நாடார் வளர்ச்சிக்கான இட உரிமை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் திரு.சௌந்திரபாண்டியனார், சமூக நீதி பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. அந்த புத்தகம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. தொழிலில் சிறந்து விளங்கும் நாடார் சமுதாயத்தினர் கல்வியிலும் சிறந்து விளங்கி அரசின் பல்வேறு பகுதிகளில் இருந்தால் மட்டுமே சமுதாயத்திற்கும் தொண்டு செய்ய முடியும். சமூகத்திற்கு ஏற்படும் தீங்கையும் தடுக்க முடியும். அதற்கு சமூக பற்றுள்ளவர்கள் இதனை வாசித்து அடிப்படையை அறிவதோடு மற்றவர்களுக்கும் விளக்கலாம். இந்த புத்தகம் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்து ரமேஷ் அவர்களால் பகிரப்பட்டது தான்.
Thursday, 4 June 2020
Tuesday, 17 March 2020
Monday, 16 March 2020
Wednesday, 26 February 2020
Wednesday, 12 February 2020
பேச்சும்_வெற்றியும்
*எப்படிபட்டவர்களையும் பேச்சின் மூலம் வெற்றி கொள்ள முடியும் எப்படிப்பட்ட காரியங்களையும் சாதித்து விட முடியும்...*
*கொஞ்சம் திறமை தான்*
*நிதானம், நல்யோசனை, இருந்தால்.*
*ஆனால் சிலர் என்ன பேசுகின்றோம்..*
*ஏது பேசுகின்றோம்..?*
*இதனால் எதிராளியின் மனநிலை என்ன ஆகிறது..*
*என்ன பின் விளைவுகள் உண்டாகும் என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் சிலர் பேசிக் கொண்டே இருப்பதனால் தான் தோல்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மன உளைச்சளும் உண்டாகிறது...*
*அறியாமையினாலும் சில சமயங்களில் தெரிந்தே அல்லது அகங்காரம் பிடிவாதம் ஈகோ போன்ற காரணங்களாலும் வறட்டு கௌரவத்தாலும் வீண் தம்பட்டங்களாலும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி எல்லாவற்றையுமே கெடுத்துக் கொள்வோம்.*
*இதுவே எல்லாவகையான பாதிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகின்றது.*
*"திறனறிந்து* *சொல்லுக சொல்லை*
*அறனும்*
*பொருளும் அதனினூஉங்கு இல்."*
*சொல்ல வேண்டியதை சொல்லும் போது தம் நிலமையையும் கேட்போரின் நிலமையையும் கூறும் செய்தியின் நிலமையையும் அறிந்து அதற்கேற்றாற் போல சொல்ல வேண்டும்.*
*அப்படி சீர்தூக்கி சொற்களைச் சொல்வோமாயின் அதைப் போல சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.*
*எனத் திருக்குறள்(644ல்) எடுத்தியம்புகிறது.*
*எனவே பேசுவது ஒரு கலை ஒரு அழகு, சில சமயங்களில் வெற்றிக்கான முதலீடும் அதுவே பெரும்பாலான காரியங்களை சாதித்து விடவும் முடியும்...!*
*நம்மிடம் இருக்கும் திறமையை ஆக்க வழியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்..*
*அழிவு வழியிலும் கொண்டு சென்று விடலாம்.*
*இந்த அருமையான பேச்சுக்கலையின் மூலம் எவருக்கும் எதற்கும் தீங்கில்லாமல்,*
*யாருக்கும் கெடுதல் நினைக்காமல்,*
*நியாயமாக நமக்கு ஆகவேண்டியதை சாதித்துக் கொள்வதில் தவறில்லை..*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*வாழ்க வளத்டன்*
50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை...!
இப்பல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் சோர்ந்து போகின்றனர்
50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை அடைந்த பலரை இப்போது பார்க்க முடிகிறது.
50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான / வலுவான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.
10,000 கி.மீ பக்குவமா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 50 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்..!!
50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.
1. புதியதை தேடுங்கள்: 50களில் வாழ்க்கையில் செட்டில் ஆய்ட்டோம்னு நெனச்சா, இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் வந்து உட்கார்ந்து மொக்கை போடும்...... புதிய திரைப்படங்கள் பாருங்கள். இப்பல்லாம் *அந்தக்காலம் மாதிரி இல்லை* ன்னு மொக்கை போடாதீங்க
எனவே புதிய உந்து சக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.
2. இளைஞர்களோடு பழகுங்கள்:
50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள்......
உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்..!
உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்.....
அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்..!
3. அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்..... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்..!
4. அடிக்கடி பயணம் செல்லுங்கள்: உடனே 50+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்.. !
இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள் ..!வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்..... இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்..!
5. நிறைய படியுங்கள்: மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்..... தேர்வு செய்து படியுங்கள்..!
புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்..... அவர்கள் பேச்சைக் கேளுங்கள்.
அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்..!
மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை...!
மூளையும் மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது..?
எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கறது..... நீங்கள் 50+ காரராக இருந்தால் தாமதிக்காதீர்கள்...!
இது உங்கள் ஆட்டம்.....

ஆட்டத்தை துவங்குங்கள்..!
Subscribe to:
Posts (Atom)