Friday 1 October 2021

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் தரத்தை குறைக்கும் ரிப்போர்ட்டர் காட்சன் வெஸ்லி தாஸ் பற்றி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம்.

சந்தியா  அணியில் உள்ள ஒரு நபர் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உரிமையாளர்களுக்கே தெரியாமல் சந்தியாவின் செயல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் தற்போதைய நிலை பற்றி உரிமையாளர்கள் கவனம் கொள்ளவில்லை என்றால் நெற்றிக்கண் பத்திரிக்கையை விட மோசமான நிலைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்று விடும். இன்று ஒரு செய்தி இந்தியன் எக்ஸ்பிரசில் வந்தது. வழக்கமாக தாதுமணல் பற்றிய செய்திகளை வாங்குகிற காசிற்கு சந்தியா, காட்சன் வெஸ்லி தாஸ் என்னும் ரிப்போர்ட்டர் மூலம் அவ்வப்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியிடுவார். அதற்கு நாம் மறுப்பு கமெண்ட் கொடுத்தால் அந்த பதில் கமெண்ட்டிலேயே இருக்காது.


இது பற்றி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர்கள் கவனம் கொள்ள வேண்டும். குறிப்பாக தாது மணல் பற்றிய செய்திகளுக்கு வந்த மறுப்புகள் ஏன் வெளியிடப் படவில்லை என்பதை நிச்சயமாக உரிமையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த செய்திகளையும், மறுத்து பதிந்துள்ள கருத்துக்களையும் பெற்று பார்த்தால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இந்த நபர் வேண்டும் என்றே மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதை காணலாம். இது இந்த பத்திரிக்கையின் மீது உள்ள நம்பகதன்மையை நீக்கி விடும்.


இன்றும் தாது மணல் இருப்பை கண்காணிக்க வீடியோ கேமரா தலைப்பிட்டு உள்ளே உண்மைக்கு மாறான சில செய்திகளை அந்த ரிப்போர்ட்டர் காட்சன் வெஸ்லி தாஸ் வெளியிட்டுள்ளார். உதாரணங்கள்.


1. 220 மாதிரிகளில் 180 மாதிரிகளுக்கு மேல் 0.25 சதவீதத்திற்கு மேல் மோனோசைட் இருக்கிறது என அறிக்கை வெளியானது என குறிப்பிட்டார். ஆனால் மேற்கண்ட அறிக்கையை முழுவதும் வாசித்து இருந்தாலே ஏற்றுமதிக்கு தயாராக பிரிக்கப் பட்ட கனிமங்களில் தனியார் நிறுவன கனிமங்கள் எதுவும் மோனோசைட்டை கொண்டு இருக்கவில்லை என்பதையும் இந்திய அரசு நிறுவனம் ஏற்றுமதிக்கு தயாராக வைத்த கனிமங்கள் மட்டுமே மோனோசைட்டை கொண்டு இருக்கிறது என்பதையும் தெரிந்து இருக்கலாம். ஆனால் தெரிந்தும் இவர் இந்த விசயத்தை வெளியிடாததற்கு காரணம் சந்தியாவோடு உள்ள நெருக்கமா? அல்லது மாற்று சமுதாயத்தினர் மீது உள்ள வெறுப்பா? என்பது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் விசாரிக்க வேண்டும்.


2. பெடரேசன் தலைவர் தயாதேவதாஸ் அணுகனிமங்கள் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மேற்கண்ட பெடரேசன் என்பதே அவர் ஒருவர் மட்டுமே குத்தகைதாரராக உள்ள, மற்ற கம்பெனிகள் மீது புகார் எழுதுவதற்காக கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப் பட்ட ஒரு கம்பெனி என்பதையும், பொய் புகார் எழுதுவதே இவருக்கு வேலை என்பதையும் தமிழக அரசு முதன்மை செயலர் அறிக்கை செய்த விபரங்கள் https://beachmineral.com/ilegal-mining-complaint-by-dhayadevadas-is-false-and-due-to-business-motive-principle-secretary-reported-to-govt-of-india/ -ல் உள்ளது.


3. இந்த பெடரேசன் என்பது மற்ற நிறுவனங்கள் மீது புகார் செய்வதற்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே இது பற்றி விசாரணை நடத்துங்கள் என சிபிஐ கம்பெனி சட்டப்படியான மண்டல இயக்குனருக்கு கடிதம் எழுதியது, மண்டல இயக்குனர் இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அது https://beachmineral.com/cbi-letter-to-enquire-federation-of-placer-mineral-industries/ ல் உள்ளது.


4. மேற்கண்டவற்றை இந்த ரிப்போர்ட்டர் பார்த்திருக்கவும் செய்யலாம். ஆனாலும் சந்தியா மீது உள்ள பாசமா? அல்லது இவர் ஏதேனும் பணம் பெற்றாரா? இந்த விபரங்களை குறிப்பிடாமல் இவர் இவ்வாறு சொல்ல காரணம் என்ன? என்பது பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் விசாரிக்க வேண்டியது அவசியம்.


5. உண்மையில் எந்த நிறுவனமும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திடம் அணு கனிமங்களை ஒப்படைக்கவில்லை. அவர்கள் பெற்றுக் கொள்ள மறுத்ததால் இந்திய அரசு பொறுப்பில் தனியாக ஸ்டோர் செய்து வைக்கப் பட்டுள்ளது. அது இந்திய அரசுக்கு உரிமை உள்ளது. இதனை ஏற்கனவே பாராளுமன்றத்தில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். மெத்த படித்த இந்த ரிப்போர்ட்டர் அந்த உண்மைகளை மட்டும் மறைக்கவில்லை, மாறாக சாகு கமிட்டி ஆய்வறிக்கையில் விவி நிறுவனம் மட்டும் தான் குறிப்பிட்ட அளவு உள்ள மோனோசைட்டை இருப்பு வைத்துள்ளது என குறிப்பிட்டு உள்ளதை வேண்டும் என்றே மறைத்து விட்டார். 


6. தூத்துக்குடியில் உள்ள தாதுமணல் கிட்டங்கி சீல் உடைப்பு என ஒரு செய்தி வெளியானதும், உண்மையில் அவ்வாறு எந்த சீலும் வைக்கவில்லை. நாங்கள் இறக்குமதி செய்த கனிமங்களையோ கொண்டு சென்றோம் என்ற உண்மையை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரியப்படுத்தினார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் தவிர அனைத்து பத்திரிக்கைளும் அதனை வெளியிட்டார்கள். ஆனால் நேர்மைக்கு பெயர் பெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டதில் சந்தியாவிற்கு மட்டும் அல்ல இந்த ரிப்போர்ட்டர் காட்சன் வெஸ்லி தாஸ்சுக்கும் மிகப் பெரும் பங்கு உண்டு.


7. இணையத்தில் வரும் செய்திகளுக்கு பாதிக்கப் பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் கொடுக்கும் எந்த கமெண்ட்டும் வருவதில்லை. அதை வரவிடாமல் செய்வது இந்த காட்சன் வெஸ்லி தாஸ் தான். இது பற்றியும் தாங்கள் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். 


8. குடும்ப சண்டையில் ஒரு தரப்பிடம் பணம் வாங்கி கொண்டு பொய்யான குற்ற வழக்கு சிப்காட் போலீசாரால் தயாரிக்கப் பட்டது. இது பற்றி தகவல் தெரிந்த உடன் சம்பந்தப் பட்ட நிறுவனம் காவல்துறை , மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு அனுப்பியது. அதுவும் இதே காட்சன் வெஸ்லி தாஸ் வசம் நேரிலும் கொடுக்கப் பட்டதாக தொழிலாளர் சங்கத்தினர் கூறுகிறார்கள். அது பற்றி ஒரு வார்த்தையும் நேர்மைக்கு பெயர் பெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் வராததற்கு காரணம் என்ன? (மேற்கண்ட நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு மற்றும் அனுப்பப் பட்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவை https://vvmemp.blogspot.com/2021/09/blog-post.html-ல் உள்ளது.


9. திரு. காட்சன் வெஸ்லி தாஸ் வானாளவ புகழ்ந்து பேசும் திரு.தயாதேவதாஸ் சுரங்க பகுதியிலும் மோனசைட் உள்ளது. இது வரை ஒரு கிலோ கூட அவர் அரசிடம் ஒப்படைக்கவில்லை. அவற்றை தயாதேவதாஸ் கடத்தினாரா என்பதை இந்த ரிப்போர்ட்டர் ஏன் கேட்கவில்லை. ஏன் செய்தியாக வெளியிடவில்லை. மோனோசைட் இருப்பதற்கான ஆதாரம் https://beachmineral.com/indian-garnet-sand-company-dhayadevadas-mining-area-contains-monazite-mining-plan-confirms/ -ல் உள்ளது. 


10. கிராமத்தில் யோக்கியன் வாரன். சொம்பதூக்கி உள்ள வை என சொல்வார்கள். அந்த பழமொழி காட்சன் வெஸ்லி தாஸ்சுக்கும், தயாதேவதாஸ்க்கும் மட்டுமே பொருந்தும். உண்மையில் 3.9 மில்லியன் டன் தாது மணலை சட்ட விரோதமாக குவாரி செய்து கையும் களவுமாக பிடிபட்டு அவரது வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரது சுரங்க குத்தகையை தமிழக அரசு ரத்து செய்தது. அது https://beachmineral.com/large-scale-illegal-mining-major-violations-tamilnadu-govt-determine-mining-lease-granted-southern-enterprises-belongs-dayadevadas-claim-president-federation-o/ -ல் உள்ளது. இவற்றை பலமுறை இதே ரிப்போர்ட்டரிடம் விளக்கி கூறியும், இது பற்றி எந்த செய்தியும் நேர்மைக்கு பெயர் போன இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் வரவில்லை. இது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.


11. அந்நிய நிறுவனங்கள் சதியால் மீடியாவில் உள்ள இம்மாதிரி சில புல்லுறுவிகள் இ;ந்திய தொழிலை அழிப்பதற்கு திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அதுவும் குறிப்பாக திரு.வைத்தியனாதன் போன்ற கடவுள் பக்தி அதிகம் உள்ள நேர்மைக்கு பெயர் பெற்ற நபர்கள் ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தில் உள்ள இந்த பத்திரிக்கையில் இவ்வாறு செய்தி வருவது மனவருத்தத்தை கொடுக்கிறது. தாங்கள் https://beachmineral.com/      திறந்து பிளாக்கில் சென்று https://beachmineral.com/category/reports-by-govt-authorities/  ஐ பார்வையிட்டால் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு மாறானவை என்பதற்கான மத்திய மாநில அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கைகள் உள்ளன. அதனை பார்த்தால் இந்த செய்தி எந்த உள்நோக்கத்திற்காக திரு. காட்சன் வெஸ்லி தாஸ் போன்றவர்களால் வெளியிடப் படுகிறது என்பது தெரியும்.


12. அதே இணையதளத்தில் வீடியோவில் சென்று பார்த்தால் திரு.தயாதேவதாஸ் விவி நிறுவனத்திற்கு  எதிராக எப்படி பொய் சாட்சி சொல்ல வேண்டும் என பயிற்சி கொடுக்கும் வீடியோவும் உள்ளது. இந்த விபரங்களும் திரு. காட்சன் வெஸ்லி தாஸ்க்கு தெரியும். ஆனாலும் தென் மாவட்டங்களில் 1945 முதலே மீனவ சமூகத்தினருக்கும், நாடார் சமூகத்தினருக்கும் நிரந்தர பகை உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இப்போது இவர் உண்மைக்கு மாறாக இம்மாதிரியான செய்திகளை எழுதி வருகிறார்.


13. இன்றைய செய்திக்கும் நான் ஒரு மறுப்பு கருத்துரையை பதிவு செய்திருந்தேன். ஆனால் அந்த மறுப்பு கருத்துரை வழக்கம் போல் வெளிவரவில்லை. எனவே இதனை எனது இணையதளத்தில் பதிவு செய்துள்ளேன். 


14. தாது மணல் தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்ல, அதனால் வேலை பெற்று பயன் அடைத்த தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கங்கள், இதர சிறு குறு தொழில் அதிபர்கள் என அனைவரும் இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நேர்மையான ஆசிரியரும், உரிமையாளர்களும் நிச்சயம் இதில் நடவடிக்கை எடுப்பார்கள். உதாரணத்திற்கு ஏற்கனவே கேரளாவில் இந்தியன் எக்ஸ்பிரசில் விவி மினரல் நிறுவனத்திற்கு எதிராக ஒரு தவறான செய்தி வெளியானது. இது பற்றி தெரிந்த உடன் நிறுவனத்தில் இருந்து மேற்கண்ட பத்திரிக்கை அலுவலகத்திற்கு மின் அஞ்சல் அனுப்பினார்கள். உடனடியாக அவர்கள் அந்த பதிலை வெளியிட்டார்கள். அதனை https://beachmineral.com/mr-s-vaikundarajan-of-vv-mineral-clarification-about-the-false-allegation-was-accepted-by-new-indian-express-cochin-and-regretted-for-having-carried-a-one-sided-report/ --ல் பார்க்கலாம். எனவே சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட நேர்மைக்கு பெயர் போன இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் கவனத்திற்கு திரு. காட்சன் வெஸ்லி தாஸ்சின் ஒரு தலைபட்ச செயல்பாடுகள் பற்றி நாம் அனைவரும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.


No comments:

Post a Comment