நேற்றும் இன்றும் ஊடகங்களும் யூடியுப்பர்கள் தங்களது வருவாயை பெருக்க வசதியாக வைகுண்டராஜன் வீடு, அலுவலக ங்களில் சிபிஐ சோதனை என கொட்டை எழுத்தில் செய்தி வருகிறது. உண்மையில் 23 நபர்கள் சம்பந்தமாக 7 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 23 நபர்களில் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர் திரு.வைகுண்டராஜன் என்பதால் அவர் பெயரை ஊடகங்களும் சாட்டை துரைமுருகன் போன்ற நபர்களும் உபயோகித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பு வந்தது. அதில் உத்தரவிட்ட படி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த உத்தரவிற்கு மேல்முறையீடு செய்ய மூன்று மாத காலம் அவகாசம் இருந்தாலும் ஏதோ காரணத்திற்காக நான்கு வாரங்களுக்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த வழக்கு பதிவு மற்றும் இந்த உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி நான் சார் ஆட்சியராக இருக்கும் போது வைகுண்டராஜனிடம் தோற்றதால் தற்போது பழிவாங்கி விட்டேன் என கூறிக் கொள்கிறார்.
திமுக அமைச்சர்கள் 2011-ல் எங்களை தோல்வி அடைய வைகுண்டராஜன் ஒரு கருவியாக செயல்பட்டதால் தற்போது வைகுண்டராஜனை பழிவாங்கி விட்டோம் என கூறுகிறார்கள்.
ஆனால் ஒரு அகில இந்திய கட்சியோ முதல் தகவல் அறிக்கையில் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் இடையே உள்ள தொடர்பு சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்கலாம் என டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முதல் தகவல் அறிக்கை போடப் பட்டுள்ளது. அப்பீல் செய்யும் காலம் கடறும் வரை அமைதியாக நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை இருக்கும். அப்பீல் காலம் கடந்த பிறகு எப்படி செந்தில்பாலாஜி வந்தாரோ அதுபோல் அரசுக்கு உதவி செய்யும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அதிகமாக குதிக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் வருவார்கள். நிறுவன பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசு சாட்சியாக மாறுவார்கள். பொறுத்து இருந்து பாருங்கள் என கூறுகிறார்கள்.
திரு.வைகுண்டராஜன் அவர்களோ நான் சட்டப்படி அனைத்தையும் சரியாகத்தான் செய்துள்ளேன். என் மீது எந்த தவறும் கிடையாது. மத்தியிலும் மாநிலத்திலும் சுமார் 17 துறைகளின் அனுமதிகள் பெறப் பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அனுமதி தர மறுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் அறிக்கைகளே அனுப்பப் பட்டன. எனக்கு வழங்கப் பட்ட அனுமதியை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப் பட்டு அவை பரிசீலித்து வழக்குகளை தள்ளுபடி செய்தன. மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப் பட்டன. சிறப்பு அனுமதி மனுவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. எனவே விசாரணை சமயத்தில் என் தரப்பு ஆவணங்களை நான் காண்பிப்பேன். வுpசாரணையை எதிர்கொள்ள எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் மடியில் கனம் இல்லை. ஆனால் சட்டப்படி செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம் டெபாசிட் ஆகியவை செலுத்தாமல் திருச்சியில் ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பங்காக உள்ள இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனி, சதர்ன் எண்டர்பிரைசஸ் என்ற இரண்டு நிறுவனங்களுக்கு ஆறு சுரங்க குத்தகைகள் வழங்கப் பட்டுள்ளன. அவை சட்ட புறம்பாக வழங்கப் பட்டவை.
குமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் என்னும் ஒரு அரசு நிறுவனம் 1991-ல் முடிந்த சுரங்க குத்தகையை வைத்து 2021 வரை சுரங்க பணி செய்து வந்தது. 1991 முதல் அவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி, மாசுக்கட்டுப்பாடு அனுமதி போன்ற எந்த சட்டபூர்வ அனுமதியும் பெறவில்லை. அந்நிறுவனத்தை அனுமதியின்றி இயக்க அனுமதித்த அலுவலர்கள் யார்? அந்த நிறுவன உயர் அதிகாரிகளோடு தற்போதைய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், முதல்வர் ஒப்பந்தம் கையொப்பம் செய்தார்களே அது பத்திரிக்கையிலும், செய்தியிலும் வந்ததே எப்படி அந்த ஒப்பந்தத்தை செய்தார்கள்? என்பன போன்ற விபரங்களையும் சிபிஐ விசாரிக்கும் தானே. இவை சம்பந்தமான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்கான ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
அரசு நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம். 2008-ல் நான் ஹைதராபாத்தில் இருக்கும் போது மிடாலம் கடற்கரையில் குளிக்கும் சில பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறி கருங்கல் காவல்நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற ஒரு டிஐஐp மொத்தம் 12 வழக்குகளை எனக்கு எதிராக தயாரித்து அனைத்தையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். ஆறு மாதகாலம் நான் முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாக இருந்தேன். இறுதியில் 10 வழக்குகள்; அவர்களாகவே பொய் என முடித்து வி;ட்டார்கள். இரண்டு வழக்குகளை நீதிமன்றம் விசாரணைக்கு முன்பாகவே ரத்து செய்து விட்டது. எனவே அரசு நினைத்து கொடுக்கும் தொந்தரவுகளை தாங்குவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு நான் எதிர்வினை ஆற்ற வைக்க வேண்டும். அப்போது தான் அரசு இன்னும் கோபத்தில் பல வழக்குகளை பதிவு செய்து தொந்தரவு கொடுக்கும் என திட்டமிட்டு குடும்ப பகையில் எனது சகோதரரின் ஒரு பையன் அவனோடு இருக்கும் சில கிரிமினல் வழக்கறிஞர்களை வைத்து இதற்காக பிரஸ்மீட்; கொடுக்கிறார். சாட்டை துரைமுருகன் போன்ற மனிதரில் விவசாயம் செய்யும் நபர்களை வைத்து யூடியூப்பில் பதிவு செய்கிறார். அவர்கள் எண்ணம் அரசுக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் நேரடி பகையை உருவாக்கி மேலும் சில குற்ற வழக்குகளை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பது தான். நான் ஏற்கனவே தாஸ் படத்தில் வீராப்பாக ரியாக்சன் செய்த வடிவேல் கிட்னியை இழந்த காட்சியை பார்த்துள்ளேன். எனவே என்னிடம் எந்த ரியாக்சனும் வராது. மற்றவர்களும் தயவு செய்து இதற்கு ரியாக்ஷன் செய்ய வேண்டாம்.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. என்மீது நெல்லையில் ஒரு தீண்டாமை வன்கொடுமை சட்ட வழக்கை எனது சகோதரர் மகன் ஏற்பாட்டில் பதிவு செய்தார்கள். நான் வைகுண்டராஜனையை எதிர்த்து வழக்கு தொடுத்துவன் என்று வீராப்போடு சில நபர்களை வெட்டினார். கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். அந்த வழக்கு பதிவு செய்ய உடந்தையாக இருந்த ஆய்வாளர் சோமசுந்தரம் மீது நான் பல்வேறு புகார் மனுக்கள் எழுதினேன். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியில் கடவுள் கேட்பார் என விட்டு விட்டேன். கடவுள் கேட்டார். ஒரு லாக்அப் டெத்தில் முதல் குற்றவாளியான ஆய்வாளர் சோமசுந்தரம் உட்பட எட்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடவுள் தண்டித்து விட்டார். எனவே எனக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடவுள் பார்த்துக் கொள்வார். இது பற்றி டென்சன் ஆக வேண்டாம் என திரு.வைகுண்டராஜன் கூறினார்.
இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை நாம் தற்போது தெரிந்து கொண்டோம். ஏதேனும் ஒரு கால கட்டத்தில் அவர்கள் நம்மிடம் வருவார்கள். நாம் எச்சரிக்கையாக இருப்போம். அல்லது அப்போது பாடம் புகட்டுவோம் என கூறினார்.
நான் நானாக இருந்தால் இவ்வளவு அமைதியாக தீர்க்கமாக யோசிக்க முடியாது. பதிலுக்கு பதில் உடன் கொடுக்க வேண்டும் என நினைப்போம். பலதையும் சிந்தித்து அமைதியாக இருக்கும் திரு.வைகுண்டராஜன் அமைதியை நாம் பாராட்ட தான் வேண்டும். எனவே நாமும் அமைதி காப்போம். மேலும் பல விபரங்களை கூறினார். அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment