Wednesday 12 February 2020

பேச்சும்_வெற்றியும்



*எப்படிபட்டவர்களையும் பேச்சின் மூலம் வெற்றி கொள்ள முடியும் எப்படிப்பட்ட காரியங்களையும் சாதித்து விட முடியும்...*

*கொஞ்சம் திறமை தான்*
*நிதானம், நல்யோசனை, இருந்தால்.*                 

*ஆனால் சிலர் என்ன பேசுகின்றோம்..*
*ஏது பேசுகின்றோம்..?*

*இதனால் எதிராளியின் மனநிலை என்ன ஆகிறது..*       
*என்ன பின் விளைவுகள் உண்டாகும்      என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் சிலர் பேசிக் கொண்டே இருப்பதனால் தான் தோல்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மன உளைச்சளும் உண்டாகிறது...*

*அறியாமையினாலும் சில சமயங்களில் தெரிந்தே அல்லது அகங்காரம் பிடிவாதம் ஈகோ போன்ற காரணங்களாலும் வறட்டு கௌரவத்தாலும் வீண் தம்பட்டங்களாலும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி எல்லாவற்றையுமே கெடுத்துக் கொள்வோம்.*

*இதுவே எல்லாவகையான பாதிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகின்றது.*

*"திறனறிந்து* *சொல்லுக சொல்லை*
*அறனும்*
*பொருளும் அதனினூஉங்கு இல்."*

*சொல்ல வேண்டியதை சொல்லும் போது தம் நிலமையையும் கேட்போரின் நிலமையையும் கூறும் செய்தியின் நிலமையையும் அறிந்து அதற்கேற்றாற் போல சொல்ல வேண்டும்.*

*அப்படி சீர்தூக்கி சொற்களைச் சொல்வோமாயின் அதைப் போல சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.*
*எனத் திருக்குறள்(644ல்) எடுத்தியம்புகிறது.*

*எனவே பேசுவது ஒரு கலை ஒரு அழகு, சில சமயங்களில் வெற்றிக்கான முதலீடும் அதுவே பெரும்பாலான காரியங்களை சாதித்து விடவும் முடியும்...!*

*நம்மிடம் இருக்கும் திறமையை ஆக்க வழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்..*
*அழிவு வழியிலும் கொண்டு சென்று விடலாம்.*

*இந்த அருமையான பேச்சுக்கலையின் மூலம் எவருக்கும் எதற்கும் தீங்கில்லாமல்,*

*யாருக்கும் கெடுதல் நினைக்காமல்,*

*நியாயமாக நமக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொள்வதில் தவறில்லை..*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

*வாழ்க வளத்டன்*

No comments:

Post a Comment