கடந்த பாராளுமன்ற தேர்தலில் கனிம சட்டத்தை மோடி அரசு திருத்தியது. கனிம சட்டத்தில் வெளிப்படையான தன்மையை கொண்டு வருவதற்கு என இதற்கு ஒரு காரணம் கூறப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு 2ஜி ஸ்பெக்டரம் என்னும் செலவில்லா இயற்கை வளத்தை அரசு ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தது தவறு என்று தான். அதே போல் நிலக்கரி சுரங்கங்களை மின் உற்பத்தி செய்யாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும் அரசு ஒதுக்கீடு செய்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உடனடியாக குடியரசு தலைவரிடம் இருந்து கனிமங்களுக்கு குத்தகை வழங்குவதற்கு ஏல முறை கடை பிடிக்க வேண்டுமா என கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. உச்சநீதிமன்றம் குடியரசு தலைவரின் மேற்கண்ட கடிதத்தை பரிசீலித்து ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் தங்களது ஏலம் என்ற தீர்ப்பு 2ஜி ஸ்பெட்ரத்திற்கு தான் பொருந்தும் என்றும் கனிமங்களுக்கு இது பொருந்தாது என்றும் ஏனென்றால் அதனை வைத்து பல்வேறு உபதொழில்கள் வேலை வாய்ப்பு, பல்வேறு வகையான வரி வருவாய்கள் முதலியவை அரசுக்கு கிடைக்கும் என்றும் எனவே கனிமங்களை பொறுத்த வரையில் அரசு நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே குறிப்பிட்டது. ஏலம் விட வேண்டும் என குறிப்பிட வில்லை.
தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறி ஏல முறையை அறிமுகப்படுத்தி இந்தியாவை அந்நிய பொருளாதரத்திற்கு அடிமை பட இந்த அரசு வழி செய்து விட்டது. நிலக்கரியை ஏலம் எடுத்த நபர்கள் சொல்லும் விலைக்கு வாங்கினால் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். எனவே மின்சாரம் உற்பத்தி விலை அதிகரித்து மின் கட்டணம் உயரும்.
சுண்ணாம்புக்கல் ஏலத்திலேயே இனி வாங்க வேண்டும். எனவே சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிமெண்ட் விலையை கூட்டுவதை அரசும் தடுக்க முடியாது. எனவே நடுத்தர ஏழை குடும்பங்கள் சிமெண்ட்டால் வீடு கட்டுவதை இனி கனவில் தான் கட்ட வேண்டும்.
இரும்பு தாதும் ஏலம். எனவே வீடு கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் விலை கூடும். எனவே சொந்த வீடு என்பது நடுத்தர ஏழை மக்களுக்கு இனி கற்பனையில் தான் சாத்தியம்.
அனுபவ அறிவு இல்லாததால் இவற்றிற்கு ஏல முறையை கொண்டு வந்தார்கள். இது பொது மக்களை கடுமையாக பாதிக்கும். விளைவு இந்திய சிமெண்ட் இரும்பை விட வெளிநாட்டு சிமெண்ட், இரும்பு விலை குறைவாக இருக்கும். எனவே இந்திய தொழில் அழியும். அன்னிய தொழில் வளரும்.
இது மக்களுக்கு விரோதமான ஒரு சட்ட திருத்தம். பெருந்தலைவர் காமராஜர் போல் அனுபவ அறிவு உள்ள எவரும் இந்த அமைச்சர் அவையில் இடம் பெறாதது தான் இதற்கு காரணம். இந்த சட்ட திருத்தத்தின் பாதிப்பு மக்களை சென்றடைய நான்கு வருடங்கள் ஆகும். இதன் எதிரொலி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தெரியும்.
No comments:
Post a Comment