரு தனியார் தொலைகாட்சி கேமராமேன்கள் மூலம் அவ்வளவையும் வீடியோ செய்தார்கள். எனவே அந்த அதிகாரிகள் விவி நிறுவனத்தில் தவறு எதுவும் இல்லை. இதர நிறுவனங்களில் தான் தவறு உள்ளது என்ற உண்மையை எழுதி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். மேற்கண்ட  அறிக்கை தயாதேவதாஸ் வசமே உள்ளது. அவரும் அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று வைத்துள்ளார். சந்தியா அந்த அறிக்கையை பெற்று வெளியிட தயாரா?

வைகுண்டராஜனுக்கு தொடர்பில்லா குட்டத்தில் உள்ள மணல் மேட்டிற்கும் வைகுண்டராஜனுக்கும் தொடர்பு என்ன? வாங்கிய பணத்திற்கு வாந்தி எடுப்பது தவிர வேறு என்ன?

தான் எதிர்பார்த்த பலன் வராததால் புவிவியில் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் பாஸ்கர் (இவரை பற்றி அடுத்த பத்தியில் குறிப்பிடுகிறேன்). தலைமை செயலாளர் அறையில் வைத்து விவி-க்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் நீ தான் அதனை  செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் கூறி உள்ளார் என கூறி அங்கிருந்தே விவி நிறுவனத்தின் அனைத்து சுரங்க குத்தகைகளுக்கும் துணை இயக்குனர்கள் ஆய்வு செய்தது போல் ஆய்வறிக்கை தயாரித்து சில விதிமீறல்களை குறிப்பிட்டு அறிவிப்பு தயாரித்து அதனை கலெக்டர் மூலம் அனுப்ப வைத்தார்கள்.

    அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் நான் புலத்தணிக்கை செய்யாமல் இதில் கையொப்பம் இட மாட்டேன். ஏனென்றால் விவி நிறுவனம் விதிமீறல் செய்யாது என கூறினார். உடனடியாக உதவி இயக்குனர் இந்த அறிவிக்கையை இயக்குனர் அலுவலகத்தில் தயாரித்து தந்தார்கள். தலைமை செயலாளர் சொல் படி இது தயாரிக்கப் பட்டது. உங்களிடம் கையொப்பம் பெற்று அனுப்ப சொன்னார்கள் என பதில் கூற, அதனை அலுவலக குறிப்பில் எழுதி எனக்கு கையொப்பத்திற்கு வை. நான் கையொப்பம் இடுகிறேன் என கூறி அவ்வாறே அலுவலக குறிப்பில் அந்த உண்மை பதிவு செய்யப்பட்டு சந்தியர் உரிமையாளர் தயாதேவதாஸ் தூண்டுதலால் அறிவிப்பு அனுப்பப் பட்டது உண்மை.

    உடனடியாக விவி நிறுவனத்தில் இருந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இவை அனைத்தும் பொய். எனவே இவை அனைத்தையும் நீதிமன்ற ஆணையாளர் ஏற்கனவே ஆய்வு செய்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உடன் கூட்டாக ஆய்வு செய்து வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார். அவ்வாறே நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று எந்த உதவி இயக்குனர் ஆய்வில் தவறு உள்ளது என பொய்யாக அறிக்கை எழுதி கொடுத்தாரோ அதே உதவி இயக்குனரோடு நீதிமன்ற ஆணையாளரும் மீண்டும் ஆய்வு செய்து எந்த தவறும் இல்லை என்பதை வீடியோவிலும் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பித்தார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் மாறுதல் வாங்கி சென்று விட்டார்கள். பிறகு வந்த உதவி இயக்குனர் அவரும் தனியாக ஸ்தல பார்வையிட்டு இதில் தவறு எதுவும் இல்லை என கண்டறிந்து அந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சி தலைவரின் ஒப்புதலுக்கு வைத்து ரத்து செய்தார்கள். மேற்கண்ட கோப்பின் நகல்கள் சந்தியாவின் உரிமையாளர் தயாதேவதாஸ் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளது. அலுவலக குறிப்பு நகலை சந்தியா படித்து விட்டு அதனை தெரியப்படுத்தட்டும் அல்லது அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றும் பார்க்கலாம். பத்திரிக்கையாளர் என்ற பதவியை தொழில் போட்டியில் ஒரு தரப்பிற்கு உதவி செய்வதற்கு தரம் தாழ்ந்து கூட்டு சதி செய்து உண்மைக்கு மாறாக எழுதுகிறார் என்பதை இது நிரூபிக்காதா? இதில் எங்கு பதில் இல்லாமல் உள்ளது.?

    ரமேஷ் இல்மனைட் விற்றதாக ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார். உண்மையில் 2005-க்கு முன்பு வரை உள்ள காலத்தில் இல்மனைட்டை ராயல்டி செலுத்தி யாரும் விற்பனை செய்யலாம். இது கனிம சலுகை விதிகளிலேயே காணப்படுகிறது. அதன் பிறகு தான் அனுமதி பெற வேண்டும். எனவே இதில் விதிமீறல் எதுவும் இல்லை. ரமேஷ்க்கு கொடுத்த வார்த்தை விளையாட்டை கூட விவி-க்கு எதிராக கொடுக்க முடியவில்லை. இந்த கொள்ளை கூட்டத்தில் உள்ள ஒரு உறுப்பினரான பானர்ஜி எதை வைத்து கருத்து கொடுத்தார்?

இந்த கொள்ளை கூட்டத்தின் சிறப்பு 

1.    உரிம கட்டணம் இல்லாமல் சுரங்க குத்தகை வழங்க முடியாது. திருத்தப்பட்ட அந்த நேரம் அமுலில் உள்ள சட்ட விதிகளின் படி தான் சுரங்க குத்தகை வழங்கப்பட வேண்டும். இது உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்பு. ஹிண்டு ஸ்டோன் எதிர் ;தமிழ்நாடு அரசு என்ற தீர்ப்பிலும் இதனை பார்க்கலாம். ஆனால் திரு.தயாதேவதாஸ்க்கு திருச்சி மாவட்டத்தில் 5 சுரங்க குத்தகைகள் சுரங்க குத்தகை விண்ணப்ப கட்டணம் இன்றி வருமான வரி துறை சான்று இன்றி வழங்கப்பட்டன. மேற்கண்ட அரசாணைகளை படித்தாலே இது துலங்கும். அப்போது துணை இயக்குனராக இருந்த பாஸ்கர் இந்த சட்ட விதிமீறலை மறைத்து குத்தகையை நிறைவேற்றி தந்ததற்காகவும், இணை இயக்குனராக இருக்கும் போது 2007-ல் விவி-க்கு எதிராக விதிமீறல் அறிவிப்பு தயாரித்து அனுப்ப வைத்ததற்காகவும் பணி ஓய்வு பெற்ற பிறகும் மேற்கண்ட பாஸ்கர் என்ற இணை இயக்குனர் இந்த கொள்ளை கூட்டத்தில் இணைந்து சம்பளமும் பெற்று வருகிறார். கேட்டால் அந்த கம்பெனியில் வேலை செய்கிறேன் என கூறுகிறார். 39 லட்சம் டன் இல்லீகல் மைனிங்கில் திருச்சியில் பணியாற்றிய இவரது பங்கு என்ன?

2.    விக்டர் ராஜமாணிக்கம் மிகப் பெரும் ஜியாலஜிஸ்ட். உலகில் அவரை விட்டால் வேறு ஆளே கிடையாது என தனது சக குண்டர் படை உறுப்பினரை 02.02.2015 அன்று புகழ்ந்து எழுதி இருந்தார் சந்தியா. ஆனால் விக்டர் ராஜமாணிக்கம் நான் தமிழ் மருந்து நிபுணர். அதில் ஆராய்ச்சி செய்கிறேன். அதற்கு பணம் தாருங்கள் என்று ஒரு மாதிரியும், பீகார் மாநிலத்திற்கு எவ்வளவு மனித வள உழைப்பு தேவை என ஆராய்ச்சி செய்கிறேன் அதற்கு பணம் தாருங்கள் என ஒரு மாதிரியும், சுனாமி வராமல் தடுக்க ஆராய்ச்சி செய்கிறேன் அதற்கு பணம் தாருங்கள் என ஒரு மாதிரியும், கடலோர கனிமங்களின் இருப்பை ஆராய்ச்சி செய்கிறேன் அதற்கு பணம் தாருங்கள் என ஒரு மாதிரியும் பல்வேறு உருவங்கள் எடுத்து இந்திய அரசின் பணத்தை சுரண்டினார். இவரது தம்பி சமாதானம் விஞ்ஞான தொழில் நுட்ப துறையில் பணியில் இருந்ததால் இந்த சுரண்டல் அவர்களுக்கு மிக இலகுவானது. இந்த சுரண்டலுக்கு தயாதேவதாஸ் கும்பலும் உடந்தை. எனவே தான் அவருக்கு இவர் சாட்சி சொல்கிறார். பானர்ஜி டேனியல் ஆகியோர் பற்றிய விபரத்தை தெரியப்படுத்தினால் அவர்களது வண்டவாளத்தையும் தண்டவாளம் ஏற்றுகிறோம். மேற்கண்ட ஆவணங்களை சந்தியா ஜனவரி 2015-ல் பார்க்கவில்லை என சத்தியம் அடிப்பாரா?

ஜெயலலிதா ஆட்சி 2011-16

தயாதேவதாஸ் இல்லீகல் மைனிங்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் குறிப்பிட்டாரே தவிர தயாதேவதாஸ் 39 லட்சம் டன் இல்லீகல் மைனிங் செய்தார் என்பதையும் அணை, சாலை, ஆகியவற்றின் கரைகளை உடைத்து இல்லீகல் மைனிங் செய்தார் என்பதையும், ஆய்வு செய்ய சென்ற அலுவலர்களை பணியாளர்கள் மூலம் மிரட்டினார் என்பதையும் குறிப்பிடாமல்; சந்தியா தனது விசுவாசத்தை காட்டி விட்டார். வாழ்க!! திரு.தயாதேவதாசின் விதிமீறல் மற்றும் 39 லட்சம் டன் இல்லீகல் மைனிங்
goo.gl/LL70B2 ல் உள்ளது பாருங்கள். இவ்வாறு 4 வருடங்களுக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்பட்ட இனங்களுக்கு இன்று வரை அரசு பணத்தை வசூலிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட 14 லட்சம் டன்னுக்கு வருவாய் துறை, காவல்துறை பாதுகாப்பு போடாமல் திருடனையே பாதுகாப்புக்கு வைத்தது போல் தயாதேவதாசிடமே 14 லட்சம் டன்னையும் ஒப்படைத்தார்கள். இப்போது கூறுங்கள். அரசு யாருக்கு உதவி செய்கிறது? அரசு யாரோடு கூட்டு சேர்ந்துள்ளது.?

இந்த கொள்ளை கும்பல் தங்களது எல்கையை விரிவடைய செய்தது. அதன் மூலம் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும், பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளையும் கையில் எடுத்தது. அவர் பத்திரிக்கையில் ஏதாவது செய்தி வர வைத்தால் அதை வைத்து நான் முதல்வரிடம் வேண்டிய உத்தரவு பெறுகிறேன் என பேசினார். அதன்படி பணி மாறுதல் செய்யப்பட்ட இந்த கொள்ளை கூட்ட உறுப்பினரான ஆஷிஷ்குமாரிடம் தலைமை செயலருக்கு முகவரியிடப்பட்டு (அந்த கடிதம் தான் 28.1.17 அன்று சந்தியா வெளியிட்டது) ஒரு கடிதம் பெறப்பட்டு பத்திரிக்கைகளில் அவர் கூறியது போல் பிரபலமாக வெளியே வர வைக்கப் பட்டது. ஓய்வு பெற்ற அதிகாரி அவர் பிராமிஸ் செய்தது போல் விவி-யோடு பகைமை உள்ள ககன்தீப் சிங் பேடியையே ஆய்வு செய்யும் அதிகாரியாக நியமித்து அரசாணை பெற்றுக் கொடுத்தார். பிறகு அவர்கள் நினைத்த மாதிரி தானே அறிக்கை வரும். எனவே தான் விவி-யில் இருந்து அரசியல் தலையீடு இல்லாமல் ஆய்வு நடைபெற வேண்டும். எனவே உயர்நீதிமன்றத்தில் இருந்தே வெளி மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை நியமியுங்கள் என வழக்கு தொடர்ந்தார்கள். இதில் என்ன தவறு.? ககன்தீப் சிங் பேடி அறிக்கை எவ்வாறு நியாயமாக இருக்கும்?
    மேற்கண்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது பற்றி அதிகம் கூறவில்லை.

75 முதல் 78 சதவீத ரிப்ளினிசபிள் கனிம இருப்புகளோடு மைனிங் பிளான்கள் மோசடியாக தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதுவும் சந்தியா உள்நோக்கத்தோடு குறிப்பிடுவது.  அவர் கேங் மெம்பரான தயாதேவதாஸ்க்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அப்பநல்லூர், பூலாஞ்சேரி கிராமத்தில் முதலில் சுரங்க குத்தகைக்கு சுரங்க திட்ட வரைபடம் அந்த கொள்ளை கூட்ட உறுப்பினரான சந்தியாவின் மானசீக குருவான விக்டர் ராஜமாணிக்கத்தால் தயாரிக்கப் பட்டு இந்திய அரசு இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ்
TN/TCR/MP/GNT/1428-Mds dated 27.05.2002 படி அங்கீகாரம் வழங்கப் பட்டது. அந்த சுரங்க திட்ட வரைபடத்தில் 30 சதவீத கார்னட் கொண்ட 1,13,306 டன் ராசாண்ட் கிடைக்கும் என்றும் விற்பனை செய்யக் கூடிய கார்னட்டாக 20,395 டன் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது எனது பூரணமான சம்மதத்தோடும் அறிவோடும் தான் தயாரிக்கப்படுகிறது என தயாதேவதாசும் சான்றிதழ் கொடுத்திருந்தார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அணுகனிமம், அணுசக்தி, யூரேனியம், தோரியம் என விவிக்கு எதிராக எல்லா ஆயுதத்தையும் பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் சந்தியா மேற்கண்ட மைனிங் பிளானில் உள்ள கீழ்கண்ட வரிகளை ஜனவரி 2015-ல் படித்து பார்த்தார். அவை :
   
The alluvial Garnet sand applied by the company being a heavy mineral concentraete, is like to contain schedule (radioactive) minerals like Ilmenite, Monazite etc. Therefore the company has obtained the AMD of the Departmetn of Atomic Energy, Government of India for a NOC. for mining the Garnet sand from the applied area.
    அந்த மோனசைட்டில் இருந்து வந்த யூரேனியம் தோரியம் எங்கே? அவர் அரசிடம் ஒப்படைத்தாரா? திருட்டு தனமாக ஏற்றினாரா? இதுவும் சமூக விரோதிகள் கைக்கு போய் சேர்ந்ததா? சமூக சிந்தனை உள்ள சந்தியாவிடம் கற்றவர்கள் கேட்க வேண்டாமா? இந்த கேள்வியை.

அதே சுரங்க குத்தகை பகுதிக்கு இன்னொரு ஓய்வு பெற்ற அதிகாரியான முனாப் என்பவர் மூலம் மீண்டும் ஒரு மைனிங் பிளான் சமர்பித்தார்கள்.

அதில் ஆண்டுதோறும் ரிப்ளிநிசபிள் ஆக கிடைக்கும் கார்னட்டின் அளவு 446764 டன் ஆகி விட்டது. அந்த மைனிங் பிளான் அப்ரூபல் நம்பர்
TN/TCR/MP/GNT/1686-Mds dated 28.11.2008
 
78 சதவீத ரிப்ளினிசபிள் மோசடியான அப்ரூவல் என்றால் சந்தியா பாஸ் பெற்ற 400 சதவீத ரிப்ளினிசபிள் பெயர் என்ன? இரண்டையும் ஜனவரியில் நீங்கள் பார்த்தீர்களே? ஏன் இதுபற்றி வாய் திறக்கவில்லை அல்லது எழுதவில்லை. இதுவே நீங்கள் நேர்மையாக எழுதவில்லை என்பதை நிரூபிக்கவில்லையா? இதனை மறுக்க முடியுமா? சத்தியம் அடிக்க தயாரா?

குட்டத்தில் உள்ள பீச் மினரல் கம்பெனியை பற்றி குறிப்பிட்டு திரு.வைகுண்டராஜனை குறிப்பிடுகிறீர்கள். திரு.வைகுண்டராஜன் மீது குற்றச்சாட்டு இல்லாததால் ஏதாவது வேண்டும் என பேசுகிறீர்கள். இது பத்திரிக்கை தர்மமா? இப்போதும் வேலிக்கு ஓணான் சாட்சி வந்து விட்டது. உண்மையில் விவி நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்ட எந்த பகுதியிலும் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் வரை எந்த மணல் மேடும் இல்லை என்பதை மத்திய அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டதோடு அதிகாரம் படைத்த அலுவலர்களிடம் சான்றும் பெற்று அதன் பிறகு தான் உரிமம் வழங்கினார்கள்.  இவை அனைத்தையும் ஜனவரி 2015-ல் பார்த்து திருப்தியான சந்தியா அதனை குறிப்பிடாமல் எழுதுவதற்கு பெயர் பத்திரிக்கை தர்மமா?

எந்த நீதிமன்றத்தில் எந்த வழக்கு குழப்பப் பட்டது.? உண்மையில் நீதித்துறையை விவி-க்கு எதிராக திருப்புவதற்கு ஒரு நீதிபதியின் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்ட வாதம் தான் இது. டேனியல், பானர்ஜி என முகநூலில் அடுத்தவர்களை திட்டுவதற்கு போலி கணக்குகளை வைப்பது போல் போலியாக இரண்டு நபர்கள் பெயரை மீண்டும் மீண்டும் கூறுகிறீர்களே அவர்களை பற்றியை தகவல்களை ஏன் கூற மறுக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

Replinishable டெபாசிட்டை இல்லை என ஆக்க வேண்டும் என்றும் தயாதேவதாஸ்க்கு மிகவும் வேண்டிய நபரான திருமதி. சாந்தஷீலா நாயர் அவர்கள் சுரங்கத்துறை செயலாளராக இருக்கும் போது திரு.தயாதேவதாஸ் ஒரு உத்தரவு பெற்றார். அதற்கு ஒரு கமிட்டியையும் நியமித்தார். அந்த கமிட்டிக்கு தலைவராக தயாதேவதாசின் நீண்டநாள் நண்பரான நாகர் அவர்களை நியமித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நாகர் கமிட்டி ரிப்ளினிசபிள் வரும் என்றும் ஒரு வருடத்திற்கு 200 நாட்கள் வரை 100 சதவீத ரிப்ளினிசபிள்க்கு வாய்ப்பு உண்டு என்றும் ரிப்ளினிசபிளை எடுப்பது இல்லீகல் அல்ல என்றும் எவ்வளவு சரியாக ரிப்பிளினிசபிள் வரும் என்பதை கணிக்க முடியாது என்றும் ஒரு அறிக்கையை கொடுத்தார்கள். தயாதேவதாசின் நிலை திருடனுக்கு தேள் கொட்டியதாகியது. இந்திய அரசு சுரங்கத்துறை கடித எண் 16/90/2007/M-VI dated 8.1.10  உத்தரவு படி அமைக்கப்பட்ட நாகர் கமிட்டியின் மேற்கண்ட அறிக்கையையும், ஜனவரி 2015-ல் வாசித்து பார்த்த சந்தியா அது பற்றி பேசாமல் இப்போது நீரி என பேசுவது உள்நோக்கம் கொண்டதா? பத்திரிக்கை தர்மமா? அவரை பாராட்டியவர்களின் முடிவுக்கே இதை விட்டு விடுகிறேன்.

புதிய அணுசக்தி விதி

அரசின் ஒவ்வொரு நிலையிலும்  தன் ஆட்களை தன் கூட்டு பங்காளி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் என்ற பலத்தை பயன்படுத்தி காய் நகர்த்தி வரும் தயாதேவதாஸ் அதே போல் பரிகார் என்னும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியை அட்டாமிக் மினரல் டிவிசனின் டைரக்டராக இரண்டு வருடம் பணி நீட்டிப்பில் நியமிக்க வைத்தார். அதற்கு நிபந்தனையே விவி-க்கு எந்த அனுமதியும் கொடுக்க கூடாது என்பது தான். பரிகாரும் அதை மிகச்சரியாக செய்து வந்தார். எனவே அவர் மூலம் இந்த அட்டாமிக் மினரல் விதிகள் விவி-யை அழிப்பதாக நினைத்து உருவாக்கப் பட்டன. ஆனால் இது ஒட்டு மொத்த தொழிலையும் இந்தியாவின் வளர்ச்சியையும் அழிக்கும். இது பற்றி மேலும் கருத்து கூற விரும்பவில்லை.

    மீண்டும் இவர் ஒரு சீனியர் வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு கூறினார் என சில கருத்துகளை கூறுகிறார். ஆனால் அந்த ஸ்ரீராம்பஞ்சு விவி-க்கும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திற்கும் இடையில் நடக்கும் 10 வழக்குகளில் விவி-க்கு எதிராக ஆஜராகி வருகிறார் என்பதை வேண்டும் என்றே விட்டு விட்டார். இதுவா நேர்மையான எழுத்து. சந்தியாவை பாராட்டிய நேர்மையாளர்களே உங்களது நேர்மையும் இப்படி தானா?

    அவர் கேரளாவை போல் தனியாருக்கு கொடுக்க கூடாது என கூறுவதாக கூறுகிறார். ஆனால் உச்சநீதிமன்றம் கேரளாவில் தனியாருக்கு உரிமம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு அது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்தது. சந்தியாவின் கணவர் வேலை செய்யும் பத்திரிக்கையிலும் கூட வந்தது. ஒருவேளை சந்தியாவிற்கு பத்திரிக்கை படிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.

    விதிகளில் ஒரு தெளிவின்மை காணப்படுகிறது என வைகுண்டராஜன் கூறியதாக குறிப்பிட்டுள்ளது உண்மை. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

    தங்களுக்கு வழங்கப்பட்ட பணியான இந்த தொழிலை ஏகபோகமாக அதானியிடம் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தோடு எடுத்துக் கொடுக்க சந்தியா மிகச்சரியாக காய் நகர்த்தி வருகிறார். மேற்சொன்ன அனைத்தும் உண்மை. இதனை சந்தியா மறுப்பதற்கு தயாரா?

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் விளக்கங்களையும் சந்தியாவும் அவர் கணவரும் ஒன்றாக அவர் அலுவலகத்தில் வைத்து திரு.வைகுண்டராஜன், வெங்கடேஷ் முன்னிலையில் பார்வையிடவில்லை அல்லது அவை தனக்கு தெரியாது. அது போல் மேலே குறிப்பிட்ட நீதிமன்ற  உத்தரவுகள் தான் வாசித்து பார்க்கவும் நகல் வாங்கவும் இல்லை என்ற சந்தியா அவரது தந்தை மீது அல்லது அவரது குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?

உண்மையை மறைத்து எழுதுவதற்கு பெயர் பத்திரிக்கை தர்மமா? பாராட்டிய நீதிமான்களே வாசித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். என்ன ஆதாரத்தை அவர் கொடுத்துள்ளார். நேர்மையாளர்கள் என்றால் முன்பகை உள்ள அதிகாரியின் அறிக்கை ஒப்புக் கொள்ளக் கூடாது என எழுதி இருக்க வேண்டும் அல்;லவா? இனி மேலாவது எழுதுங்கள்.

மேலே குறிப்பிட்டவை உண்மையல்ல என்றால் சந்தியாவை பதிவிட சொல்லுங்கள். உங்கள் அனைவர் முன்னிலையிலும் ஒரு பொது இடத்தில் வைத்து நான் திரு.வைகுண்டராஜனையும், வெங்கடேஷையும் கூட்டி வருகிறேன். நீங்கள் சந்தியாவை கூட்டி வாருங்கள். அவர் சத்தியம் செய்யட்டும்.

இதன் ஆங்கில பிரதி நாளை பதிவு செய்யப் படும்.

No comments:

Post a Comment