சொன்னது போலவே திரு.வைகுண்டராஜன் அவர்களை சந்திக்கும் போது அவர் எந்த பதற்றமும் இன்றி அமைதியாக தன் பணிகளை செய்து கொண்டு இருந்தார். சாட்டை துரைமுருகன், மற்றும் சில தொலைக்காட்சி ஊடகங்களின் பதிவுகள், பத்திரிக்கை செய்தி பதிவுகள் பற்றி சொல்லி கேட்டு ஏன் மறுப்பு பதியவில்லை என கேட்டேன். இரண்டு காரணத்தை சொன்னார். ஒன்று தனது முகநூல் கணக்கு கடந்த 10 தினங்களாக முடக்கப் பட்டுள்ளது. அதனை சரி செய்ய கேட்கும் போது ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆவணம் கேட்கிறது. ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இன்னும் என்னால் முகநூலை திறக்க முடியவில்லை. எனவே பதிய முடியாது. இரண்டாவது தெருவில் போகும் போது சில வாகனங்கள் நம் மீது சேற்றை வாரி இறைக்கும். சகதியில் புரண்ட பன்றி வாலை ஓங்கி வீசும் போது அருகில் உள்ள அனைவர் மீதும் சகதி படும். அதற்காக நாம் பதிலுக்கும் அதன் மீது சகதி வீசினால் யாருக்கு இழப்பு. எனவே இம்மாதிரி பதிவுகளை பன்றியின் உடலில் உள்ள சகதி அல்லது சேறு என நினைத்து ஒதுங்குவது தான் நல்லது என கூறினார். வழக்கின் பின்னணி பற்றி பேசினேன். தன் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதையும் தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் சரியாக உள்ளன என்றும், துரதிஷ்டவசமாக தன்னோடு 1995 முதல் பகைமை கொண்டுள்ள திரு.ககன்தீப்சிங் பேடி நியமிக்கப் பட்டார் என்றும் அவருக்கும் தனக்கும் உள்ள பகைமையை உயர்நீதிமன்றம் உறுதி செய்து விவி மினரல் பற்றி விசாரிக்க கூடாது என உத்தரவிட்ட நிலையில் ஒரு அமைச்சர் தலையீட்டில் இதற்கு இடைக்கால தடை வாங்கவில்லை என்றால் பணம் பெற முடியாது என கூறி டிவிசன் பெஞ்ச்சில் இடைக்கால தடை பெற்று அவரை வைத்து எதிராக அறிக்கை தயாரித்து பெற்றார்கள். அவரும் ஏற்கனவே பட்ட அனுபவத்தில் அருகில் விவி நிலம் உள்ளது. எனவே அவர்கள் இல்லீகல் மைனிங் செய்திருக்கலாம் என அறிக்கை கொடுத்தார் என அறிக்கையின் சில பக்கங்களை காட்டினார். அந்த அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. எனக்கு இதனை பார்க்கும் போது ஒன்று நினைவுக்கு வந்தது. என் வீட்டின் அருகில் ஒட்டி உள்ள வீடு இன்னொரு நபருக்கு. எனவே அவர் தான் என் வீட்டில் கொள்ளை அடித்திருக்க முடியும் என்று புகார் கொடுத்தால் அதனை விசாரிக்காமல் சரிதான் என தீர்ப்பு கொடுக்கும் நிலையில் இந்திய நீதித்துறை அதலபாதாளத்திற்கு போய் விட்டதோ...இதே நிலை நீடித்தால் இந்தியாவை யார் காப்பது? சட்டத்தின் ஆட்சியை யார் நிலை நிறுத்ததுவது? மேலும் ஏராளமாக நாங்கள் பேசினோம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் கூடுதலாக விபரங்களை என்னால் இந்த இனத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இந்த நடைமுறை சரிதானா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment