Sunday 12 January 2020

சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு

சிறு வயதில் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் நலமுடன் வாழவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மிகவும் உதவி கரமாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட சிறப்பான பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் சேமிக்கும் பழக்கம்.

சேமிப்பினை குறித்து சிறு வயதில் இருந்து வீட்டிலும், பள்ளிக் கூடத்திலும் அறிவுறுத்தி ஊக்கப்படுத்தும் நிலை அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.

''சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும்.

ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பிய உடன் ஆச்சரியம் ஆகிறது.

காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே.

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும்.

நாம் உண்ணும் சோறு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது.

சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும்.

சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு உதவுகிறது.

கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும். நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே.

ஆம்.,நண்பர்களே..

எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில் நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது..

நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப் படுகிறது.

எதிர்பாராமல் வரும் செலவு களை எதிர் கொள்வதற்கு ''சேமிப்பு எனும் பாதுகாப்பை'' ஏற்படுத்திக் கொள்வோம்..

No comments:

Post a Comment