Tuesday, 3 December 2019

13-லிருந்து 37: தமிழக மாவட்டங்கள் பிறந்த கதை

மெட்ராஸ் ராஜதானியில் இருந்து ஆந்திராவும் கர்நாடகாவும் பிரிந்தபோது, தமிழகத்தின் மாவட்டங்கள் பெரியதாக இருந்தன. இதனால் நிர்வாகம் செய்ய முடியாத ஒரு நிலை இருந்து வந்தது. அப்போதுதான் இதற்கு தீர்வாக மாவட்டங்களை இரண்டாகவும் மூன்றாகவும் பிரிப்பது என்று முடிவானது.

முதன்முதலில் பிரிக்கப்பட்ட மாவட்டம் தர்மபுரி. இது ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்தின் கீழ் இருந்து வந்தது.

1966ஆம் ஆண்டு முதலமைச்சர் பக்தவாசலம் தலைமையிலான அரசு தர்மபுரியைத் தனி மாவட்டமாகப் பிரித்தது. இந்த தர்மபுரியின் எல்லை, தற்போதைய தர்மபுரியைவிட பெரியதாக இருந்தது. இந்த மாவட்டம் மேலும் இரண்டாகப் பிரிந்து, கிருஷ்ணகிரி புதிய மாவட்டமாக உருவெடுத்தது.

இதன்பின்னர் 1974ஆம் ஆண்டு தற்போதைய அறந்தாங்கி, இலுப்பூர், புதுக்கோட்டைப் பகுதிகளை அன்றைய தஞ்சாவூரிடம் இருந்தும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்தும் தனியாகப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அளவில் பெரியதாக இருந்து கோவை மாவட்டம் 1979 ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஈரோடு என்று புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் புவியியல் எல்லை பெரிதாக இருந்த காரணத்தால், அது மூன்றாக உடைக்கப்பட்டு விருதுநகர் மற்றும் சிவகங்கை எனப் புதிதாக இரண்டு மாவட்டங்கள் பிறந்தன.

1980களில் மட்டும் புதிதாக எட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவானது. திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்தும்; தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும் இந்த காலகட்டங்களில் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 1990களில்தான் அதிக முறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென் ஆற்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களாக உருவானது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து கரூர் மற்றும் பெரம்பூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுமட்டுமின்றி தேனி, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.


1960ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம் மாவட்டம், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம் திருநெல்வேலி, கன்னியாகுமரி என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டது. முதன்முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்றும், தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றும் அறிவித்தார். அப்போதைய நெல்லை மாவட்டத்தை கட்டபொம்மன் மாவட்டம் என்றும் பெயர் சூட்டினார்.

இதற்கு நெல்லை என்ற பெயரை நீக்கக்கூடாது என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என்று மாற்றி அழைக்கப்பட்டது.

மேலும் விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்றும், சிவகங்கை மாவட்டத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மாவட்டம் என்றும் அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட முற்பட்டார், இது அப்போது மிகுந்த விவாதப் பொருளானது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதி, அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் அண்ணா மாவட்டம் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இது ஏற்கப்படாததால் 1989-இல் கருணாநிதி முதல்வரானதும் திண்டுக்கல் மாவட்டத்தின் பெயரில் இருந்து அண்ணாவை நீக்கி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் எனப் பெயர் சூட்டினார்.

நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டமாகவும், திருவண்ணாமலை சம்புவராயர் பெயராலும் அழைக்கப்பட்டது. இப்படிப் பல தலைவர்களின் பெயர்களில் தமிழக மாவட்டங்கள் இருந்தன.

1996 காலகட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அணைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்கள் காஞ்சிபுரம் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டன. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 32 மாவட்டங்களாக இருந்துவந்த எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் பிரிப்பது தமிழகத்தில் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அன்று. இந்தியா முழுவதுமே தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

39 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்

ஆனால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 39 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களின் பகுதிகளும் வருகின்றன. இதனால் அரக்கோணம் தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை ஒதுக்குவதில் சிக்கல் எழுகிறது.

ஒரே மக்களவை உறுப்பினர் எப்படி மூன்று மாவட்டங்களின் வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில், நாடாளுமன்றத் தொகுதிகளே மாவட்டங்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கான உள்கட்டமைப்புக்கு சுமார் ரூ.70 கோடி செலவாகும். மேலும் மாவட்டங்கள் புதிதாக அறிவித்த போதிலும் நிர்வாக ரீதியாகப் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியும் வருகின்றன.

இந்நிலையில் நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தையும், கோவையிலிருந்து பொள்ளாச்சியையும் தனி மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

நாடார் ஆலய பிரவேச போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் கமுதி. கிட்டதட்ட 6483 மக்கள் தொகையை கொண்டது (1855ல்). இதில் குறிப்பிடதக்க எண்ணிக்கையில் நாடார்கள் வாழ்ந்து வந்தார்கள். 1855-நவம்பர் மாதம்  மீனாட்சி சுந்தரேஸ்வரர்  ஆலயத்தில் நாடார்கள் நுழைய ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் திரு. பாஸ்கர சேதுபதியிடம் உரிமைகேட்டபோது மறுக்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு, மே மாதம் 14ம் நாள் மாலை ஆறுமணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் சில நாடார்கள் மேளாதாள ஆரவாரத்துடன் கோவில் ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி நுழைந்தார்கள்.  தேங்காய் உடைத்து முருகன் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்கள். சட்டம் ஒழுங்கு கடுமையாக கவனிக்கப்பட்ட வெள்ளையர்கள்  ஆட்சி காலம். குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. கூடவே நாடார்கள் நுழைவால் தீட்டுப்பட்ட கோவிலை பார்ப்பன புரோகிதர்களை கொண்டு மகா சம்ப்ரோஷணம் செய்ய ரூ.2500 வழங்கவும் கோரி பாஸ்கர சேதுபதியால் வழக்கு பதியப்பட்டது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் பொறையாரை சேர்ந்த இரத்தினசாமி நாடார் என்னும்  பெருஞ்செல்வர் ஒரு முயற்சி செய்தார். அதாவது நாடார்கள் ஆலயத்திற்குள் செல்ல 30,000 கொடுப்பதாகவும் அவர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்கும்படியும் கேட்டார். பாஸ்கர சேதுபதியும் ஒத்துக்கொள்ள முன்பணம் 5,000 கொடுக்கப்பட்டது. இப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் மேற்சொன்ன வழக்கில் தீர்ப்பு வரும் போது பிரச்சினை வரும் என கருதிய மதுரை மாவட்ட ஆட்சியர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய சொன்னார். ஒப்பந்தம் ரத்தானது. கமுதி ஆலய நுழைவு  வழக்கில் 20-7-1899ல் தீர்ப்பு வந்தது. .

நீதிபதி வரதராவ் அளித்த தீர்ப்பு இந்து சனாதன தர்மம் என்றால் என்ன வென்று உலகிற்கு காட்டியது. பாஸ்கர சேதுபதி சார்பில் 38 பார்ப்பனர்கள் சாட்சியளித்தார்கள். நாடார்கள் சார்பில் 23 பார்ப்பனர்கள் சாட்சியளித்தார்கள். தீர்ப்பின் 114வது பத்தியில் “ இந்துக்கள் மத்தியில் சாதி வெறுமனே ஒரு சமூக நிறுவனமன்று. அது ஒரு மதக்கோட்பாடு. கடவுள் மனிதர்களை சமமற்றவகளாக கருதுகிறார், பறவைகள் அல்லது விலங்குகளின் வகைகளை படைத்துள்ளது போல தனித்தனி வகை மனிதர்களை அவர் படைத்துள்ளார். பிராமணர், ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என பிறந்துள்ள அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து பிரிந்தே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்புகிறார்கள் “  என குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து இந்துமத அடிப்படை நூல்களின் ஆதாரத்தோடு பார்கையில் நாடார்கள் மது தயாரித்தல் தொடர்புடைய சாதியாதலால் தீண்டதகாத சாதியெனவும், அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் ஏற்படும் தீட்டைகழிக்க தீட்டுக்கழிப்பு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லையெனில் விசயமறிந்தவர்கள் அக்கோவிலுக்குள் நுழையமாட்டார்கள் என்றும், அப்படியான கோவில்லுக்கு ஆன்மிக பலன் ஒன்றுமில்லையென்றும் சொல்லி அபராதம் தொகையும் செலுத்த சொன்னார். மேலும் நீதிபதி வரதராவ் தீர்ப்பில் 125வது பத்தியில் நாடார்கள் கமுதி கோவிலுக்குள் அதன் எந்தவொரு பகுதியிலும் நுழைய  நிரந்தர தடையிட்டார்.

நீதிபதி வரதராவ் தன் விருப்புவெறுப்புகளில் பால் இத்தீர்ப்பை வழங்கவில்லை. அவர் விசாரித்த 49 சாட்சிகளில் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்கவில்லை. ஒரே ஒரே சாட்சி அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கியதாக அவரே சொல்கிறார். அது தமிழ் தாத்தா என பலரும் கொண்டாடும் #உ_வே_சாமிநாத அய்யர். இந்து மத சாஸ்திரங்களை அவர் தான்  நீதிபதிக்கு சொன்னவர்.

வழக்கு மேல்முறையீடு செய்தார்கள் நாடார்கள் அங்கும் அவ்வாறே முடிந்தது. அந்த தீர்ப்பையும் எதிர்த்து நாடார்கள் லண்டன் பிரிவி கவுன்சிலிங்  தொடர்ந்தார்கள். 42,000 செலவில் நாடார்களால் நடத்தப்பட்ட வழக்கு இது. இதிலும் அவர்கள் வெற்றிபெற முடியவில்லை. அப்போது சவரன் விலை 18 ரூ. இந்த தொகையில் அவர்களால் ஒரு ஆலயமே கட்டியிருக்க முடியும். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது  மத அங்கீகாரம். அது கிடைக்கவில்லை. போராடியும் தோற்றார்கள்.

இதே காலகட்டத்தில் திருச்சூழியிலும் அய்யநாடன் என்பவர் நுழைய முயற்சிக்க தண்டிக்கப்பட்டார், 10 நாடார்கள் தீட்டுக்கழிப்பிற்கு ரூ.10 அபாராதம் செலுத்தினார்கள். இவையெல்லாம் நடைபெறும் அதே காலகட்டத்தில் பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் பெருமைகளை அயல்நாட்டில் பரப்ப  சென்ற #விவேகானந்தரின் பயண செலவை ஏற்றுக்கொண்டார். அவரும்  அனைத்து மதத்தை சேர்ந்தவர்களை சகோதரர்களே, சகோதரிகளே என  அழைத்து பேசினார். ஆனால் கமுதியில் ஒரே மதத்தை சேர்ந்தவர்களை தீட்டு என ஒதுக்கி வைத்துகொண்டு இருக்கும் கொடுமைகள் நடந்து கொண்டிருந்தது.

நாடார்களை ஆலயத்தினுள் விட மறுத்தது வெள்ளையர்கள் இல்லை, கிறிஸ்தவம் இல்லை, முகமதியர் இல்லை இந்து மதமே.  சனாதன வெறி பிடித்த இந்து தர்மமே. ஆனால் நீதிக்கட்சி உருவாகி பிற்காலத்தில் ஆலய நுழைவை சாத்தியமாக்கியது. அதையும் போராடித்தான் பெற்றோம். வரலாற்றில் யார் எதிரி ? யார் துரோகி என தெரிந்து தெளிதல் அவசியம்.

ஆதாரம் : நாடார் வரலாறு கறுப்பா... ? காவியா... ?ஆசிரியர்: தி.லஜபதிராய்

லஜபதிராய் திராவிட சித்தாந்தத்தில் ஊரியவர்

இவர் எழுதிய கமுதி  கலவர தொகுப்பில் விஜயநகர திராவிட (வடுக) நீதிபதியும் புதிய பிராமணரும் சேர்ந்து இப்படி தீர்ப்பு செல்லியிருக்கார்கள்

இதில் பிராமணர்கள் கெட்டவர்கள் என கூறி வடுகர்கள் ஆரம்பித்த நீதிகட்சி (பிராமணர் அல்லாதவர்கள் ஆனால் கீழ்ஜாதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழர்கள் கட்சி) பின்னாளில் திராவிட கட்சியாக ஆரம்பித்து வளர்ந்து  3 தலைமுறை வடுகர் தலைமையை (பெரியார் வீரமணி அண்ணா கருணாநிதி வைகோ விஜயகாந்த்) உருதிபடுத்தியது.

தமிழர்களை கோயிலுக்குள் தாங்களே போகாதவாறு நாத்திகம் பிராமண கிண்டல் செய்து கோயிலுக்கு வெளியே வைத்து பிராமணர்களை வடுகர்களை கோயில் நிர்வாகியாக்கி (சுறண்டி) தமிழர்களை அதில் தலையிடாமல் பார்த்துக்கொண்டது.

இது நான் நாம்தமிழர் கற்றுகொடுத்தது

Sunday, 3 November 2019

இன்றைய நீதி பற்றி அருமையான கதை

ஒரு செல்வந்தன் வீட்டுக்கு திருடன் ஒருவன் திருட சென்றான். அன்று இரவு மழை. திருடன் சுவரை தாண்டும் பொது சுவர் இடிந்து அவன் மேல் விழுந்து அவன் இறந்துவிட்டான். திருடனின் மனைவி அரசனிடம் புகார் கொடுத்தாள், வீட்டுக்காரன் சுவரை சரியாக கட்டவில்லை அதனால் தான் என் கணவன் இறந்தார் என்று.


வழக்கை விசாரித்த அரசன் நான் நீதி தவறாதவன் தவறு அந்த வீட்டுக்காரன் மேல் தான் அவனை உடனே பிடித்துவாருங்கள் என் ஆணையிட்டான். வீட்டுக்காரனிடம் விசாரணை நடந்தது அவன் கூறினான் தவறு என்னுடையதல்ல சுவரை கட்டிய கொத்தனாருடைய தவறு என. உடனே அரசன் கொத்தனார் தான் குற்றவாளி உடனே ,,,,,,,

அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

கொத்தனாரிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் 10 குவளை தண்ணீர் தான் ஊற்ற சொன்னேன் சித்தாள் அதிகம் ஊற்றிவிட்டன். தவறாக கலவை உண்டாக்கிய சிற்றாள் தான் தவறு செய்துவிட்டான் என கூறினான். உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

சித்தாளிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் 10 குவளை தண்ணீர் தான் ஊற்றினேன் ஆனால் குவளை அளவில் பெரியதாக இருந்தது. இந்த குவளையை செய்த குயவனின் தவறு தான் இது என கூறினான். உடனே அரசன் ,,,

குயவன் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

குயவனிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் குவளை செய்யும் பொது எங்கள் ஊர் நாட்டியக்காரி இங்கும் அங்குமாக நடந்து சென்று என் கவனத்தை சிதைத்துவிட்டாள். இது அவள் தவறு என கூறினான்.

உடனே அரசன் நாட்டியக்காரி தான் குற்றவாளி உடனே அவளை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

நாட்டியக்காரியிடம் விசாரணை நடந்தபோது அவள் கூறினாள் தவறு என்னுடையது அல்ல. நான் நாடகத்துக்கு உடுத்த வண்ணானிடம் கொடுத்த துணியை அவர் துவைத்து கொடுக்கவில்லை. ,,,

அதை கேட்கத்தான் நான் அங்கும் இங்கும் நடந்தேன், ஆதலால் தவறு வண்ணானுடையது என கூறினாள். உடனே அரசன் வண்ணான் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

வண்ணானிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. ,,,,

நான் துணி துவைக்கும் கல் மேல் முனிவர் ஒருவர் அனர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். என்னால் அவர் தியானத்தை கலைக்கமுடியவில்லை , துணியும் துவைக்கமுடியவில்லை. எனவே தவறு அந்த முனிவருடயது என்றான். உடனே அரசன் முனிவர் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

முனிவரிடம் விசாரணை நடந்தபோது முனிவர் எதையும் பேசவில்லை. அவர் மௌன முனி மௌனமாக இருந்தார். இதை கண்ட அரசன் மௌனம் சம்மதத்தின் அடையாளம் ஆகவே இவர் தான் குற்றவாளி இவரை தூக்கிலிடுங்கள் என தீர்ப்பு வழங்கினான்.,,

இப்படித்தான் இன்றைய நீதியும் உள்ளது. தவறு செய்பவனை விட்டுவிட்டு மாற்றி மாற்றி கை காட்டி தப்பித்துக்கொள்கின்றனர்.

அரசும் நாங்கள் நீதி தவற மாட்டோம் ஆதாரங்களும் ஆவணங்களும் தான் நீதிக்கு தேவை என தீர்ப்புகள் வழங்கி அழியா பாவம் செய்து கொண்டிருக்கிறது.

படித்ததில் பிடித்தது

Monday, 21 October 2019

முக்கிய வழக்குகளில் நீதித்துறையில் influence செய்ய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை


ஆரம்பம் முதலே தாது மணல் தொழில் வழக்குகள் வரும் போது நீதித்துறையில் influence  செய்வதற்று அல்லது அச்சுறுத்துவதற்கு என்று சந்தியா ரவிசங்கர் போன்ற காசுக்கு எழுதும் சில பத்திரிக்கையாளர்கள் வேண்டும் என்றே செய்தி வெளியிடுகிறார்கள் என்பதை நான் அப்போதில் இருந்தே கூறி வருகிறேன். இதே நிலை எல்லா முக்கியமான வழக்குகளிலும் உள்ளது என்பதை தற்போது மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது செய்தியாகவும் வெளிவந்துள்ளது. அந்த செய்தி இணைப்பு கீழே.

Justice Arun Mishra comes down upon the social media campaign to malign him. Justice MR Shah also echoes Justice Mishra's sentiments. Solicitor General Tushar Mehta also agrees with the judges.

" _There is a pattern wherein two days before important matters, an article appears on social media or a website, intended to influence the hearing. Nobody takes social media seriously but this pattern emreging should be taken seriously_ ", Tushar Mehta.

Senior Counsel Shyam Divan says what appears on social media should not be taken seriously.


Link : https://barandbench.com/challenge-to-section-24-of-land-acquisition-act-live-updates-from-supreme-court/


இம்மாதிரி நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் முகமாக திட்டமிட்டு செய்தி வெளியிடும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தண்டிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த கருத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பி ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும்.