2011-ல் சில சமூக விரோதிகள் தூண்டுதலால் பணம் பறிக்கும் நோக்கில் திரு.வைகுண்டராஜன் மீதும் விவி மினரல் நிறுவனத்தின் மீதும் நில அபகரிப்பு புகார் என சில கழிசடை ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பின. நேர்மையான தந்தி டிவியோ, தினத்தந்தியோ அல்லது நியூஸ் 7 ஊடகமோ இதனை வெளியிடவில்லை. மாறாக மிரட்டி பணம் பறிப்பவர்களுக்கு துணை போகும் ஊடகங்கள் மட்டுமே இதனை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியும் செய்தி வெளியிட்டும் திரு.வைகுண்டராஜன் ஏதோ ஒரு பெரிய ரவுடி ராஜ்யத்தை நடத்துவது போன்ற மாயையை மக்கள் மனதில் ஏற்படுத்தவும், அதிகாரியையும் நீதித்துறையையும் அச்சுறுத்தவும், இந்த செய்தியை உபயோகப்படுத்தினார்கள். அந்த புகார் கொடுத்தவர் தனக்கு 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசிய விபரங்களும் தனியாக உள்ளன. இதற்கிடையில் சத்திரிய குலத்தில் பிறந்த மிரட்டலுக்கு அஞ்சாத திரு.வைகுண்டராஜன் இதனை சட்டப்படியே சந்தித்தார். புகார் கொடுத்தவரின் புகார் மனு காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளராலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியாகி மாவட்ட நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி ஆனது. எனவே அவர் உயர்நீதிமன்றத்தில் 2012-லேயே மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிலுவையில் வைத்து அதன் மூலமும் பல்வேறு செய்திகளை அவ்வப்போது விபச்சார ஊடகங்களில் வெளிவரச் செய்து தங்களது அற்ப ஆசைகளை தீர்த்துக் கொண்டார்கள். இறுதியில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு அவரது புகாருக்கு முகாந்திரமே இல்லை என தனது தீர்ப்பில் சொல்லி உள்ளது. உள்நோக்கத்தோடு செயல்படும் விபச்சார ஊடகங்கள் இந்த தீர்ப்பை வேண்டும் என்றே மறைத்து விட்டார்கள். இருப்பினும் அனைவரும் தெரிவதற்காக மேற்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு கீழே பதியப்பட்டுள்ளது.
Friday, 12 October 2018
Thursday, 2 August 2018
தொழிலாளர்களிடையே தமிழக அரசு காட்டும் பாரபட்சம் நியாயமானதா?
ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு 10000 குடும்பங்கள் வேலை இழந்தார்கள். அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு தான் அந்த நிறுவனத்தால் என்னென்ன பாதிப்பு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது இயங்காமல் இருக்கும் போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பூமி மட்டத்திற்கு கீழே பதிக்கப்பட்டுள்ள ஆசிட் தொட்டியில் இருந்து ஆசிட் கசிந்து ஆசிட் மட்டம் குறைவதை கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க ஆசிட் மற்றும் இதர ரசாயனங்கள் கசிவதை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் அவற்றை வெளியே எடுக்க அனுமதி வழங்கினார்.
ஒரு மாதமாக இந்த பணி தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு சில ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=425020
https://timesofindia.indiatimes.com/city/madurai/2-sterlite-contract-workers-suffer-burns-due-to-acid-leak/articleshow/65235796.cms
https://timesofindia.indiatimes.com/city/madurai/2-sterlite-contract-workers-suffer-burns-due-to-acid-leak/articleshow/65235796.cms
அரசு அவர்களது உத்தரவால் பாதிக்கப் பட்ட ஸ்டெர்லைட் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தனியாக ஒரு இணையதளத்தை தொடங்கி சுமார் 450 நபர்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார்கள்.
அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களாக அரசின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தாது மணல் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிற்கு அரசு தனி இணைய தளம் ஏற்படுத்தாதது ஏன்? ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமா? அரசின் இந்த பாரபட்சம் நியாயமானதா? அனைவரும் சிந்திப்பீர்..
Friday, 6 July 2018
விவி டைட்டானியத்திற்கு எதிராக மீண்டும் ஒரு வீடியோ தயாரிக்கிறது ஸ்டெர்லைட்
கடந்த மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஆபத்து இல்லை. விவி டைட்டானியம் நிறுவன கழிவால் தான் ஆபத்து. அவர்கள் ஓடையில் கழிவு விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் கெட்டு விட்டது என்று சம்பூர்ண யோக்கியன் LMES ஒரு வீடியோவை வெளியிட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் இங்கிலாந்தில் இருந்து செலவு செய்த பணபலத்தால் அதனை வைரல் ஆக்கியது. ஆனால் உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவு தான் அங்கு வருகிறது. ஸ்டெர்லைட்டை ஒட்டி தான் ஓடை உள்ளது. விவி டைட்டானியம் நிறுவனத்தை ஒட்டி அல்ல என்பதை நான் முகநூலில் பதிந்தேன். புகைப்படமும் வெளியிட்டேன். மேலும் இந்த பகுதிகள் எல்லாம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் கெட்டுப் போனவை என்பதை 2011-லேயே NEERI அறிக்கை செய்துள்ளதை உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதையும் வெளியிட்டேன்.
இயற்கையும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சதி செய்து அவர்கள் பூமிக்கு அடியில் பதித்து வைத்திருந்த சல்பரிக் ஆசிட் டாங்கில் இருந்து ஆசிட் கசிவதை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து கண்டு பிடித்து அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. தற்போது டீசல் முதல் பாஸ்பிரிக் ஆசிட் வரை அனைத்தும் கசிவதை கண்டுபடித்து அவையும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி பாதி;க்கப்படுவதற்கு ஸ்டெர்லைட் நிறுவனமே காரணம் என்பதை ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் துறை அதிகாரி விளக்கி கூறினார்.
மேற்கூறிய காரணங்களால் ஸ்டெர்லைட் எதிர் பார்த்தது போல் பழியை விவி டைட்டானியம் மீது போட்டு தப்ப முடியவில்லை. பழியை வேறு நிறுவனத்தின் மீது சாட்ட வில்லை என்றால் ஸ்டெர்லைட்டிற்கு நீதிமன்றத்திலும் அனுமதி வாங்குவது கடினம் என ஸ்டெர்லைட் சட்ட வல்லுனர்கள் கைவிரித்து விட்டதால் எப்படியாவது அருகில் உள்ள டைட்டானியம் நிறுவனம் மீது இந்த பழியை சாட்ட வேண்டும். அதற்கு இன்னொரு வீடியோ வெளியிடுங்கள் என்று LMES -க்கே ஐந்து கோடி ரூபாய்க்கு மீண்டும் ஒரு பிராஜக்ட் கொடுத்துள்ளார்கள். அவர்கள் தற்போது வீடியோ எடுத்து பொய் ஆவணங்களையும் தயாரித்து வருகிறார்கள். மேலும் விவி டைட்டானியத்திற்கு எதிராக அதிகாரிகள் மட்டத்தில் வெறுப்பை உருவாக்க பத்திரிக்கை செய்தி, புகார் மனு கொடுப்பதற்கு என்று சென்னையில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு நாகரீக கொள்ளையர்களை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஸ்டெர்லைட் அமர்த்தி உள்ளது. இவர்கள் சென்னையில் இருந்து இரண்டு நபர்களை புகைப்படத்தோடு தூத்துக்குடிக்கு அனுப்பி அப்பகுதியில் இருந்து யாரையாவது புகார் கொடுக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு யாரும் ஒப்புக் கொள்ளாத நிலையில் புதுக்கோட்டையில் இருந்து அக்ரி பரமசிவன் என்ற ஒரு நபரை வைத்து கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.
ஸ்டெர்லைட் திட்டப்படி விவி டைட்டானியம் மீது பழியை மாற்றி விட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகி விடும் என்று ஸ்டெர்லைட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பார்ப்போம்… தூத்துக்குடி மக்கள் ஜெயிக்கிறார்களா.. அல்லது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கற்பூர புத்தியினரின் திட்டம் ஜெயிக்கிறதா…

Tuesday, 19 June 2018
பாவம் ஓரிடம், பழி ஓரிடமா, இது தான் கற்பூர புத்தியினரின் செயல்பாடு என்பதோ…
30 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் அமில தொட்டியில் தற்போது உற்பத்தியும் உபயோகமும் இல்லாமல் நிறுத்தி வைத்த உடன் அமிலம் கசிந்து குறைவதை கண்டு பிடித்து தற்போது அமில தொட்டியை காலி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனை ஸ்டெர்லைட் நிர்வாகமும் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளார்கள். 100 சதவீத அமிலம் கசிந்து நிலத்தடி நீர் முழுவதையும் அமில நீராக எத்தனை ஆண்டுகளாக மாற்றி இருக்கும்? இந்த அமில கசிவால் எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நீர் பாதிக்கப் பட்டு இருக்கும்? இதனை மறைத்து சில ஊடகங்களுக்கு பணத்தை கொடுத்து நான் ஸ்டெர்லைட்டை பார்த்தேன். அங்கு அதிக ஆபத்து இல்லை. பக்கத்தில் உள்ள நிறுவனங்களால் தான் அதிக ஆபத்து என்று ஒரு நபர் பேசினாரே..இது நியாயமா? இதோ அதிகாரிகள் அமில கசிவை உறுதி செய்து கொடுத்த பேட்டி..
"TUTICORIN: Efforts to clear a mammoth 1,000 tonnes of sulphuric acid from the sealed Sterlite copper plant here began on Monday, following confirmed reports that there was leak in a storage tank in which it was kept. District collector Sandeep Nanduri said that the process of safely removing it from the plant began in the afternoon and was likely to be completed by Wednesday".
For More : https://timesofindia.indiatimes.com/city/madurai/trucks-begin-to-shift-sulphuric-acid-from-sterlite/articleshow/64640452.cms
VV டைட்டானியம் கம்பெனியின் கழிவு நீர் என்று தூத்துக்குடியில் டைட்டானியம் கம்பெனியையே தெரியாத ஒரு திருநெல்வேலி நபர் பேட்டி கொடுத்து ஒரு வீடியோவை பரப்பினார்களே.. இது நியாயமா?
செய்த தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவதும், ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்கள் செய்வதும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அழகல்ல…
ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் அந்த ஓடை உள்ளது. அந்த ஓடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ;இருந்து கழிவு நீர் வந்து சேர பைப் உள்ளது. ஓடைக்கு அடுத்தாற்போல் பொது தார் சாலையும் அதன் பிறகு தான் விவி டைட்டானியம் நிறுவனமும் உள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவையும் அவர்களது ஆசிட் கசிவால் ஏற்பட்ட கழிவையும் VV டைட்டானியம் நிறுவனம் மீது திட்டமிட்டு பழி சுமத்தினார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் ஓடை உள்ளது என்பதற்கும் அந்த நிறுவனத்தில் இருந்து தான் ஓடைக்கு கழிவு நீர் வருவதற்கு பைப் உள்ளது என்பதையும் காட்டும் புகைப்படம் இதோ..
ஸ்டெர்லைட்டை நிறுத்தி மூன்று மாதத்திற்கு பின்பு கண்டுபிடிக்கப் பட்ட ஆசிட் கழிவு கடந்த பல வருடங்களாக கண்டுபிடிக்கப் படாமல் கசிந்து தூத்துக்குடி சுற்று வட்டாரம் முழுவதையுமே அமிலத்தன்மை உடைய நீராக மாற்றி இருக்குமே.. இதற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது? வழக்கம் போல் அருகில் உள்ள அப்பாவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட்டை காப்பதா?

Friday, 4 May 2018
நியூஸ் 7 தமிழின் ஒரு உன்னத பணி.
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் இடம் ஒதுக்கிய விபரம் அரசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அல்லது மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதுகாப்பாக தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டிய அரசு வாளாயிருந்தது. நேற்று மீடியாக்களில் இது பற்றிய செய்தி வந்த உடன் அவசர அவசரமாக 1000 ரூபாயும் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் தருவோம் என கூறியது. அதுவும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் போய் கேட்டால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அந்த தொகை என கூறி விட்டார்கள். நேற்று மதியம் அரசு அறிவித்த தொகையை நேற்றோ இன்றோ பெற்றுக் கொண்டு அடுத்த மாநிலத்திற்கு பயணம் செய்து நாளை பரீட்சை எழுத முடியுமா? முடியாது. அதே போல் வவுச்சரை கொடுத்து பணம் பெறுவதும் முடியாத காரியம். ஏனென்றால் ரயில் டிக்கெட்டை ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்வார்கள். எனவே முன்பதிவு செய்த டிக்கெட் அல்லாமல் மற்றவற்றிற்கு பணம் பெற முடியாது. எனவே இதில் அரசு சரியாக செயல்படவில்லை. அண்டை மாநில முதல்வர் கூட நம் மாநிலத்தோடு முல்லை பெரியாறு பிரச்சனையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பூத் அமைத்து உதவி செய்ய ஏற்பாடு செய்தார். ஏன் தமிழக அரசும் அவ்வாறு அதிகாரிகளை அனுப்பி இருக்க கூடாது? ஆனால் நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சி அவர்கள் நடத்தும் அன்புபாலம் என்ற அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை சேர்த்துக் கொண்டு நேற்று உடனடியாக செயலில் இறங்கி உள்ளது. மதுரையை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் வாகன ஏற்பாடும் தங்கும் அறை வாடகையையும் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் செலுத்தி உள்ளார்கள். அன்புபாலம் நேரடியாக எந்த பணத்தையும் பெறாமல் பணத்தை நேரடியாகவே ஹோட்டல்களுக்கே செலுத்த வைத்து விட்டு இவர்களது தன்னார்வல உறுப்பினர்களை வைத்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதிகளில் இதே போல் பூத் அமைத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தங்குவதற்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி மற்றும் போக்குவரத்து வசதியை செய்து வருகிறார்கள். ஏராளமான தமிழகத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி மேற்கண்ட இடங்களில் நியூஸ் 7 அன்புபாலத்தோடு கைகோர்த்து செயல்படுகிறார்கள் என அங்குள்ள சில நண்பர்கள் கூறினார்கள். இந்த பணி பாராட்டப்பட வேண்டியதே.. அங்குள்ள எனது நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் கீழே பதியப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு உதவுவதற்கு அரசு அலுவலர்களை அனுப்பவில்லை என்றாலும் கூட நியூஸ் 7 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த பணி அற்புதமானதே…இதே போல் எல்லோரும் பொது பணியில் இறங்கலாமே..
Wednesday, 11 April 2018
நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் சமூக பணி செய்ய வாய்ப்பு
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கிருஷணன் அர்ஜீனனுக்கு உபதேசித்ததாக வாசித்து இருப்போம். அதே போல் பலனை எதிர்பாராமல் கடமை செய்வது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி.
உள்நோக்கத்தோடு இந்த தொலைக்காட்சி மீது ஏராளமான விமர்சனங்களும் தாக்குதல்களும் பல்வேறு தரப்பில் இருந்தும் தொடுக்கப்படுகின்றன. ஆனால் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் கடந்த முறை தமிழகம் முழுவதும் கடுமையான வெள்ள பாதிப்பு வரும் போது முதன் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி கரம் நீட்டியது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி. இதில் பாராட்ட வேண்டிய அம்சம் பொது மக்கள் நன்கொடையாக கொடுத்ததை அப்படியே சொல்லி தன்னார்வலர்கள் மூலம் வினியோகித்தார்கள். அந்த பெயரை தாங்கள் செய்தது போல் விளம்பர படுத்தவில்லை. அதே போல் எவரிடம் இருந்தும் பணமாக வசூலிக்கவில்லை. பொருளாக யார் என்ன கொடுத்தாலும் அதனை அப்படியே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து வினியோகித்தார்கள்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்து விருப்பு வெறுப்பு இன்றி இளைஞர்களின் மனக்குமுறலை அப்படியே படம் பிடித்து காட்டினார்கள். இதனால் அரசின் கோபம் வரும் என்றும் நினைக்கவில்லை.
ஆனால் டெங்கு பாதிப்பு என மக்கள் பாதிக்கப்படும் போது அரசோடு கைகோர்த்து பல்வேறு மாவட்டங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் என தீவிரமாக பொது மக்கள் பாதிப்பை குறைப்பதற்கு துணை நின்றார்கள்.
தீர்வு பாலம் என்று ஒவ்வொரு வாரமும் அரசு துறைகளால் பொது மக்கள் எங்கெங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவற்றை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்த குறைகள் தீர்வதற்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்கள். இதனால் ஏராளமான ஊனமுற்றோர், நரிகுறவர் இனத்தினர் என பல்வேறு தரப்பினரும் பயன் அடைந்து உள்ளார்கள்.
அவர்களது இந்த மக்கள் சேவையை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்குவதற்கு நியூஸ் 7-ல் இருந்தே “அன்பு பாலம்” என்று ஒரு அமைப்பை உருவாக்கி சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்களும் , இளைஞிகளும் இதில் சேரலாம் என சேர்த்து வருகிறார்கள். நிபந்தனை இதற்கு கட்டணம் கிடையாது. அரசியல் கட்சி ஆதரவு என்று கிடையாது. ஆனால் எங்கேனும் பொது மக்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டால், இயற்கை பேரிடர், விபத்து போன்ற காலங்களில் இன, மத பாகுபாடு பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும். அந்த மனம் உள்ளவர்கள் இதில் சேரலாம்.
சில தினங்களுக்கு முன்பு குரங்கணி மலையேற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்கள் உடைகளை கொடுத்து மானம் காப்பாற்றியதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கீழே கொண்டு வருவதற்கும் உதவி செய்த ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உடைகள் , போர்வைகள் போன்றவற்றை வழங்கியதோடு உதவி செய்தவர்களுக்கும் உதவி கரம் நீட்டினார்கள். இதனை செய்ய வேண்டியது அரசு தானே.. நாம் ஏன் செய்ய வேண்டும் என இல்லாமல் பாராட்டியது ஒரு நல்ல முயற்சி.
தற்போதும் சேலத்தில் தண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதி இன்றி இரண்டு வருடமாக இருந்த ஒரு ஏழை சிறுவனுக்கு அன்பு பாலத்தின் மூலம் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.
எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் லாபத்தில் ஒரு சதவீதத்தை சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என சட்டம் இருந்தாலும் யாரும் எதுவும் செய்வதில்லை. ஆனால்
யாருமே சொல்லாமல் பாதிக்கப் பட்ட மக்களை தேடி பிடித்து உதவி செய்யும் நியூஸ் 7 அன்பு பாலம் செயல்பாடுகள் பாராட்ட பட வேண்டியதே!!!
நான் இதில் ஒரு தன்னார்வலராக பதிவு செய்ய உள்ளேன். உங்களுக்கும் தன்னார்வலராக பதிவு செய்ய விருப்பம் என்றால் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்யுங்களேன்.
மொபைல் எண் : 91 7708590477
மேலதிக விபரத்திற்கு https://www.facebook.com/dorai.raj.35380?lst=100006087135047%3A100024720380349%3A1523510339 என்ற முகநூலையும் பார்வையிடலாம். நண்பர்களாகவும் இணையலாம்.
ஓய்வு கிடைக்கும் போது நாமும் நம் சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குவோமே!!!!
Subscribe to:
Posts (Atom)