Sunday, 6 April 2025

தற்போதும் வைகுண்டராஜனால் சாட்டை துரைமுருகன் போல் ஏராளமான நபர்களுக்கு பிழைப்பு


முகநூலில் சாட்டை துரைமுருகன் என்பவர் திரு.வைகுண்டராஜன் அவர்கள் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்ததற்கு கண்டனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப் படுகின்றன. இதனுடைய சூழ்ச்சியை தெரியாமல் வைகுண்டராஜன் நட்புகளும் ஆதரவாளர்களும் அவசர பட வேண்டாம். உங்களுக்கு நினைவிருக்கும். 2018-ல் வைகுண்டராஜன் குருப் நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியது சுமார் 12000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரி துறையில் அறிவிப்பு வெளியிட்டார்கள்.  அனைத்து ஊடகங்களும் வைகுண்டராஜன் எதிரிகளும் எள்ளி நகையாடி கொக்கரித்தார்கள். ஆனால் அப்போதும் நிதானம் இழக்காத அண்ணாச்சி எந்த இடத்திலும் தவறுதலாக வார்த்தை விடவில்லை. ரெய்டு பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கும் வியாபாரி என்றால் இம்மாதிரி சோதனைகளை தாchap தான் தீர வேண்டும் என கூறினார். முடிவு என்ன? வருமான வரி துறையே உரிய நேரத்தில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளீர்கள் என பாராட்டி 2019-20 வருடத்திற்கு பாராட்டு சான்று கொடுத்தது. முகநூலில் எடுத்த மேற்கண்ட சான்று கீழே உள்ளது. எனவே புகார் வழக்கு பதிவு, தீர்ப்பு, உத்தரவு என்பவை எல்லாம் ஏதாவது ஒரு காரணங்களுக்காக இருக்கும். நான் இன்று திரு.வைகுண்டராஜனை சந்தித்து விட்டு முழு விபரங்களை பதிவிடுகிறேன். அது வரை யாரும் ஆத்திரபட வேண்டாம். பிரபல பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளே திரு.வைகுண்டராஜன் பற்றி எழுதினால் தங்களுக்கு ஏராளமாக கூடுதல் சர்க்குலேசன் வருகிறது என எழுதும் போது சாட்டை துரைமுருகனோடு கட்சியில் உள்ள ஒரு நெல்லை வழக்கறிஞர் வைகுண்டராஜன் சகோதரரோடு இருப்பவர் குடும்ப பகையில் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு சாட்டை துரைமுருகனிடம் இந்த பதிவை போட சொல்லி உள்ளார் என கேள்வி. இது பற்றி திரு.வைகுண்டராஜன் கவலை கொள்ளவில்லை. நாம் நமது அன்பையும் பாசத்தையும் காட்ட கண்டனத்தை தெரிவித்து சாட்டை துரைமுருகனை பெரிய மனிதனாக்க வேண்டாம். அவர் வாங்கிய காசுக்கு பேசுகிறார். பேசட்டும். எப்படியோ வைகுண்டராஜனால் அவருக்கும் பணம் கிடைக்கிறது.







No comments:

Post a Comment